மிச்சிகனில் வாழும் மக்களுக்கு, இளவேனில் காலம் வரும் என்ற நம்பிக்கையினால் குளிர்ந்த பனி காலத்தைக் கடக்க இயலுகிறது. அவர்களது நம்பிக்கைக்கு மே மாதத்தில் பலன் கிடைக்கிறது. அப்பொழுது இயற்கையில் ஏற்படும் மாற்றம் ஆச்சரியப்படத்தக்காக உள்ளது. மே மாதம் 1ம் தேதியில் உயிரற்றதுபோல காணப்பட்ட கிளைகள் அம்மாதக் கடைசியில், இளவேனிற் காலத்தை வரவேற்பது போல, பசுமையான இலைகளுடன் காற்றில் அசைந்தாடுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்மரங்களில் ஏற்பட்ட மாற்றம், கண்ணால் காணக்கூடியதாக இல்லாவிட்டாலும், அந்த மாதக்கடைசியில் எனது முற்றத்திலிருந்த அனைத்து மரங்களும் பழுத்த சாம்பல் நிறத்திலிருந்து பசுமையான பச்சை நிறத்திற்கு மாறிவிட்டன.
தேவன் அவரது சிருஷ்டிகளில் ஓய்வும், புதுப்பித்தலும் மாறி, மாறி வரத்தக்கதாக சிருஷ்டித்துள்ளார். உயிரில்லாதது போல நமக்குத் தோன்றுவது தேவனுக்கு ஓய்வுபோல தோன்றுகிறது. ஓய்வு என்பது புதுப்பிக்கப்படுவதற்கு ஆயத்தப்படுவதுபோல, மரணம் என்பது உயிர்த்தெழுதலுக்கு ஆயத்தப்படுவதாக உள்ளது.
ஒவ்வொரு இளவேனிற் காலத்திலும் மரங்கள் உயிர்பெற்று எழுவதை நான் அதிகம் விரும்புகிறேன். ஏனெனில், மரணம் என்பது தற்காலிகமான நிலை என்றும், அதன் நோக்கம் புதிய வாழ்க்கைக்கு, புதிய ஆரம்பத்திற்கு, அதைவிட மிகச்சிறந்த நிலைமைக்கு நம்மை ஆயத்தப்படுத்துவதே ஆகும். “கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவா. 12:24).
இளவேனிற் காலத்தில், பூக்களின் மகரந்தப்பொடி என்னுடைய வீட்டிலுள்ள மேஜைகள், நாற்காலிகள் மீது படிவதோடு மக்களுக்கு தும்மலையும் உண்டாக்கி தொல்லை கொடுக்கின்ற பொழுது, தேவன் எல்லாவற்றையும் உயிரோடு வைக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்கு நினைப்பூட்டின. அவருடைய குமாரனை விசுவாசிப்பவர்களுக்கு மரணம் என்ற வேதனைக்குப்பின், மகிமையான உயிர்த்தெழுதலை தேவன் வாக்குப்பண்ணுகிறார்.