உங்களுக்கு நோக்கமுண்டு
மேற்கு டெக்ஸாஸில் ஓர் உஷ்ணமான நாளில் ஓர் பெண் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் விளக்கு ஸ்தம்பம் அருகில் ஒரு எழுதப்பட்ட வாசகத்தைப் பிடித்துக்கொண்டு நிற்பதை என் மருமகள் வானியா பார்த்தாள். வாகனத்தை அவள் அருகாமையில் ஓட்டிச்சென்று, அதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசிக்க முயற்சித்தாள். தனக்குள் அதில் ஆகாரம் அல்லது பணஉதவி கேட்டு எழுதியிருப்பாள் என்று எண்ணிக்கொண்டாள். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். அதில் “உனக்கு நோக்கம் உண்டு” என்றிருந்தது.
தேவன் நம் ஒவ்வொருவரையும் ஓர் குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் படைத்திருக்கிறார். அதில்…
சோர்ந்து போகிறவனுக்கு பெலன்
சூரிய ஒளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல - எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற…
தேவனே உதவி செய்யும்!
என் சிநேகிதி தான் தாயாகப்போவதை அறிவித்தபொழுது நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து குழந்தை பிறக்கும்வரை உள்ள நாட்களை எண்ணினோம். பிரசவத்தின் பொழுது குழந்தைக்கு மூளையில் காயம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டது. என் இதயம் நொறுங்கியது. எப்படி ஜெபிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் நான் தேவனிடம் ஜெபிக்க வேண்டும் என்பதே. அவர் நமது பிதா; நாம் அவரை நோக்கிக் கூப்பிடும்பொழுது அவர் கேட்கிறார்.
தேவன் அற்புதங்களைச் செய்வதில் வல்லவர் என்பது எனக்குத் தெரியும். யவீருவின் மகளுக்கு ஜீவனை மீட்டுத்தந்தார் (லூக். 8:49–55).…
சாதாரணக் கதை அல்ல
பழைய ஏற்பாட்டின் பிரமாணங்கள் குழப்பமற்ற நிலையில் தெளிவாகக் காணப்படுகிறது. கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள். கர்த்தருக்கு கீழ்ப்படியாவிட்டால் கஷ்டங்கள் நேரிடும். இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓர் சத்தியம். ஆனால் கடைப்பிடிப்பதற்கு இது அவ்வளவு எளிதானதா?
ஆசா இராஜாவின் வாழ்க்கை இதற்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அந்நிய தேவர்களை வணங்குவதிலிருந்து மக்களைத் தேவனிடம் திருப்பினான். அவன் இராஜ்ஜியபாரம் செழித்தோங்கியது (2 நாளா. 15:1–19). ஆனால், அவனுடைய பிந்தைய ஆட்சி காலத்தில் தேவனைச் சார்ந்திராமல் தன்னையே சார்ந்து வாழ்ந்தான் (16:2–7). எனவே யுத்தங்களும், வியாதிகளும் அவன் பிந்தைய வாழ்க்கையைப்…