வளருவதற்கு ஏற்ற தருணம்
டெப்பியின் புதிய வீட்டின் சமையலறையில் இருண்ட ஒரு மூலையில் யாராலும் கவனிக்கப்படாத ஒரு செடியைக் கண்டுபிடித்தாள். தூசுபடிந்த கிழிந்து அதன் இலைகளைப் பார்த்தபொழுது, அச்செடி மாத் ஆர்க்கிட் வகையைச் சேர்ந்தது போல இருந்தது. புதிய பூக்கும் தண்டு, அச்செடியில் வளர்ந்தால் அச்செடி பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்குமென்று அவள் கற்பனை பண்ணிப் பார்த்தாள். அந்தச் செடியை ஜன்னலின் அருகில் கொண்டு போய் வைத்து, அதின் காய்ந்த இலைகளெல்லாம் எடுத்துப்போட்டு, அச்செடிக்கு தண்ணீர் ஊற்றி அதற்கு வேண்டிய உரத்தை வாங்கிப்போட்டாள். வாரா வாரம் அச்செடியை கண்காணித்து…
அவர் நல்லவரா?
‘தேவன் நல்லவர் என்று நான் எண்ணவில்லை’ என்று என் சிநேகிதி என்னிடம் கூறினாள். சில கடினமான பிரச்சனைகளுக்காக அநேக ஆண்டுகள் அவள் தொடர்ந்து ஜெபம்பண்ணி வந்தும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. தேவனுடைய அமைதியைக் குறித்து, அவளது கோபமும் மனக்கசப்பும் அதிகரித்தது. அவளை நான் நன்கு அறிந்திருந்தபடியினால் அவளது உள்ளத்தின் ஆழத்தில் தேவன் நல்லவர் என்பதை அவள் விசுவாசிக்கிறாள் என்பதை உணர்ந்தேன். ஆனால், அவளது உள்ளத்தில் உள்ள நீங்கா வேதனையும், அதைக்குறித்து தேவனுடைய கரிசனையற்ற தன்மையும் அவளுக்குச் சந்தேகத்தை உண்டாக்கின. அவளது வருத்தத்தை தாங்குவதைவிட, தேவன்மேல்…
எப்பொழுதும் தேவனுடைய கண்காணிப்பில் இருக்கிறோம்
அனுபவம் மிகுந்த செய்தி தொகுப்பாளரான ஸ்காட் பெல்லி, அவரது பணியின் நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது, ஒரு சிற்றலை ரேடியோ, காமெரா உடைக்க இயலாத கைப்பெட்டி, மடிக்கணினி, கைபேசி மேலும் அவசரகாலத்தில் எவ்விடத்தில் இருந்தாலும் அவரது இருப்பிடத்தை அறிவிக்கக்கூடிய ரேடியோ அலைகளை பரப்பும் கருவி ஆகியவைகள் இல்லாமல் எந்த ஒரு பயணத்தையும் மேற்கொள்ள மாட்டார். “இந்த ரேடியோ அலைகளை பரப்பும் கருவியின் அன்டனாவை இழுத்துவிட்டு, இரண்டு பொத்தான்களை அழுத்தினால் தேசியகடல் சார்ந்த, வளி மண்டலம் சார்ந்த காரியங்களை கவனிக்கும் நிர்வாகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையோடு இணைக்கப்பட்டுள்ள செயற்கை…
இளைப்பாறிக் கொண்டும், காத்துக்கொண்டும் இருத்தல்
இயேசு பயணத்தினால் களைப்படைந்தவராய் யாக்கோபினுடைய கிணற்றின் அருகே ஓய்வு எடுக்க அமர்ந்தார். அவருடைய சீஷர்கள் போஜன பதார்த்தங்களை கொள்ளும்படி சீகார் என்ற ஊருக்குள்ளே சென்றிருந்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள அந்த கிணற்றிற்கு வந்தாள்… அவளது மேசியாவைக் கண்டாள். அந்த ஸ்திரீ உடனே ஊருக்குள்ளே போய் “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்” (யோவா. 4:29) என்று கூறினதாக அந்த நிகழ்ச்சி நமக்குக் கூறுகிறது.
அந்த சீஷர்கள் போஜன பதார்த்தத்தை வாங்கி வந்தார்கள். போஜனம் பண்ணும்படி…