அநேக ஆங்கிலேய வீட்டுச் சொந்தக்காரர்கள் போலியான தரங்குறைந்த பொருட்களைக் கொண்டு வீடுகட்டுபவர்களை, “கவ்பாய் பில்டர்ஸ்” என்ற பதத்தால் அழைப்பார்கள். வீட்டுச் சொந்தக்காரர்கள் தாங்கள் அடைந்த மோசமான அனுபவங்களால் ஏற்பட்ட பயம், வருத்தம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் அப்பெயரை அவர்களுக்கு வழங்கினர்.
ஏமாற்றும் தச்சர்கள், கொத்தனார்கள், கல்தச்சர்கள் போன்றோர் வேதாகம காலத்திலும் சந்தேகமின்றி வாழ்ந்திருப்பார்கள். யோவாஸ் அரசன், ஆலயத்தைப் பழுதுபார்த்து கட்டிய வரலாற்றில், அப்படிப்பட்டவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. பழுதுபார்க்கும் பணியைச் செய்தவர்களும், அவர்களைக் கண்காணித்தவர்களும் முற்றிலும் நேர்மையுடனும், உண்மையாகவும் செயல்பட்டார்கள் (2 இரா 12:15).
எனினும் ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம் பண்னின நாட்களில் மாத்திரம் தான் “அவன் கர்த்தரின் பார்வைக்கு நேர்மையானதைச் செய்தான் (2 இரா 12:2). நாம் 2 நாளாகமம் 1:7-27ல் வாசிப்பது போல யோய்தா மரணமடைந்த பின், யோவாஸ் கர்த்தரைவிட்டு விலகி அந்நிய தேவர்களை வணங்க நிர்ப்பந்திக்கப்பட்டான்.
கர்த்தருக்குப் பயந்து நடந்த ஆசாரியனின் ஆவிக்குரிய ஆலோசனையைக் கேட்டு, பயந்து நடந்து கனிவுள்ள ஓர் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்த அரசன் இருமனதுடன் நற்குணத்தை விட்டுவிட்டு சென்றவனாய் வாழ்ந்ததை சற்று என்னை எண்ணிப்பார்க்கத் தூண்டியது. நாம் நம் பரம்பரைக்கு எப்படிப்பட்டதை விட்டுச் செல்வோம்? நாம் நம் விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேறி, வளர்ந்து நற்கனி தருவோமா? அல்லது இவ்வுலகப் பிரகாரமான தற்காலத்தில் விக்கிரகங்களாகக் காணப்படும் சுகபோகமான வாழ்க்கை, உலகப்பிகாரமான ஆசை, சுய முன்னேற்றம் போன்றவற்றால் தடுமாற்றமடைந்து