Archives: மார்ச் 2016

அவருடைய நேரத்திற்காக

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரூ முர்ரே என்ற போதகர் 1895ல் இங்கிலாந்திற்கு சென்ற பொழுது, ஏற்கனவே பாதிக்கப்பட்ட முதுகில் ஏற்பட்ட வலியினால் கஷ்டப்பட்டார். அவர் ஒரு வீட்டில் தங்கி சுகம் பெற்றுக் கொண்டு வந்த பொழுது, அந்த வீட்டின் தலைவி, மிகவும் மனகஷ்டத்திற்குள்ளிருந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறி, அவளுக்கு ஆலோசனை கூற அவரால் இயலுமா என்று அறிய விரும்பினாள். “என்னை ஊக்கப்படுத்திக் கொள்வதற்காக நான் எழுதிக் கொண்டிருந்த குறிப்பை அவளிடம் கொடுங்கள் ஒருவேளை இது அந்த பெண்ணிற்கு உதவியாக இருக்கும் என்று முர்ரே…

பாட்டியம்மாவின் சமையல் குறிப்பு

அநேக குடும்பங்கள் அவர்களுக்கே உரிய இரகசியமான சமையல் குறிப்புகளை வைத்திருப்பார்கள். அக்குறிப்புகளை பயன்படுத்தி சிறப்பான முறையில் உணவை மிகவும் ருசியாக சமைப்பார்கள். சீனாவில் ஹக்காஸ் என்ற குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்த எங்களுக்கு பாரம்பரியமான உணவாக அபாக்கஸ் மணிகள் என்ற ஓர் உணவு உண்டு அவை உருண்டையான குமிழ் மணிகளைப் போல இருப்பதால் அப்பெயர் பெற்றது. உண்மையில் நீங்கள் அதை ருசிபார்க்க முயற்சி எடுங்கள்.

ஆமாம், எங்களது பாட்டி மிகச்சிறந்த சமையல் குறிப்பு வைத்திருந்தார்கள். ஒவ்வொரு சீன புத்தாண்டின் பொழுதும் குடும்பக்கூடுகை நடக்கும். அப்பொழுது “இதை…

சோர்ந்து போகிறவனுக்கு பெலன்

சூரிய ஓளி பிரகாசித்துக் கொண்டிருந்த அழகான ஓர் நாளில் ஆவியில் மிகவும் சோர்வுற்றவனாய் ஓர் பூங்காவில் நடந்து கொண்டிருந்தேன். ஒரு காரியம் மாத்திரமல்ல - எல்லாக் காரியங்களும் சேர்ந்து மனபாரத்தினால் என்னைக் கீழே ஆழ்த்தின. ஓர் பெஞ்சில் நான் அமர்ந்தபொழுது, ஓர் சிறு பலகையைப் பார்த்தேன். அது அன்பு கணவன், தந்தை, சகோதரன், நண்பனாக இருந்தவரின் அன்பின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டிருந்தது. மேலும் அந்தப்பலகையில் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுபெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்” என்ற…

பதுங்கி இருக்கும் சிங்கங்கள்

நான் சிறுவனாக இருந்தபொழுது, எனது தகப்பனார் புதர்களுக்குள்ளாக ஒளிந்து கொண்டு சிங்கத்தைப் போல் உறுமி எங்களைப் பயமுறுத்துவார். 1960களில் நாங்கள் கானாவின் கிராமப்புறங்களில் வசித்து வந்தோம். அப்பகுதியில் ஒரு சிங்கம் அருகில் பதுங்கி இருப்பது என்பது நடக்க முடியாத காரியமாகும். நானும், என் சகோதரனும் சிரித்துக் கொண்டு அந்த உறுமல் சத்தம் வரும் இடத்தை நோக்கிப் சென்று, ஒளிந்திருக்கும் எனது தகப்பனாரைக் கண்டு மகிழ்ச்சியடைவோம்.

ஒரு நாள் ஒரு இளம் வயதுடைய சிநேகிதி எங்களைப் பார்க்க வந்தாள். நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது, வழக்கமான…

வெளிச்சத்தை நோக்கி சாய்தல்

ஒரு நாள் ரோஜா நிற டுலிப் மலர்க் கொத்து ஒன்றைப் பெற்றேன். எங்களது சமையலறையிலுள்ள மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஒரு பூச்சாடியில் அந்தப் பூக்கொத்தை வைத்தேன். அந்தப் பூக்கள் அவற்றின் தடித்த தண்டின் மேல் அழகாக நேராக நின்றன. அடுத்த நாள் அந்தப் பூக்கள் வேறு திசையில் திரும்பி இருந்தன, மலர்கள் இப்பொழுது அருகிலிருந்த ஜன்னலின் வழியாக வந்த சூரிய ஒளியை நோக்கிப் பக்கவாட்டில் சாய்ந்திருந்தன.

ஒரு வகையில் நாம் அனைவரும் அந்த மலர்களைப் போலவே இருக்க உருவாக்கப்பட்டுள்ளோம். தேவன் அவரது அன்பை நோக்கி நாம்…