எல்லாக் காலத்திலும் மிகச்சிறந்த விளையாட்டுப் பொருட்களாகக் கருதப்பட்டவை எவை? ஒரு குச்சி, ஒரு பெட்டி, நூல், அட்டையினாலான ஒரு குழாய், தூசி, மண் இவைகள் தான் என்று யோனத்தான் H. லியு கருத்து தெரிவித்துள்ளார். இவைகள் அனைத்துமே எளிதாகக் கிடைக்கக் கூடியவைகள், பல்வேறு பயன் கொண்டவைகள், எல்லா வயதினருக்கும் தகுதியானவைகள், விலை குறைவானவைகள், மேலும் கற்பனா சக்தியினால் சிறந்த முறையில் பயன்படுத்தக் கூடியவைகள். இவைகள் செயல்பட பாட்டரிகள் தேவை இல்லை.

கற்பனா சக்தி நமது வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆகவே, எபேசுவில் இயேசுவை பின்பற்றுகிறவர்களுக்காக பவுல் அப்போஸ்தலன் பண்ணின ஜெபத்தில் அதுகுறித்து அவர் கூறினது வழக்கத்திற்கு மாறானதில்லை (எபே. 3:14–21). அவர்களை தேவனுடைய ஆவியினால் வல்லமையாக பெலப்படுத்த வேண்டுமென்று தேவனிடம் விண்ணப்பம் பண்ணின பின்பு (வச.16), கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அந்த அன்பினை அவர்கள் அனுபவிக்க வேண்டுமென்று பவுல் வேண்டிக் கொண்டார் (வச.17–19). முடிவில் “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள் கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய தேவனுக்கு” (எபே. 3:20) மகிமையாய்ச் செலுத்தினார்.

பொதுவாக நமது அனுபவம் நமது ஜெபங்களை கட்டுப்படுத்துகிறது. நாம் வேறுபட்டுள்ளோம் என்று புரிந்து கொள்ள இயலாத நிலைமை – நமக்கு அழிவைக்கொண்டு வரத்தக்க பழக்கங்கள் உடைக்கப்படாத நிலைமை; மாற்றங்கள் கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ளாத நீணடகால மனப்பான்மை. காலங்கள் கடக்கும்பொழுது, சில காரியங்களை மாற்றவே இயலாது என்று உணர ஆரம்பிக்கிறோம். ஆனால் பவுல் அது உண்மையல்ல என்று கூறுகிறார்.

நம்மில் செயல்படும் தேவனுடைய மகாப்பெரிய வல்லமையினால், நாம் கேட்பதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக கிரியை செய்ய அவர் வல்லவராக இருக்கிறார்.