எல்லாம் தேவனிடமிருந்து வருகிறது
என்னுடைய 18 ஆம் வயதில் எனக்கு முதல் முதலாக முழு நேர வேலை கிடைத்தது. அப்பொழுது, சேமிப்பின் ஒழுக்கத்தைக் குறித்து முக்கியமான ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். வேலை செய்து, ஒரு வருட பள்ளிப் படிப்பிற்கு தேவையான தொகையை சேமித்தேன். அச்சமயம் என் தாயாருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாயிற்று. அப்பொழுது தான் ஒன்றை உணர்ந்தேன். அதாவது என் தாயாருடைய அறுவை சிகிச்சைக்கு தேவையான பணம் என் வங்கி கணக்கில் இருந்தது.
திடீரென என்னுடைய எதிர்காலத் திட்டங்களை காட்டிலும், என் தாயாரின் மீதுள்ள அன்பே…
இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்
சார்லட்டின் (Charlotte) தனது நண்பர்கள் சமூக ஊடகத்தில், பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அஜாக்கிரதையான அல்லது இகழ்வான காரியங்களை பதிவேற்றும் பொழுது, சார்லட் அவர்களின் கருத்துகளுக்கு உடன்படமாட்டாள். ஆனால் கனிவாக எதிர்ப்பை பதிவு செய்வாள். பிறருடைய கண்ணியத்திற்கு எப்பொழுதும் மதிப்பளித்து, எப்பொழுதும் ஊக்கமான நல்வார்த்தைகளையே பேசுவாள்.
கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்த ஒரு நபரிடம், பேஸ்புக் (facebook) மூலம் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அவன் சார்லட்டின் அரிய நேர்மையையும், கண்ணியத்தையும் பாராட்டினான். காலப்போக்கில் அவனுக்குள் இருந்த பகைமை உணர்வு கரைந்தது. பின்பு…
கிருபையினால் தரப்படுத்துதல்
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய என்னுடைய மகன் ஒரு தாளை என்னிடம் காண்பித்த பொழுது, அவனுடைய நீல நிற கண்கள் உற்சாகத்தால் மின்னியது. அது அவனுடைய கணக்கு தேர்வுத்தாள். அதில் சிவப்பு நட்சத்திரம் ஒன்று குறிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவன் நூறு மதிப்பெண்கள் பெற்றிருந்தான். நாங்கள் அந்த விடைத்தாளைப் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், அத்தேர்வு நேரம் முடிந்தது என்று தன் ஆசிரியர் கூறின பொழுது தான் மூன்று கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்காததைச் சொன்னான். அதைக்கேட்டு குழம்பி, பிறகு முழு மதிப்பெண் எப்படி கிடைக்கக்கூடும் என வினவினேன். அதற்கு…
ஒரு நீர்குமிழி இடைவேளை
நானும், என்னுடைய கணவர் கார்லும் (Carl) அட்லாண்டிக் சிட்டி (Atlantic City) மர நடைபாதையில் நடந்து கொண்டிருக்கையில் எங்களை கடந்து ஓடிய ஒரு சிறுவன் எங்கள் மேல் நீர்க்குமிழிகளை பொழிந்து சென்றான். எங்களுக்கு சிரமமான அந்நாளின் மகிழ்ச்சிகரமான இலகுவான ஒரு தருணம் அது. மருத்துவமனையில் உள்ள என் கணவருடைய மைத்துனரைக் காணவும், மருத்துவரை சந்திக்க சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவருடைய சகோதரிக்கு உதவும் படியாகவும் நாங்கள் அப்பட்டணத்திற்கு வந்திருந்தோம். எங்களுடைய குடும்பத்தின் தேவைகளினால் சிறிது திணறியதால், சிறிது நேரம் ஓய்வு எடுக்கும்படியாக, கடலோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தோம்.…