மனித இன ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு குக்கிராமத்தில் பல மாதங்கள் ஆராய்ச்சிக்குப்பின் தன் பணியை முடித்தவராய் தன் அனுபவத்தைக் கூறுகிறார். தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்வதற்காக விமான நிலையம் செல்ல, ஓர் வாகனத்திற்காகக் காத்துக்கொண்டிருக்கும் பொழுது, நேரம் போவதற்காக சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு ஒன்றை நடத்த எண்ணினார். ஒரு மரத்திற்கருகாமையில் ஓர் பழக்கூடையையும், மிட்டாய்களையும் வைத்துவிட்டு அதை எடுக்க பிள்ளைகளிடம் ஓட்டப்பந்தயம் ஒன்றை நடத்த திட்டமிட்டார். அவர்கள் ஓடுவதற்குரிய சைகையைக் காட்டியபொழுது முடிவு கோட்டை அடைய ஒருவரும் போட்டி, போட்டுக்கொண்டு ஓட முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக பிள்ளைகள் அனைவரும் கைகோர்த்துக்கொண்டு அம்மரத்தை நோக்கி ஓடினார்கள்.

பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக ஒவ்வொருவரும் தனித்தனியே ஓடாமல் ஏன் அனைவரும் சேர்ந்து ஓடினீர்கள் என்று கேட்டபொழுது “மற்றவர்கள் எல்லோரும் கவலைப்படும்பொழுது எங்களில் ஒருவர் மாத்திரம் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” என்று ஒரு சிறு பெண் பதிலுரைத்தாள். ஏனென்றால் அந்த சிறுபிள்ளைகள் ஒருவருக்கொருவர் கரிசனை உள்ளவர்களாக இருந்தார்கள். கூடையிலிருந்த பழங்கள், மிட்டாய்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்கள்.

மோசேயின் நியாயப்பிரமாணங்களை பல ஆண்டுகள் கற்றிருந்தபின், தேவனுடைய பிரமாணங்கள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து இரத்தினச் சுருக்கமாக “உன்னிடத்தில் நீ அன்பு கூருவதுபோல பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக” என்று கூறுவதில் அடங்கும் என்று பவுல் அப்போஸ்தலர் கூறுகிறார் (கலா. 5:14; ரோம. 13:9ஐயும் பார்க்கவும்). ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க, ஆறுதல்படுத்த கரிசனை கொள்ள மாத்திரம் அல்லாது அது கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய ஓர் உந்துதலையும் கொடுக்கிறது என்று பவுல் கண்டறிந்தார். அவர் நம்மீது கரிசனை கொள்வதால், நாம் ஒருவருக்கொருவர் கரிசனை கொள்கிறோம்.