எலிசா தீர்க்கத்தரிசி மன உறுதியும், முரட்டுத் துணிச்சலும் இணைந்த தன்மையை உடையவர். எலியா தீர்க்கத்தரிசியுடன் அவர் சிலகாலம் சேர்ந்து பணிபுரிந்து வந்தபொழுது, எலியாவின் மூலமாக கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்ததையும், பொய் பேசுதலே மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில், அவர் தைரியமாக உண்மை பேசுவதையும் எலிசா கண்ணாரக் கண்டார். 2 இராஜாக்கள் 2:1ல் எலியா “பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்” நேரம் வந்தது. ஆனால் எலியா அவனைவிட்டு எடுக்கப்பட்டுப் போவதை எலிசா விரும்பவில்லை.

எலிசா பயந்தபடி, எலியா அவனை விட்டுப் பிரியும் நேரம் வந்தது. எலியா செய்த தேவ பணியை இவன் வெற்றிகரமாகச் செய்ய வேண்டுமென்றால், எலியாவிடமிருந்த ஆவியின் பெலன் இவனுக்குத் தேவை என்று அறிந்தான். ஆகவே “அதற்கு எலிசா, உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்” (2 இரா. 2:9). இந்த தைரியமான கோரிக்கையை எலிசா எலியாவிடம் கேட்டான். அவன் தைரியமாகக் கேட்ட அந்தக்காரியம், நியாயப்பிராமணத்தின்படி, முதற்பேறான குமாரனுக்கு கிடைக்க வேண்டிய இரட்டிப்பான பங்கைக் குறிக்கிறது (உபா. 21:17). எலியா சுதந்திரவாளியாக இருக்க எலிசா விரும்பினான். தேவன் அதை ஆமோதித்தார்.

சமீபகாலத்தில் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை பரப்பிவந்த ஒரு பெண் மரித்துவிட்டாள். அவள் எனது ஆலோசகரில் ஒருவளாக இருந்தாள். அநேக ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் வாழ்க்கையில் போராடி வந்த அந்த பெண்மணி, கர்த்தரோடு கூட நித்தியத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க எப்பொழுதும் ஆயத்தமாக இருந்தாள். இவ்வுலக வேதனைகளிலிருந்து விடுபட்டு தேவனுடைய சமூகத்தில் அவள் மகிழ்ச்சியோடு இருக்கப் போகிறாள் என்று அவளை நேசித்த நாங்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவளுடைய அன்பையும், சாட்சியான வாழ்க்கையையும் இழந்ததினால் வருத்தமடைந்தோம். அவள் எங்களை விட்டுப்பிரிந்து சென்றாலும், எங்களைத் தனியாக விட்டுவிடவில்லை. நாங்களும் தேவனுடைய பிரசன்னத்தை உடையவர்களாக இருக்கிறோம்.

எலியாவினுடைய ஆவியின் இரட்டிப்பான பங்கை எலிசா பெற்றுக் கொண்டார். இது மகாப்பெரிய சிலாக்கியமும், ஆசீர்வாதமும் ஆகும். இயேசுவின் இவ்வுலக வாழ்க்கை, மரணம், உயிர்ததெழுதலுக்குப்பின் வாழ்ந்து வரும் நாம், அவர் வாக்குப்பண்ணின பரிசுத்தாவியை உடையவர்களாக இருக்கிறோம். திரியேக தேவன் நமக்குள்ளாக வாசம் பண்ணுகிறார்.