Archives: அக்டோபர் 2016

சிறைப்பட்டவர்களை விடுவித்தல்

ஜார்ஜியாவில், சாவன்னாவில் உள்ள வலிமை மிக்க எட்டாவது விமானப்படையின் தேசிய அருங்காட்சியகத்திற்கு நானும், என் மனைவியும் சென்றபொழுது, அங்கு ஜெர்மன் தேசத்தினரால் சிறைபிடிக்கப்பட்ட போர்க் கைதிகளின் பாசறைகளை மறுபடியும் உருவாக்கி இருந்ததைப் பார்த்தோம். அதில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த போர்க்கைதிகளின் துயரங்களை நானும், என் மனைவியும் பார்த்தபொழுது, மிகவும் அதிகமாக தொடப்பட்டோம். மார்லினின் தகப்பனார், ஜிம் வலிமைமிக்க எட்டாவது விமானப்படையில் சேவை செய்திருந்தார். இந்த “வலிமையான எட்டு” என்ற அந்த விமானப்படை, இரண்டாம் உலகப்போரின் போது அநேகமுறை ஐரோப்பாவில் பறந்து சென்றுள்ளது. அந்தப்போரில், அந்த எட்டாம் விமானப்படையைச் சேர்ந்த 47000க்கும்மேற்பட்ட வீரர்கள் காயப்பட்டார்கள். 26000க்கும் மேற்பட்ட வீரர்கள் மரித்துவிட்டார்கள். ஜிம்மும் சுடப்பட்டு போர்க்கைதியாக சிறைபிடிக்கப்பட்டார். காட்சிப் படுத்தப்பட்டவைகளின் ஊடாக நாங்கள் நடந்து சென்றபொழுது, ஜிம்மும், அவருடன் இருந்த மற்றக்கைதிகளும் விடுதலையாக்கப்பட்ட அந்த நாளில், அவர்கள் அடைந்த மட்டற்ற மகிழ்ச்சியை, ஜிம் எங்களுடன் பகிர்ந்து கொண்டதை நினைவு கூர்ந்தோம்.

ஒடுக்கப்பட்டவர்கள், சிறைப்பட்டவர்களின் விடுதலையைக் குறித்து தேவன் கரிசனை உள்ளவராக இருக்கிறார் என்று சங்கீதம் 146 அறிவிக்கின்றது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்” என்று அவரைப்பற்றி சங்கீதக்காரன் விளக்குகிறான் (வச. 7). துதித்துப் போற்றுவதற்கு இவையே காரணமாக உள்ளது. ஆனால், விடுதலைகள் எல்லாவற்றிலும் தலைசிறந்த விடுதலை, நாம் நமது குற்ற உணர்விலிருந்தும், வெட்கத்திலிருந்தும் பெறும் விடுதலையேயாகும். “ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” (யோவா. 8:36) என்று இயேசு கூறியது ஆச்சரியமில்லை.

கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நாம் நமது பாவச்சிறையிலிருந்து விடுபட்டு, மன்னிப்பினால் மட்டுமே கிடைக்கக்கூடிய, தேவன் அருளும் மகிழ்ச்சி, அன்பு, விடுதலை ஆகியவற்றை அறிந்து கொள்ளுகிறோம்.

ஒருவரும் அந்நியரல்லை!

கானாவில் நான் சிறுவனாக ஓர் ஒதுக்குப்புறமான பகுதியில் வாழ்ந்து வந்தேன். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் “உணவு வேளை, சிநேகிதர்கள் வரவேண்டாம்” என்ற முதுமொழி மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஏனென்றால் அங்கு உணவு கிடைப்பதில் மிகவும் கஷ்டமான காலமது. ஆகவே உணவு உண்ணும் வேளையில் ஒருவரது வீட்டிற்குச் செல்வது மரியாதை அற்ற செயல் என்று கருதினார்கள். அந்த முதுமொழி அயலகத்தாருக்கும், அந்நியருக்கும் பொருந்தும்.

சிறிதுகாலம் நான் பிலிப்பைன்ஸிலும் வாழ்ந்து வந்தேன். அங்கு உணவு வேளையில், முன்னறிவிப்பு எதுவுமின்றி நீங்கள் சென்றுவிட்டாலும், விருந்தளிப்பவருக்கு போதுமான அளவு உணவு இல்லாதபொழுதும், அவர்களுக்குள்ள உணவை நீங்களும் பகிர்ந்து கொள்ள கட்டாயப்படுத்துவார்கள். சில காரணங்களால் கலாச்சாரம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.

இஸ்ரவேல் மக்கள் எகிப்தை விட்டபொழுது, அவர்களது கலாச்சாரத்தை காத்துக்கொள்வதற்காக தேவன் சில சிறப்பான கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் கட்டளைகள் - தேவனுடைய கட்டளைகளாக இருந்தாலும், மனிதர்களது உள்ளத்தை ஒருக்காலும் மாற்ற இயலாது. ஆகவே மோசே, “உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள்” (உபா. 10:16) என்று கூறினார். அந்த சவாலை மோசே, இஸ்ரவேல் மக்களின் முன்வைத்தவுடன், அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த அந்நிய தேசத்தாரை அவர்கள் நடத்தி வந்த விதத்தைப்பற்றிக் கூறினார். “அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரை சிநேகிப்பீர்களாக” (உபா. 10:18–19) என்று கூறினார்.

இஸ்ரவேல் மக்கள் “தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமான” (உபா. 10:17) தேவனை சேவித்து வந்தார்கள். அவர்கள் மத்தியில் வாழ்ந்து வந்த இஸ்ரவேலரின் கலாச்சாரத்திற்கு வேறு அந்நியர்களை நேசிப்பதின் மூலம் மட்டும் தேவனோடு அவர்களுக்குள்ள உறவை வெளிக்காண்பிக்க வேண்டும்.

