நமது அனுதின மன்னாவின் ஆசிரியராக வேலைபார்த்த ஆரம்ப நாட்களில், ஒவ்வொரு முறையும் மாதாந்திர தியான நூலின் அட்டையில் போடப்படும் வசனத்தை நானே தேர்வு செய்தேன். ஆனால் பின்பு, “இதினால் ஏதாவது பயன் உண்டோ?” என சிந்திக்க ஆரம்பித்தேன்.
கொஞ்சக்காலத்திற்கு பிறகு, இயேசுவை அறவே ஒதுக்கித்தள்ளிய தன் மகனுக்காக எப்படியெல்லாம் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜெபித்து வந்தார் என்பதை ஒரு வாசகர் தன் கடிதத்திலே விவரித்திருந்தார். பின்பு அவரை சந்திக்க வந்த அவருடைய மகன், அவர்கள் மேஜையின் மேலிருந்த தியான நூலின் அட்டையிலே இருந்த வசனத்தை வாசித்த பொழுது, ஆவியானவரால் உணர்த்தப்பட்டு தன்னை ஒப்புக்கொடுத்தார் என்பதையும் விவரித்திருந்தார்.
எனக்கு அந்த வசனமோ அல்லது அந்த பெண்மணியின் பெயரோ ஞாபகமில்லை. ஆனால், அன்று தேவன் எனக்கு தெள்ளத் தெளிவாக சொல்லிய செய்தியை மறக்கவே மாட்டேன். ஒரு வருடத்திற்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட வசனத்தின் மூலம் ஒரு பெண்ணின் ஜெபங்களுக்கு பதிலளிக்க தேவன் முன்குறித்திருந்தார். காலநேரத்திற்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து அவருடைய சமூகத்தை, நான் செய்யும் வேலைக்குள்ளும் அவருடைய வார்த்தைக்குள்ளும் கொண்டுவந்தார்.
சீஷனாகிய யோவான் இயேசுவை “ஜீவவார்த்தை” (1 யோவா. 1:1) என்று அழைக்கிறார். அவர் கூறியதின் அர்த்தத்தை அனைவரும் அறிந்து கொள்வதற்காக, “பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை…. உங்களுக்கு அறிவிக்கிறோம்” (வச. 2), “நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” (வச. 3) என இயேசுவைக் குறித்து எழுதியுள்ளார்.
ஒரு பக்கத்தில் வார்த்தைகளை பதிவு செய்வதில் எந்த மாயாஜாலமும் இல்லை, ஆனால் ஜீவவார்த்தையாகிய இயேசுவை நோக்கச் செய்வதால் வேதவசனங்களில் வாழ்வை மாற்றக்கூடிய வல்லமை உண்டு.