புரிந்து கொள்ளுவதற்காகவே
லண்டனில் உள்ள “நேஷனல் காலரி” மாஸ்கோவில் உள்ள “ஸ்டேட் ட்ரெட்யாக்கோவ் போன்ற அருங்காட்சி சாலைகளைச் சென்று பார்ப்பது என்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும். அற்புதமான சில கலைப்படைப்புகள் என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கும். ஓவியம் தீட்டும் திரைத் சீலையில் தம் மனம்போன்ற வண்ணங்களை அள்ளித்தெளித்தது போன்ற ஒவியங்களை நான் பார்க்கும்பொழுது நான் என்ன பார்க்கிறேன் என்று எனக்கு தெரிவதேயில்லை. ஆனால் அதை வரைந்துள்ள கலைஞர், தன் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருப்பார்.
சில சமயங்களில் வேதமும், நமக்கு அவ்வாறு தான் தோன்றும் அவற்றைப் புரிந்து கொள்ள நம்மால்…
குழப்பத்திற்கும் மேலானவர்
பழைய ஏற்பாட்டில் 2 சாமுவேலின் புத்தகத்தின் முக்கிய கருத்து என்னவெனில் “வாழ்க்கை என்பது ஓர் குழப்பம்.” இக் கருத்து தொலைக்காட்சியில் வரும் குறுந்தொடர் மினி சீரியலின் அனைத்து அம்சங்களையும் கொண்டது. இஸ்ரவேலின் அரசனாக தன் ஆட்சியை அங்கு நிறுவுவதற்கு தாவீது முயற்சித்த பொழுது அநேக இராணுவ சவால்களையும், அரசியல் சதித்திட்டங்களையும், நண்பர்கள், குடும்பத்தினரால் காட்டிக் கொடுக்கப்படும் காரியங்களையும் சந்தித்தான். தாவீதும் பத்சேபாளிடம் கொண்ட தவறான உறவினால் நிச்சயமாக அவன் குற்றமற்றவன் என்று கூறமுடியாது (2 சாமு 11-12).
ஆனால் 2 சாமுவேல் இறுதி அதிகாரங்களில்…
உபத்திரப்படுகிறவர்களுக்கு இளைப்பாறுதல்
கொடுமைக்கார மாற்றாந் தகப்பன், தன் மகன் டேவிட் காப்பர்ஃபீல்டை கொடுமைப்படுத்திய பொழுது சித்தி கோபாவேசத்துடன் அவரை எதிர்த்த காட்சி, இலக்கியத்தில் எனக்கு மிகவும் விருப்பமான காட்சிகளில் ஒன்றாகும். முக்கிய கதாபாத்திரத்தின் பெயரையே புத்தகத் தலைப்பாகக் கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய “டேவிட் காப்பர்ஃபீல்ட்” கதையில் இக் காட்சி வருகிறது.
டேவிட் காப்பர்ஃபீல்ட் தன் சித்தி வீட்டிற்கு வந்த பொழுது அவனுடைய மாற்றாந் தந்தையும் அவனைத் தொடாந்து அங்கு வந்திருந்தார். தீய எண்ணம் கொண்ட திரு மர்ட்ஸ்டோனைப் பார்ப்பதற்கு சித்தி பெத்ஸி ட்ரோட்வுட்டுக்கு விருப்பமில்லை. மர்ட்ஸ்டோன்…
நித்தியகாலமாய் நிலைத்திருக்கும் தேவனுடைய வார்த்தை
2வது உலகமகா யுத்தத்தின் துவக்க காலத்தில் போலந்திலுள்ள வார்சா, ஆகாய மார்க்கமாக குண்டு மழை பொழிந்ததால் தரைமட்டமானது. சிமெண்ட் கட்டிகள், சிதைந்த நீர்குழாய்கள், கண்ணாடித்துண்டுகள் போன்றவை அந்த பெரு நகரத்தில் சிதறிக்கிடந்தது. நகரின் நிர்வாக வணிக அலுவலகங்கள் நிறைந்த பகுதியில் சிதைவுண்ட கட்டிடங்களில் ஒன்று இன்னும் அசையாது நிமிர்ந்து நிற்கிறது. அது ஆங்கிலேயே மற்றும் வெளிநாடுகளின் வேதாகம சங்கத்தின் “போலந்திலுள்ள தலைமைச் செயலகமாகும்.” வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை (மத் 24:35) என்ற வசனம் அங்கு சிதைந்து நிற்கும் சுவரில்…
ஆவியோ விடுவிக்கிறது
அயர்லாந்திலுள்ள அநேக கிராமப்புற நகரங்களில் சமீபகாலம் வரை வீட்டுக்கு எண்களோ, அல்லது தபால்துறை குறியீட்டு எண்களோ (பின்கோட்) பழக்கத்தில் இல்லை. எனவே, ஓர் ஊரில் மூன்று பாட்ரிக் மர்ஃபிக்கள் இருந்தால், புதிதாக அங்கு குடியேறிய அந்தப் பெயர் கொண்ட நபருக்கு கடிதம் வழங்கப்படமாட்டாது; நீண்ட நாட்களாக அங்கு வசித்து வரும் முதல் இரண்டு பாட்ரிக் மர்ஃபிகளுக்கும் வழங்கப்பட்டு பின் அது அவர்களுடைய கடிதம் இல்லையென்றால் தான் புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபிக்கு வழங்கப்படும். புதிதாக வந்த பாட்ரிக் மர்ஃபி என்னுடைய அண்டை வீட்டுக்காரர்கள் தான்…