நம்மால் புரிந்து கொள்ள இயலாதபொழுது
அனுதினமும் எனது வேலையைச் செய்ய தொழில் நுட்பக்கருவிகளையே சார்ந்திருந்தாலும், அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கணினியை இயக்கி வார்த்தைகளின் அட்டவணையைப் (Word Document) பெற்று எழுதும் வேலையை நான் ஆரம்பிக்கிறேன். ஆனால் கணினியிலுள்ள சிலிகான் சில்லுகள் மைக்ரோசில்லுகள் (Micro Chips), கணினியில் பயன்படுத்தும் தரவுகளை நிலையாகத் தேக்கி வைக்கும் வன்தட்டுகள் (Hard disk), வை- ஃபை இணைப்புகள் அல்லது கணினியில் தோன்றும் பலவண்ணக் காட்சிகள் காட்டும் திரை (full color display) இவைகளெல்லாம் எப்படி வேலை செய்கின்றனவென்று…
உங்களது எண்ணங்களை உருவாக்குதல்
1964ல் மார்ஷல் மக்லூஹன் “ஊடகங்களே செய்தி”, என்ற வாக்கியத்தை உருவாக்கின காலத்தில், கணினி கிடையாது, கைபேசிகள் அறிவியல் கற்பனைகளாக இருந்தன, வலைத்தளம் இல்லவே இல்லை. இக்காலத்தில் நமது சிந்திக்கும் திறனாற்றல் எண்கள் மூலம் சேகரிக்கப்படும் முறையினால் (Digital) தாக்கம் அடைந்துள்ளதை மார்ஷல் முன்னமே அறிவித்து விட்டார். நிக்கலோஸ் கார் எழுதின த ஷேலோஸ் (The Shallows) என்ற புத்தகத்தில் இணையதளம் நமது மூளைக்கு என்ன செய்கிறது என்பது பற்றி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “தகவல் தொடர்பு சாதனங்கள், நம்முடைய சிந்தனைக்கு வேண்டிய கருத்துக்களைத் தருகின்றன. ஆனால்…
பயமில்லை
வேதாகமத்தில்,தேவதூதன் தோன்றும் ஒவ்வொரு சமயத்திலும் அவன் பயன்படுத்தும் முதல் வார்த்தைகள் “பயப்படாதிருங்கள்” (தானியேல் 10:12–19; மத்தேயு 28:5; வெளிப்படுத்தல் 1:17). இது ஆச்சரியமாக உள்ளது. இந்த தேவதூதர்கள் பூமியிலுள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, தூதர்கள் கூறுவதைக் கேட்கும் மனிதர்கள் பொதுவாக பயத்தினால் உணர்வற்றவர்களாய் முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் தேவன் மனிதர்களை பயப்படுத்தாத முறையில் பூமிக்கு வந்ததை லூக்கா கூறுகிறார். மனிதர்களாகிய நாம் பயப்படாமல் இருக்கத்தக்கதாக, தேவாதி தேவன் இயேசு பாலகனாக சத்திரத்தின் முன்னணையில் பிறந்தார். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பய உணர்வை உண்டாக்குமா?…
சுட்டெரிக்கும் சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து காக்கப்படல்
நான் பிரிட்டனில் வாழ்ந்து வருவதால் வெயிலின் சூட்டினால் ஏற்படும் தோல் வியாதியைப்பற்றி பொதுவாக நான் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், இங்கு சூரியன் மிக கடுமையான மேகத்தால் முழுமையாக மூடப்பட்டிருக்கும். சமீபகாலத்தில் நான் ஸ்பெயின் நாட்டில் சில நாட்கள் கழிக்க வேண்டியதிருந்தது. எனது தோல் வெளிறிய நிறத்தில் இருந்ததால், குடையின் நிழலுக்குள் ஓடி ஒளியாமல் பத்து நிமிடங்களுக்கு மட்டும்தான் என்னால் சூரிய ஒளியில் இருக்க முடிந்ததை விரைவில் உணர்ந்தேன்.
மத்திய தரைக்கடலின் சுட்டெரிக்கும் சூரிய கதிரின் தாக்கத்தை நான் எண்ணினபொழுது தேவன் அவரது மக்களின் வலது பக்கத்தில்…