உலகத்தின் தலைசிறந்த சில பட்டணங்களில் நுழையும்பொழுது, பெர்லின், பிராண்டென்பெர்க் நுழைவாயில், (Brandenburg Gate, Berlin) யோப்பா நுழைவாயில், எருசலேம் (Jaffa Gate, Jerusalem) மற்றும் லண்டன், டவுனிங் தெருவிலுள்ள வாயில்களை (Downing St., London) போன்ற நுழைவாயில்களை காணலாம். அந்த நுழைவாயில்கள் பாதுகாப்பிற்காகவோ, கொண்டாட்டங்களுக்காகவோ கட்டப்பட்டது. எதுவாயினும், அவைகளுக்குள்ள வேறுபாடு அவைகள் பட்டணத்திற்கு வெளியேவோ உள்ளேயோ இருப்பதிலிருக்கிது. சில நுழைவாயில்கள் திறந்தே இருக்கும். வேறு சில, ஒரு சிலருக்கு தவிர பொதுவாகப் பூட்டியே இருக்கும்.
தேவ சமூகத்தின் வாசல்கள் எப்பொழுதும் நமக்கு திறந்தே இருக்கிறது. நமக்கு மிகவும் பரிச்சயமான 100வது சங்கீதம் இஸ்ரவேலர்களை ஆலய வாசல்களின் வழியாய் தேவ சமூகத்திற்கு வரும்படி அழைக்கும் அழைப்பிதழாய் இருக்கிறது. அதில் “கம்பீரமான பாடல்களோடும் ஆனந்த சத்ததோடும் அவர் சந்நிதி முன் வாருங்கள்” என அவர்களுக்கு சொல்லபட்டிருந்தது (சங். 100:1, 2). பண்டைய காலத்தில் ஆனந்தமாய் உரத்த சத்ததோடு ராஜாவை வரவேற்பது அவர்கள் கலாச்சாரமாய் இருந்தது. அவ்வண்ணமாகவே பூமியனைத்தும் மகிழ்ச்சியோடு கர்த்தருக்கு ஆராதனை செய்ய வேண்டும். இந்த ஆனந்த சத்தத்திற்கு காரணம் என்னவெனில், தேவன் அவர்களுக்கு அவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தி உள்ளார் (வச. 3). ஆகவே அவர்கள் அவருடைய நன்மையையும், தலைமுறை தலைமுறையாய் தொடரும் அவருடைய மாறாத அன்பையும் நினைத்து அவர் வாசல்களில் துதியோடும், புகழ்ச்சியோடும் பிரவேசித்தார்கள் (வச. 4, 5). கர்த்தருக்குள் உள்ள அவர்களுடைய அடையாளத்தை அவர்கள் மறந்து அவரை விட்டு விலகிச் சென்றாலும் தேவன் அவர்களுக்கு உண்மை உள்ளவர்களாய் இருந்து அவருடைய சமூகத்திற்கு அவர்களை அழைக்கிறார்.
தேவனை நாம் ஆராதிப்பதற்கு நம்மை அழைக்கும்விதமாக அவருடைய சமூகத்தின் வாசல்கள் இப்பொழுதும் திறந்த வண்ணமாகவே இருக்கின்றன.