ரோமப் பேரரசின் மகிமை, இயேசுவின் பிறப்பிற்கு ஓர் விலையேறப்பெற்ற வழியை வகுத்துத் தந்தது. கி.மு. 27ம் ஆண்டில் ரோமின் முதலாவது பேரரசரான அகுஸ்து ராயன் 200 ஆண்டு காலம் நடந்த உள்நாட்டுப் போருக்கு ஓர் முடிவு கட்டி, அருகாமையில் சிதைவுண்ட பகுதிகளில், பண்டைய சிலைகளையும், கோயில்களையும், அரங்க சாலைகளையும், அரசாங்கக் கட்டிடங்களையும் உருவாக்கினான். ரோம வரலாற்றாசிரியர் பிளினி மூத்தவர் கூற்றுப்படி,“அகுஸ்து ராயன் தீர்மானித்த கட்டிடங்கள் இதுவரை உலகம் கண்டிராத அளவிற்கு அழகிய தோற்றமளிக்கின்றன.”
அவ்வாறு அந்த நகரமும், பேரரசும் அழகுடன் அழியா நகரமாகக் காணப்பட்டாலும், ரோம் வீழ்ச்சியுறும்வரை அங்கு மிருகத்தனமான கொடூரச் செயல்கள் நடந்தது, வரலாற்றில் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான அடிமைகளும், வெளிநாட்டவரும், புரட்சியாளர்களும், இராணுவத்திலிருந்து தப்பி ஓடிவந்தவர்களும், ரோம அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை அச்சுறுத்தும் வண்ணம், சாலை ஓரத்திலுள்ள மரத்தாலாகிய சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
இயேசு ரோமச் சிலுவையில் மரித்தது ஒரு நித்திய மகிமையை வெளிப்படுத்தியது. வேடிக்கை என்னவென்றால், ரோமின் பெருமை என்று கருதப்பட்ட அழியா மகிமை உள்ள அந்நாடு நிமிடத்தில் மறையும் சூரிய அஸ்தமனத்தைப் போல் மறைந்தது!
அனைவர் மத்தியிலும் நிந்தையிலும், அவமானத்திலும், சிலுவையின் சோதனையின் மத்தியிலும், அன்பின் நித்திய மகிமையின்மூலம், நம் தேவனுடைய இராஜ்யத்தை பெற்றுக்கொள்வோம் என்பதை யார் கற்பனை செய்து பார்த்திருக்க இயலும்?
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும், ஐசுவரியத்தையும், ஞானத்தையும், பெலத்தையும், கனத்தையும், மகிமையையும், ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார்” என்று வானமும், பூமியும் ஓர் நாளில் துதித்துப் பாடும் என்று யார் சொல்லியிருக்கக்கூடும்! (வெளி. 5:12).