தேவனுடைய இந்த குணாதிசயத்தை சித்தரிக்கும் இந்தக்காரியம், இன்று நமக்கு என்ன கற்பிக்கிறது? நமது உலகில் ஒதுக்கப்பட்டவர்கள், தேவை உள்ளவர்களுக்கு நாம் தேவனுடைய அன்பை எவ்வாறு காண்பிக்க முடியும்?

தேவனின் நினைப்பூட்டுதல்கள்

எனது சிநேகிதன் பாப் ஹார்னர் “நினைப்பூட்டுவதில் தலைசிறந்தவர்” இயேசு என்று குறிப்பிடுவார். அவர் மிகவும் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நாம் மிகவும் சந்தேகப்படுகிறவர்களாகவும், மறக்கும் தன்மையுடையவர்களாகவும் இருக்கிறோம். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபொழுது, உதவிதேடி அவரிடம் வந்த மக்களின் தேவைகளை அவர் எத்தனையோ முறை சந்தித்திருந்தாலும், அவரது முதன்மைச் சீடர்களே, அவர்களது தேவைகள் சந்திக்கப்படாமல் இருந்து விடுமோ, என்று பயந்தார்கள். அநேக அற்புதங்களை அவர்கள் கண்டிருந்த பின்னும், கர்த்தர், அவர்கள் நினைவு கூர வேண்டுமென்று கருதிய முக்கியமான காரியங்களை அவர்கள் புரிந்துகொள்ள தவறி விட்டார்கள்.

அவர்கள் கலிலேயா கடலில் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, மீதியான அப்பங்களை கொண்டுவர மறந்து போனதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். “நீங்கள் யோசனை பண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவு கூராமலுமிருக்கிறீர்களா?” (மாற். 8:17–18) என்று இயேசு அவர்களிடம் கேட்டார். ஐந்து அப்பங்களைக்கொண்டு 5000 பேரை போஷித்தபின், மீதமான துணிக்கைகளை அவர்கள் 12 கூடை நிறைய சேகரித்ததை அவர்களுக்கு அவர் நினைப்பூட்டினார். ஏழு அப்பங்களைக் கொண்டு 4000 பேரை போஷித்தபின், மீதமுள்ள துணிக்கைகளால் ஏழு கூடைகளை நிரப்பினார்கள் என்று கூறி “நீங்கள் இன்னமும் உணராதிருப்பது எப்படி” (வச. 21) என்று அவர்களிடம் கூறினார்.

மக்களது சரீரப்பிரகாரமான தேவைகளை சந்தித்த செயல், அவரே உண்மையான ஜீவ அப்பம் என்பதையும், அவர்களுக்காகவும், நமக்காகவும் அவரது சரீரம் “உடைக்கப்படப்” போகிறது என்ற மிகப்பெரிய உண்மையை நமக்கு சுட்டிக் காண்பிப்பதாக உள்ளது.

கர்த்தருடைய பந்தியில் நாம் ஒவ்வொரு முறையும் அப்பத்தைப் பிட்டு, பாத்திரத்தில் பானம்பண்ணும் பொழுதெல்லாம், நம்முடைய கர்த்தரின் மகாப்பெரிய அன்பையும், அவர் நமக்கு அருளும் கிருபைகளையும் குறித்து நினைவுறுத்தப்படுகிறறோம்.

உறுதியாக பற்றிக்கொள்

சீனாவில் ஷாங்க் ஜியாஜியிலுள்ள டையமன் மலை, உலகிலுள்ள அழகான மலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்மலையின் உயர்ந்த சிகரங்களின் முழு அழகையும் நீங்கள் கண்டு களிக்க டையமன் ஷான் கேபிள் காரின் (Cable Car) மூலம் செல்ல வேண்டும். இந்த கேபிள் கார் 7455 மீட்டர் (4.5 மைல்) தூரத்திற்கு பயணிக்கிறது. அந்த கேபிள் காரில் எந்த ஒரு மின் மோட்டாரும் இல்லாமல் மிக உயரமான மலைகளை அவ்வளவு தூரம் கடந்து செல்வது என்பது மிகவும் ஆச்சரியப்படத்தக்கது. ஆனாலும் இது பிரமிக்கத்தக்க உயரமான அந்த மலைகளை பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கு மிகவும் சக்திவாய்ந்த மின்சார மோட்டாருடன், மிக வலுவான கம்பிவடத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

நமது விசுவாசப் பயணத்தில் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:14) என்று, நாமும் நமது ஓட்டத்தை எவ்வாறு வெற்றிகரமாக முடிக்க இயலும்? அந்த கேபிள் காரைப்போல நமக்கு கிறிஸ்துவுடன் கூட மிக வலுவான பிணைப்பு இருக்க வேண்டும். அதைத்தான் பவுல் “கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்” (பிலி. 4:1) என்று கூறியுள்ளார். நாமாக செயல்படக்கூடிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை. நாம் முன்னேறிச் செல்ல முழுவதுமாக கிறிஸ்துவைச் சார்ந்திருக்கிறோம். நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களைக் கடந்து செல்ல, அவர் உதவிசெய்து நம்மை பாதுகாவலாகப் பரலோகத்தில் சேர்ப்பார்.

இந்த உலகில் வாழ்ந்த இறுதி நாட்களில், அப்போஸ்தலனாகிய பவுல் “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்” (2 தீமோ. 4:7) என்று அறிவித்தார்; நீங்களும் அவ்வாறே கூற இயலும். கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள். அது போதும்.