பண்டைய பாபிலோனிய வீரர்கள் நன்னடைத்தை உடையவர்கள் அல்ல. அவர்கள் இரக்கமற்றவர்களும் முரடர்களும், வீம்புக்காரராயும் இருந்தார்கள். பிறருக்கு கேடுண்டாக்கும் தன்மையுடையவர்கள். கழுகானது அதன் இரையைப் பாய்ந்து பிடிப்பது போல, அவர்கள் மற்ற நாடுகளின் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அவர்கள் வல்லமையுடையவர்கள் மட்டுமில்லாது மிகவும் கர்வமும்; உடையவர்கள். உண்மையில் அவர்களது போராடும் திறமையையே கடவுளாக ஆராதிப்பார்கள். அவர்களது தேவனே அவர்களது பெலன் என்று கூறினார்களென்று வேதாகமம் கூறுகிறது (ஆபகூக் 1:11).
இஸ்ரவேல் மக்கள், மீதியானியருக்கு எதிராகப் போராட ஆயத்தமான பொழுது இப்படிப்பட்ட சுயம் சார்ந்த தன்மை இஸ்ரவேலைப் பற்றிக் கொண்டதை தேவன் விரும்பவில்லை. ஆகவே இஸ்ரவேல் படைத்தலைவனான கிதியோனிடம் “நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக் கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும்” என்று தேவன் கூறினார் (நியாதி 7:2). ஆகவே பயப்படும் ஆவியுள்ள அனைவரையும், கிதியோன் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். ஆரம்பத்தில் போரிட வந்த மக்களின் பயமும், திகிலும் உள்ள 22,000 பேர் திரும்பிவிட்டார்கள் மீதம் 10,000 பேர் இருந்தார்கள். அவர்களில் 300 பேர் மட்டும் இருக்கத்தக்கதாக தேவன் இஸ்ரவேல் படையைக் குறைத்து விட்டார் (வச.3-7).
மீதியானியருடைய சேனை பள்ளத்தாக்கில் வெட்டுக் கிளிகளைப் போல திரளாய் இருந்தது. அவ்வளவு திரளான எதிராளிகளை கிதியோன் மிகக் குறைந்த எண்ணிக்கையுடைய சேனையுடன் எதிர் கொண்டான். ஆயினும் கிதியோனுடய சேனைக்கு தேவன் வெற்றி அளித்தார்.
நாம் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றியுடன் முன்னேற தேவனுடைய பெலனையே முற்றிலுமாக சார்ந்திருக்கத்தக்கதாக நாம் நம்பி இருக்கும் ஆதாராங்களைத் தேவன் குறைவு படச் செய்கிறார். நமது தேவைகள் அவரது வல்லமையைக் காட்டுவதாக இருக்கின்றன. ஆனால் அவர்தான் “நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பன்ணுவேன். என் நீதியின் வலது கரத்தினால் நான் உன்னைத் தாங்குவேன்” என்று கூறுகிறார் (ஏசாயா 41:10).