வேதாகமத்தில்,தேவதூதன் தோன்றும் ஒவ்வொரு சமயத்திலும் அவன் பயன்படுத்தும் முதல் வார்த்தைகள் “பயப்படாதிருங்கள்” (தானியேல் 10:12–19; மத்தேயு 28:5; வெளிப்படுத்தல் 1:17). இது ஆச்சரியமாக உள்ளது. இந்த தேவதூதர்கள் பூமியிலுள்ள மனிதர்களோடு தொடர்பு கொள்ளும் பொழுது, தூதர்கள் கூறுவதைக் கேட்கும் மனிதர்கள் பொதுவாக பயத்தினால் உணர்வற்றவர்களாய் முகங்குப்புற விழுகிறார்கள். ஆனால் தேவன் மனிதர்களை பயப்படுத்தாத முறையில் பூமிக்கு வந்ததை லூக்கா கூறுகிறார். மனிதர்களாகிய நாம் பயப்படாமல் இருக்கத்தக்கதாக, தேவாதி தேவன் இயேசு பாலகனாக சத்திரத்தின் முன்னணையில் பிறந்தார். புதிதாகப் பிறந்த பச்சிளங்குழந்தை பய உணர்வை உண்டாக்குமா?

குழப்பமடைந்த, நம்பிக்கையற்ற இயேசுவின் எதிராளிகள், அவர் இவ்வுலகில் பணி செய்த காலம் முழுவதிலும் குற்றம் கண்டுபிடிக்க அவரைப்பின் தொடர்ந்தார்கள். பெத்லகேமில் பிறந்த ஒரு குழந்தை, ஒரு தச்சனின் மகன், தேவனிடமிருந்து வந்த மேசியாவாக எப்படி இருக்க முடியும்? ஆனால் வயல்வெளியில் இருந்த ஒரு கூட்ட மேய்ப்பர்களுக்கு அவர் யார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர்கள் அந்த நற்செய்தியை வானதூதர்கள் பாடின துதி கீதத்தின் மூலமாக நேரடியாகக் கேட்டார்கள் (2:8–14).

தேவன் ஏன் மானிடனானார்? வேதாகமம் இதற்கு பல காரணங்களைக் கூறுகிறது. சில, இறையியல் பற்றியவை, சில, நடைமுறை உண்மைகள். ஆனால் 12 வயது வாலிபனாக தேவாலயத்திலிருந்த போதகர்களின் மத்தியில் பரலோக ராஜ்ஜியத்திற்கு அடுத்த காரியங்களைப் பற்றி இயேசு பேசினது, நமக்கு ஒரு விடையைக் கொடுக்கிறது (வச. 46). முதல் முதலாக சாதாரண மக்கள் தேவனோடு கூட ஓர் உரையாடலையும் விவாதத்தையும் நடத்த முடிந்ததை கண்ணால் பார்க்க முடிகிறது. இயேசு, அவருடைய பெற்றோர், ஒரு ரபி, ஒரு எளிய விதவை ஆகியோருடன் பயப்படாதிருங்கள் என்று அறிவிக்காமல் சாதாரணமாக அவரால் பேச முடிந்தது.

இயேசுவின் மூலமாக தேவன் நமக்கு நெருக்கமாக வருகிறார்.