வெளிப்படையான பலவீனம்
என் தோள்பட்டையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைக்குப்பின் பல வாரங்களாகியும் தைரியமற்ற நிலையில் பயந்து கொண்டே இருந்தேன். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கையைத் தாங்கிப் பிடிக்கும் தூக்கை (ஸ்லிங்) நான் உபயோகித்ததால் அது எனக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சை வைத்தியரும், கைக்கு பயிற்சி கொடுக்கும் வைத்தியரும் ஸ்லிங்கை நான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினர். “காயம் குணமடைந்து வரும் நிலையில் ஸ்லிங் உபயோகிப்பது சுகமடைய உதவாது. அது உங்கள் பலவீனத்தை வெளிக்காட்டவே உதவும்.” என்று அவர்கள் தந்த குறிப்பில்…
தேவன் பயன்படுத்தும் உப்புத்தாள் (சாண்ட் பேப்பர்)
என் சிநேகிதி கூறிய வார்த்தை என்னைக் கொட்டியது போலிருந்தது. என்னுடைய திடமான கருத்தைக் குறித்து அவளுடைய குத்துவது போன்ற விமரிசனத்தை, மீண்டும், மீண்டும் என் மனம் அசைபோட்டு போராடிக் கொண்டிருந்ததை நிறுத்தி, தூங்குவதற்கு முயற்சித்தேன். தேவஞானத்தையும், சமாதானத்தையும் தரும்படி படுத்துக்கொண்டே ஜெபித்தேன். பல வாரங்களாகியும் அக்காரியம் என்னை உறுத்திக்கொண்டே இருந்ததால்,“நான் மிகவும் புண்பட்டிருக்கிறேன். தேவனே, நான் எந்தக் காரியத்தை மாற்றிக்கொள்ள வேண்டும், அவள் கூறுவது எவ்விதத்தில் சரி என்று எனக்குக் காண்பியும்” என்று ஜெபித்தேன்.
என் வாழ்க்கையில் என் சிநேகிதி தேவனின் உப்புத்தாள் போன்று…
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என்பது ஓர் தண்டனையை அனுபவிப்பது போன்ற கடுமையானதொன்றாகும். போட்டியாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மதிய உணவு இடைவெளி, மாலை சிற்றுண்டி இடைவெளி தவிர மற்ற சமயங்களிளெல்லாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் கூட போட்டி நடைபெறும். இது சகிப்புத்தன்மைக்கும், திறமைக்குமான ஓர் சோதனையாகும்.
இதே காரணங்களுக்காக நம்முடைய வாழ்க்கையிலும் சில சமயங்களில் கடுமையான சோதனைகளை நாம் கடந்துவர நேரிடுகிறது. சோதனைகள் முடிவில்லாமல் தொடர்வதாகவும் உணர்கிறோம். நீண்ட காலமாக…
தவறான லாடம்
200 ஆண்டுகளுக்கு முன் நெப்போலியன் ரஷ்யப் போரில் தோற்றுப்போனதற்கு ரஷ்யக் கடுங்குளிரே காரணம் என்று கருதப்படுகிறது. ஆனால் தோல்விக்கு மிக முக்கிய காரணம் என்னவெனில் போர் குதிரைகள் அனைத்தும் கோடை காலத்திற்கான லாடங்ளை அணிந்திருந்தது தான் காரணம். குளிர் காலம் வந்தபொழுது, போர் வீரர்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஏற்றியுள்ள பாரமான வண்டிகளை பனி அடர்ந்த சாலைகளில் இழுத்துச்செல்லும்பொழுது, வழுக்கி விழுந்து குதிரைகள் மாண்டு போயின. இவ்வாறு தொடர்ந்து நெப்போலியனால் உணவு போன்ற அத்தியாவசியமான பொருட்களை 400,000 போர் வீரர்களைக்கொண்ட தன் வலிமைமிக்க படைக்கு…
பயத்திலிருந்து விடுதலை
என் உள்ளத்திற்குள் பயம் என்னை அறியாமல் இரகசியமாக நுழைந்து விடுகிறது. நீ உதவியற்றவன், நம்பிக்கையற்றவன் என்ற நிலையையும் உண்டாக்கி விடுகிறது. என் சமாதானத்தையும், மனதை ஒருமுகப்படுத்தி சிந்திப்பதையும் களவாடி விடுகிறது. நான் எதற்காகப் பயப்படுகிறேன்? என் குடும்பத்திற்காகவும், எனக்கு அருமையானவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும் மிகவும் கரிசனை கொள்கிறேன். பணியை இழக்க நேரிடும்பொழுதும் உறவுகளில் முறிவு ஏற்படும்பொழுதும் திகில் அடைகிறேன். பயத்தை என் உள்ளத்திற்குள்ளேயே பூட்டி வைத்துக்கொள்வதால் மனம் எதையும் நம்புவதற்கான ஓர் மனப்பக்குவத்தை இழந்து விடுகிறது.
பயங்களும், கவலைகளும் இவ்வாறு நம்மைத் தாக்கும்பொழுது சங்கீதம்…