Archives: ஜூன் 2016

அதிக நன்மையாயிருக்கும்

ஓர் சிறுவனின் வீட்டிற்கு வெளியே அபாயச் சங்கு ஒலித்தது. பழக்கமில்லாத அந்த சத்தத்தைக் கேட்ட அவன் அது என்ன சத்தம் என்று தன் தாயிடம் கேட்டான். ஆபத்தான ஓர் புயல் வருவதை மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கையாய் இருப்பதற்காக ஊதப்படுகிறது என்று அவனுக்கு அவன் தாய் விவரித்தாள். மக்கள் ஓடி ஒளிந்துகொள்ளாவிட்டால் அந்தப் புயலின் தாக்கத்தால் மடிந்து போவார்கள் என்றாள். “அம்மா அது என்ன மிக மோசமான காரியமா? நாம் மரித்துப்போனால் இயேசுவை சந்திப்போமல்லவா?” என்று கேட்டான்.

சிறு பிள்ளைகள் மரித்துப்போவது என்றால் என்ன…

இதை பிரசித்தம் பண்ணு!

என் வாழ்க்கையில் 1975ம் ஆண்டு மிக முக்கியமான ஓர் காரியம் நடந்தது. நான் என் சிநேகிதன் பிரான்சிசை சந்தித்து என் தனிப்பட்ட பல காரியங்களைப் பகிர்ந்து கொண்டு, எனக்கு நடந்ததைக் கூற விரும்பினேன். அவன் தன் வீட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியே கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். ஆனால் நான் அவனை சற்று தாமதித்துப்போகக் கூறினேன். அவன் என்னிடம் பேச ஆரம்பித்ததிலிருந்து நான் ஏதோ முக்கியமான காரியத்தை அவரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை உணர்ந்து கொண்டு,“என்ன காரியம்”? என்று கேட்டான். நான் மிகவும் அமைதலாக…

புதியதாக வனைய நொறுக்கப்படுதல்

இரண்டாவது உலகப்போரின் பொழுது என் தந்தை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இராணுவத்தில் தென் பசிபிக் பகுதியில் பணியாற்றினார். அக்காலத்தில் என் தந்தை சமயக் கோட்பாடுகளை வெறுத்து,“நான் நடப்பதற்கு ஊன்றுகோல் தேவையில்லை” என்று கூறுவார். ஆனால் ஆவிக்குரிய காரியங்களில் அசைக்க முடியாத நம்பிக்கையை ஓர் நாளில் பெற்றுக்கொண்டார். மூன்றாவது குழந்தையை பெற்றெடுக்க என் தாய் பிரசவ வார்டுக்குள் சென்று விட்டார். புதிதாகப் பிறக்கப்போகிற ஓர் தம்பியையோ அல்லது தங்கையையோ சீக்கிரம் பார்க்கப் போகிற உணர்வுகளுடன் நானும் என் சகோதரனும் படுக்கைக்குச் சென்றோம். மறுநாள் காலை படுக்கை…

இன்றைய வேதாகம பகுதி

ரோமப் பேரரசின் மகிமை, இயேசுவின் பிறப்பிற்கு ஓர் விலையேறப்பெற்ற வழியை வகுத்துத் தந்தது. கி.மு. 27ம் ஆண்டில் ரோமின் முதலாவது பேரரசரான அகுஸ்து ராயன் 200 ஆண்டு காலம் நடந்த உள்நாட்டுப் போருக்கு ஓர் முடிவு கட்டி, அருகாமையில் சிதைவுண்ட பகுதிகளில், பண்டைய சிலைகளையும், கோயில்களையும், அரங்க சாலைகளையும், அரசாங்கக் கட்டிடங்களையும் உருவாக்கினான். ரோம வரலாற்றாசிரியர் பிளினி மூத்தவர் கூற்றுப்படி,“அகுஸ்து ராயன் தீர்மானித்த கட்டிடங்கள் இதுவரை உலகம் கண்டிராத அளவிற்கு அழகிய தோற்றமளிக்கின்றன.”

அவ்வாறு அந்த நகரமும், பேரரசும் அழகுடன் அழியா நகரமாகக் காணப்பட்டாலும்,…