முப்பது வயது நிரம்பிய சி.எஸ். லூயிஸ் (C.S. Lewis), தன் தகப்பனார் இறந்த சில நாட்களுக்குப் பின், 20 வருடங்களுக்கு முன் வியாதிப் படுக்கையில் இருந்து மரித்த தன் தாயாரை அப்பொழுது கவனித்துக் கொண்ட பெண்ணிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். அப்பெண் தன் தகப்பனாரின் மறைவுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டு, அவரைப்பற்றி ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்டிருந்தார். “என் அன்பிற்குரிய தாதிமார் டேவிசன் (Nurse Davison), உங்களை குறித்த ஞாபகமா? கண்டிப்பாக ஞாபகமிருக்கிறது,” என பதிலனுப்பபினார்.
ஒரு இக்கட்டான காலக்கட்டத்தில், தன் வீட்டில் அப்பெண்ணின் பிரசன்னம் தனக்கும், தன் சகோதரனுக்கும், தகப்பனுக்கும் எவ்வளவு ஆறுதலளித்தது என்பதை லூயிஸ் நினைவு கூர்ந்தார். அவளுடைய கனிவான வார்த்தைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு, “பழைய நாட்களுக்குள் கடந்து சென்றது ஆறுதலளிக்கிறது. என் தாயாரோடு நீங்கள் இருந்த அந்நாட்கள், ஒரு சிறுவனாக எனக்கு, நீண்ட காலகட்டமாக தோன்றியதால் நீங்களும் எங்கள் குடும்பத்தில் ஒருவரானீர்கள்,” என்று கூறினார்.
நம் வாழ்வின் போராட்டமான காலக்கட்டங்களில், பிறரிடமிருந்து வரும் ஆறுதலான வார்த்தைகள் நமது ஆவியையும், கண்களையும் உயிர்ப்பித்து தேவனுக்கு நேராய் திருப்பும். பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஏசாயா, “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்” என்று எழுதியுள்ளார் (ஏசா. 50:4). ஆகவே, நாம் தேவனை நோக்கிப் பார்க்கும் பொழுது அவர் நமக்கு நம்பிக்கையளிக்கும் வார்த்தைகளையும், இருளிலே வெளிச்சத்தையும் அளிக்கிறார்.