எனக்கு முன்பாக இருந்த நீச்சல் குளத்தில் சூரிய ஒளி மின்னியது. தற்செயலாக, அதிக நேரம் தண்ணீரிலிருந்த மாணவனைப் பார்த்து, “நீ சோர்வடைவது போலத் தெரிகிறது, ஆழத்திலிருக்கும் பொழுது சோர்வடைந்தால், உயிர் காக்கும் மிதவையை உபயோகி” என்று பயிற்சியாளர் கூறுவதைக் கேட்டேன்.
சில சூழ்நிலைகள், நாம் நம் மனதாலோ, சரீர பெலத்தினாலோ, நம்முடைய உணர்ச்சிகளினாலோ தாங்கிக்கொள்ள முடியாதபடி இருக்கக் கூடும். தாவீது ஒருமுறை எதிரிகளின் பயமுறுத்துதலையும், அவர்களுடைய கோபத்தின் ஆழத்தையும் எதிர்கொண்டது குறித்து விவரிக்கிறான். அவன் எதிர்கொண்ட துயர நிலையிலிருந்து தப்பிப்பது அவசியமாயிருந்தது.
இவ்வாறு அவன் உணர்வுகள் சென்ற பொழுது, கலக்க எண்ணங்களுக்கு மத்தியில் இளைப்பாற ஒரு வழியைக் கண்டான். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்” (சங். 55:22). நம்முடைய துயரங்களை அவரிடம் ஒப்புக்கொடுக்கத் துணிந்தால் அவர் நம்மை ஆதரிப்பார் என்பதை அறிந்து கொண்டான். எல்லா சூழ்நிலைகளையும் நாமே பொறுப்பெடுத்து ஏற்ற முடிவை கொண்டு வர முயல்வது மிகவும் சோர்வடையச் செய்யும். நம்முடைய வாழ்வின் எல்லாமே தேவனுடைய ஆளுகைக்குள் இருக்கிறது.
நம்முடைய சுயமுயற்சியினால் எல்லாவற்றையும் செய்ய முயல்வதை விட, அவருக்குள் இளைப்பாறக்கடவோம். சில சமயம் மிக சாதாரணமாக ஆண்டவரிடம் நம்முடைய பிரச்சனைகளைப் பார்த்துக்கொள்ள விட்டுவிடுவதின் மூலம் நாம் அமர்ந்திருக்கவும், இளைப்பாறவும், அவர் நம்மைத் தாங்குகிறவராய் இருக்கிறார் என்கிற வெளிப்பாட்டில் மகிழக்கடவோம்.