Archives: மே 2016

துடுப்பு வலித்து வீட்டை அடைதல்

C.S. லூயிஸ் எழுதியுள்ள “கிரானிக்கில்ஸ் ஆப் நார்னியா” என்ற தொடரில் ரீப்பிசீப் என்ற பேசக்கூடிய சிறிய நெஞ்சுறுதி மிக்க எலியை எனக்கு மிகவும் பிடிக்கும். கிறிஸ்துவுக்கு அடையாளமான வலிமைமிக்க அஸ்லான் என்ற சிங்கத்தோடு சேர்வதற்கு கிழக்கு எல்லையை அடைய ரீப்பிசீப் தீர்மானித்தது. “என்னால் இயலும்பொழுது டான் டிரீடரில் கிழக்கே நோக்கிப் பயணிக்கிறேன். டான் டிரீடரின் மூலம் என் பயணத்தைத் தொடர இயலாமல் போய்விட்டால் எனது சிறிய படகின்மூலம் கிழக்கே செல்லுவேன். அதுவும் நீரில் மூழ்கிவிட்டால் எனது நான்கு பாதங்களாலும் துடுப்பு வலித்து கிழக்கே செல்லுவேன்.…

தேவன் வசிக்கும் இடம்

ஜேம்ஸ் ஒகிலிதோர்ப் (1696–1785) ஒரு பிரிட்டிஷ் தளபதியாகவும், பார்லிமென்டின் ஒரு அங்கத்தினராகவும் இருந்தார். ஒரு மிகப்பெரிய மாநகரத்தை உண்டாக்க வேண்டுமென்று ஒரு தொலைநோக்குத் திட்டம் உடையவராக இருந்தார். வடஅமெரிக்காவில், ஜார்ஜியா மாநிலத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டபொழுது, அவரது தொலைநோக்கு திட்டத்தின்படி சாவன்னா நகரத்தை உருவாக்கினார். அநேக சதுக்கங்களை வடிவமைத்து, ஒவ்வொரு சதுக்கத்திலும் பசுமையான இடங்கள், ஆலயங்கள், பெரிய கடைகள் இவைகளுக்கான இடங்களைத் தெளிவாகத் திட்டம் பண்ணிவிட்டு, மீதமுள்ள இடத்தை வீடுகள் கட்டத்தக்கதாக வடிவமைத்தார். ஒகிலிதோர்ப் தொலைநோக்குத் திட்டத்தில் வடிவமைக்கப்பட்ட அந்த நகரம்தான்…

காரமான மிளகாய்

ஆப்பிரிக்காவிலுள்ள சகாரா வெளியில் நான் சிறுவனாக வாழ்ந்து வந்த காலத்தில், “நாங்கள் படுக்கைக்கு போகுமுன்பு எங்களது தாயார் எங்களுக்கு காரமான மிளகாயைக் கொடுப்பார்கள். எங்களது வாயில் ஏற்படும் காரத்தன்மையை குறைப்பதற்காக, அதிக அளவு தண்ணீர் குடிப்போம். அப்பொழுது எங்களது வயிறு நிரம்பின உணர்வைப் பெறுவோம். ஆனால், அது உண்மையில் எங்களை திருப்திபடுத்தவில்லை” என்று சாமுவேல் வறுமையினால் கஷ்டப்பட்ட நாட்களை நினைவு கூர்ந்தான்.

அரசாங்கம் கொடுத்த கடுமையான தொல்லைகளினால் சாமுவேலின் தகப்பனார் அவரது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு ஓடி விட்டார். சாமுவேலின் தாயார் தனிமையாக இருந்து…

மிகச்சிறந்த இலக்கியம்

மிகச்சிறந்த இலக்கியம் என்றால் என்னென்ன தன்மைகளை உடையதாக இருக்க வேண்டும் என்று விளக்கின ஒரு கட்டுரையை வாசித்தேன். சிறந்த இலக்கியம் “உங்களை மாற்றும். அதை வாசித்து முடித்தவுடன் நீங்கள் வேறு மனிதராக மாறி இருப்பீர்கள்” என்று அதன் ஆசிரியர் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்தக் கூற்றின்படி வேதாகமம் மிகச்சிறந்த இலக்கியமாக இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமத்தை வாசிப்பது நம்மை சிறந்த மனிதராக வாழ நமக்கு சவால் விடுவதாக உள்ளது. வேதாகமத்திலுள்ள வீரர்கள், கதைகள் நம்மை தைரியமுள்ளவர்களாகவும், விடாமுயற்சி உள்ளவர்களாகவும் இருக்கத் தூண்டுகின்றன. ஞானத்தைப் போதிக்கும்…

திருப்திப்படுத்தும் அப்பம்

நான் ஆரம்பப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுது, கர்த்தருடைய ஜெபத்தை மனப்பாடமாக சொல்லக் கற்றுக்கொண்டேன். “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்” (மத். 6:11) என்ற வரியைக் கூறும்பொழுது, எங்களுடைய வீட்டில் என்றைக்கோ ஒரு நாள் தான் கிடைக்கக்கூடிய ரொட்டியை என்னால் நினைவு கூராமல் இருக்க இயலவில்லை. எங்களது தகப்பனார் நகரத்திற்கு சென்று திரும்பும் பொழுது மட்டும்தான் எங்களுக்கு ரொட்டி கிடைக்கும். ஆகவே அனுதினமும் எங்களுக்கு ரொட்டி வேண்டும் என்று தேவனிடம் கேட்பது மிகவும் அர்த்தமுள்ள ஜெபமாக எனக்கு இருந்தது.

சில ஆண்டுகள் கழித்து…