மிகச்சிறந்த இலக்கியம் என்றால் என்னென்ன தன்மைகளை உடையதாக இருக்க வேண்டும் என்று விளக்கின ஒரு கட்டுரையை வாசித்தேன். சிறந்த இலக்கியம் “உங்களை மாற்றும். அதை வாசித்து முடித்தவுடன் நீங்கள் வேறு மனிதராக மாறி இருப்பீர்கள்” என்று அதன் ஆசிரியர் அவரது கருத்தை தெரிவித்திருந்தார்.

அந்தக் கூற்றின்படி வேதாகமம் மிகச்சிறந்த இலக்கியமாக இருக்கும் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேதாகமத்தை வாசிப்பது நம்மை சிறந்த மனிதராக வாழ நமக்கு சவால் விடுவதாக உள்ளது. வேதாகமத்திலுள்ள வீரர்கள், கதைகள் நம்மை தைரியமுள்ளவர்களாகவும், விடாமுயற்சி உள்ளவர்களாகவும் இருக்கத் தூண்டுகின்றன. ஞானத்தைப் போதிக்கும் புத்தகங்களும், தீர்க்கதரிசன புத்தகங்களும் விழுந்துபோன நமது உணர்வுகளின் அடிப்படையில் நாம் வாழ்வதினால் ஏற்படும் ஆபத்துக்களைப்பற்றி எச்சரிக்கின்றன. நமது நன்மைக்காக நமது வாழ்க்கையையே மாற்றி அமைக்கத்தக்கதான சங்கீதங்களை எழுத தேவன் பல சங்கீதக்காரர்களோடு பேசினார். இயேசு கிறிஸ்துவின் போதனைகள், நாம் அவரைப் போல மாறத்தக்கதாக நமது குணங்களை உருவாக்குகின்றன. பவுலின் நிருபங்கள் நாம் பரிசுத்தமான மனதுடன் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கு பழக்கப்படுத்துகின்றன. இந்த வேத வசனங்களை பரிசுத்த ஆவியானவர் நமது மனதில் கொண்டுவரும்பொழுது, நமது வாழ்க்கையை மாற்றி அமைக்கும் வல்லமை உடையவைகளாக இருக்கின்றன.

119ம் சங்கீதத்தை எழுதியவர், தேவனுடைய வார்த்தைகள், அவருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கக்கூடிய வல்லமை உடையவைகளாக இருந்ததால் அவற்றை நேசித்தார். மோசேயினால் ஆதியில் எழுதப்பட்டு, அவர்களுக்கு அருளப்பட்ட வசனங்கள், அவனுக்குப் போதித்தவர்களைக் காட்டிலும் அவன் ஞானமுள்ளவனாக இருக்க உதவி செய்தன என்பதை அறிந்து கொண்டான் (வச.99). அவைகள் அவனை பொல்லாத வழிகளில் செல்லாமல் காத்துக்கொண்டன (வச.101). ஆகவே “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்” என்றும் “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” (சங். 119:97,103) என்று அவன் வியப்படைந்ததில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை.

புகழ்பெற்ற இலக்கியங்களை நேசிப்பதிலும், அதிலும் சிறப்பாக உங்களது வாழ்க்கையை மாற்றி அமைத்து மகிழ்ச்சி அளிக்கும் வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையை நேசிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.