செப்டம்பர், 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

Archives: செப்டம்பர் 2016

உன் ஆத்துமாவை அமரப்ண்ணுதல்

ஒரு கச்சேரியை கேட்டுக் கொண்டிருந்த பொழுது, என்னுடைய கவனம் திசைமாறி தேவைப்பட்ட ஒரு பிரச்சனைக்குரிய காரியத்திற்கு நேராய் கச்சேரியிலிருந்து வழிமாறி என் மனம் சென்றது. நல்ல வேளையாக, சிறிது நேரத்திலேயே என் உள்ளத்தின் ஆழத்திற்குள் ஒரு அழகான பாடல் கடந்து வந்த பொழுது அக்கவனச்சிதைவு விலகியது. ஒரு ஆண்கள் அகப்பெல்லா குழுவினர் (வாத்தியங்கள் இல்லாமல் பாடுபவர்கள்) “என் ஆத்துமாவே, நீ அமர்ந்திரு”, (Be Still My Soul) என்னும் பாடலை பாடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அந்த வார்த்தைகளை கேட்டவாறு, தேவனாலே மாத்திரம் கொடுக்கக்கூடிய சமாதானத்தைக்…

முக்கியத்துவம் வாய்ந்த வார்த்தைகள்

நமது அனுதின மன்னாவின் ஆசிரியராக வேலைபார்த்த ஆரம்ப நாட்களில்,  ஒவ்வொரு முறையும் மாதாந்திர தியான நூலின் அட்டையில் போடப்படும் வசனத்தை நானே தேர்வு செய்தேன். ஆனால் பின்பு, “இதினால் ஏதாவது பயன் உண்டோ?” என சிந்திக்க ஆரம்பித்தேன்.

கொஞ்சக்காலத்திற்கு பிறகு, இயேசுவை அறவே ஒதுக்கித்தள்ளிய தன் மகனுக்காக எப்படியெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெபித்து வந்தார் என்பதை ஒரு வாசகர் தன் கடிதத்திலே விவரித்திருந்தார். பின்பு அவரை சந்திக்க வந்த அவருடைய மகன், அவர்கள் மேஜையின் மேலிருந்த தியான நூலின் அட்டையிலே இருந்த வசனத்தை…

தொடரச் செய்

தொடர் ஒட்டங்களை காண எனக்குப் பிடிக்கும். அந்த விளையாட்டு ஓட்ட வீரர்களுக்கு தேவையான உடல் வலிமை, வேகம், திறன், சகிப்புத்தன்மை இவற்றை எண்ணும்பொழுது வியப்பாயிருக்கிறது. ஆனால், அவ்வோட்டத்தின் ஒரு மிக முக்கியமான தருணம் என்னுடைய விசேஷித்த கவனத்தை மட்டுமல்லாமல் கவலையையும் சேர்த்து ஆவல் கொள்ளச் செய்யும். அது, அக்கோல் அடுத்த வீரரிடம் கைமாறும் தருணமே. ஒரு நொடி தாமதமானாலோ, அல்லது கை நழுவி விழுந்தாலோ அந்த ஒட்டத்தில் தோற்றுப் போகலாம்.

ஒரு வகையில் பார்த்தால், கிறிஸ்தவர்களும், விசுவாசம் மற்றும் தேவனையும், அவருடைய வார்த்தையையும் அறிகிற…

சோர்வுற்றவர்களுக்கு தேவையான வார்த்தைகள்

முப்பது வயது நிரம்பிய சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis), தன் தகப்பனார் இறந்த சில நாட்களுக்குப் பின், 20 வருடங்களுக்கு முன் வியாதிப் படுக்கையில் இருந்து மரித்த தன் தாயாரை அப்பொழுது கவனித்துக் கொண்ட பெண்ணிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். அப்பெண் தன் தகப்பனாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அவரைப்பற்றி ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டிருந்தார். “என் அன்பிற்குரிய தாதிமார் டேவிசன் (Nurse Davison), உங்களை குறித்த ஞாபகமா? கண்டிப்பாக ஞாபகமிருக்கிறது,” என பதிலனுப்பபினார்.

ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில், தன் வீட்டில் அப்பெண்ணின்…