வசந்த காலத் துவக்க முதல் கோடைகால இறுதிவரை மிகவும் கடுமையான காலநிலையை உடைய ஓக்லஹாமாவில் நான் வளர்ந்தேன். ஒரு நாள் மாலைப் பொழுதில் வானம் இருண்ட மேகங்களுடன் கொந்தளித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்கிறேன். தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளர் “டொர்நாடோ” புயல் வந்து கொண்டிருப்பதை அறிவித்தார். உடனேயே மின்சாரம் தடைபட்டது. உடனே மிக வேகமாக என் பெற்றோரும், என் சகோதரியும், நானும் எங்கள் வீட்டின் பின்புறமுள்ள புயல் பாதுகாப்பு அறைக்கு மர ஏணியின் மூலமாக இறங்கி, புயல் கடந்து செல்லும் வரைக்கும் அங்கே தங்கியிருந்தோம்.

இன்று “புயலை விரட்டி செல்வது” என்பது அநேகருக்கு ஒரு பொழுதுபோக்காகவும் பிறருக்கு நல்ல வருவாயை ஈட்டி தரக்கூடிய ஒரு தொழிலாகவும் மாறிவிட்டது. எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் “டொர்நாடோ புயலுக்கு” எவ்வளவு அருகாமையில் செல்ல முடியுமோ அவ்வளவு அருகாமையில் செல்வதே அப்படிப்பட்டவர்களின் இலக்கு. புயலை விரட்டிச் செல்பவர்களில் அநேகர் துல்லியமான தகவல்களையுடைய தேர்ச்சிபெற்ற காலநிலை அறிவிப்பாளர்கள் தான். ஆனால் நான் சீக்கரத்தில் அந்த டொர்நாடோ பயணத்தினரோடு சேருவதாக இல்லை.

ஆனால் நான் என் வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும், ஆவிக்குரிய பகுதிகளில், தேவன் என் பேரில் வைத்திருக்கும் அன்பின் நிமித்தமாக, ஆபத்தான காரியங்களில் ஈடுபடாதே என்று தேவன் எச்சரித்திருந்தாலும், நான் பாதிக்கப்படமாட்டேன் என்று நிச்சயித்துக்கொண்டு, முட்டாள்தனமாக ஆபத்தான காரியத்தை பின் தொடர்ந்து செய்வேன். வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஆபத்தான கண்ணிகளிலிருந்து விடுபட்டு, ஓர் ஞானமான அணுகுமுறையை கையாள பல ஆக்கப்பூர்வமான வழிகளைக் காட்டும் நீதிமொழிகளின் புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று சாலமோன் எழுதியிருக்கிறார் (நீதி 3:5-6).

நம் வாழ்க்கையில் எதிரிடும் காரியங்களை சமாளித்துக் கடந்து செல்ல நம் தேவன் தான் நம் தலைவர். அவருடைய ஞானத்தை நாம் கடைப்பிடித்து அவர் பின் செல்லும் பொழுது, அது ஓர் நிறைவான வாழ்க்கைக்கு நம்மை வழி நடத்தி செல்லும்.