சார்லட்டின் (Charlotte) தனது நண்பர்கள் சமூக ஊடகத்தில்,  பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் அஜாக்கிரதையான அல்லது இகழ்வான காரியங்களை பதிவேற்றும் பொழுது,  சார்லட் அவர்களின் கருத்துகளுக்கு உடன்படமாட்டாள். ஆனால் கனிவாக எதிர்ப்பை பதிவு செய்வாள். பிறருடைய கண்ணியத்திற்கு எப்பொழுதும் மதிப்பளித்து,  எப்பொழுதும் ஊக்கமான நல்வார்த்தைகளையே பேசுவாள்.

கிறிஸ்தவர்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்த ஒரு நபரிடம்,  பேஸ்புக் (facebook) மூலம் சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அவன் சார்லட்டின் அரிய நேர்மையையும், கண்ணியத்தையும் பாராட்டினான். காலப்போக்கில் அவனுக்குள் இருந்த பகைமை உணர்வு கரைந்தது. பின்பு சார்லட் தடுக்கி விழுந்து மோசமான பாதிப்புக்குள்ளானாள். இப்பொழுது

வீ ட்டிலேயே முடங்க வேண்டியதானதால் மன உளைச்சலுக்கு உள்ளானாள். அச்சமயத்தில் அவளுடைய பேஸ்புக் நண்பர் மரித்து போனார். அப்பொழுது அவனுடைய சகோதரியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அது,  “(உன்னுடைய சாட்சியினாலே) தேவனுடைய முழுமையான நிலையான அன்பை அவன் இப்பொழுது அனுபவித்து கொண்டிருப்பான் என நான் அறிவேன்” என இருந்தது.

கிறிஸ்து மரிக்கப்போகும் வாரத்தில்,  பெத்தானியா ஊரைச் சேர்ந்த மரியாள், அவரை விலையேறப்பெற்ற வாசனைத் தைலத்தினால் அபிஷேகித்தாள் (யோவா. 12:3, மாற்கு 14:3). அங்கு இருந்த சிலர் அதைக்கண்டு அதிர்ச்சியுற்றனர். ஆனால் இயேசுவோ, அவளைப் போற்றினார். “இயேசு அவர்களை நோக்கி: அவள் என்னிடத்தில் நற்கிரியைச் செய்திருக்கிறாள். இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு எத்தனமாக,  என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்” என்று கூறினார் (மாற்கு 14:6-8).

“இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்.” ஆண்டவருடைய வார்த்தை நம்முடைய அழுத்தத்தை அகற்றி விடுகிறது. நம் உலகம் உடைந்து போன,  காயப்பட்ட மனிதர்களால் நிரம்பியுள்ளது. ஆனால்,  நாம் செய்ய முடியாததைக் குறித்து கவலைக் கொள்ளத் தேவையில்லை. சார்லட்,  தன்னால் இயன்றதைச் செய்தாள். ஆகவே நம்மாலும் அது கூடும். மற்றவை அவருடைய திறனான கைகளில் உள்ளது.