அந்தப் பழைய மரக்குடிசை கைகளினால் இழைக்கப்பட்ட மரக்கட்டைகளால் கட்டப்பட்டு இருந்தது. மாதந்திரப் பத்திரிக்கைகளில் முன்பக்க அட்டையில் போடக் கூடியது போன்ற மிகவும் அழகான குடிசையாக இருந்தது. அதன் வெளிப்புறம் அதனுடைய உண்மையான மதிப்பினை முழுவதுமாக வெளிப்படுத்தவில்லை. அக்குடிசையின் உள்பக்கமாக அதனுடைய சுவரில், தொங்கவிடப் பட்டிருந்த அநேக விலை மதிப்புள்ள பொருட்கள் அக்குடும்பத்திற்கே சொந்தமானவைகளாகும். அவைகள் அனைத்தும் வீட்டில் உள்ளவர்களின் நினைவலைகளைத் தூண்டக் கூடியவைகளாக இருந்தன. மேஜையின் மேல் கைகளினால் பின்னப்பட்ட முட்டை வைக்கும் கூடை, பழங்கால பிஸ்கட் தட்டு, மேலும் ஓர் எண்ணெய் விளக்கு ஆகியவைகள் இருந்தன. இயற்கையின் பல்வேறு தாக்கங்களைத் தாங்கியிருந்த ஒரு தட்டையான தொப்பி ஒன்று முன் கதவில் தொங்கவிடப்பட்டிருந்தது. அந்தக் குடிலிற்குச் சொந்தக்காரர் “இங்குள்ள ஒவ்வொரு பொருளிற்குப் பின்னும் ஒவ்வொரு கதை உள்ளது” என்று பெருமையுடன் கூறினார்.

ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு தேவன் மோசேக்கு கட்டளைகள் கொடுத்த பொழுது அங்கிருந்த ஒவ்வொரு பொருளிற்குப் பின்னும், அழமான அர்த்தம் இருந்தது (யாத் 25:27). தேவனிடம் செல்வதற்கு ஒரே ஒரு வழி இருப்பது போல, ஆசரிப்புக் கூடாரத்திற்குள் செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது (அப் 4:12). தேவனுடைய பிரசன்னம் தங்கியிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும், மக்களுக்கும் இடையே ஒரு கனமான திரை தொங்கவிடப்பட்டிருந்தது. அது போல நமது பாவங்கள் தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கின்றன. மகா பரிசுத்தஸ்தலத்திற்குள்ளாக தேவடைய பிரசன்னத்தைக் குறிக்கும் உடன்படிக்கை பெட்டி இருந்தது. பிரதான ஆசாரியன் பிற்காலத்தில் வர இருக்கும் இயேசு என்ற பிரதான ஆசாரியனுக்கு முன்னோடியாக இருந்தான். பலிகளின் இரத்தம், கிறிஸ்துவின் பரிபூரணமான பலிக்கு நிழலாட்டமாக இருந்தது. “தம்முடைய சொந்த இரத்தத்தினால் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்” (எபி 9:12).

ஆசரிப்புக் கூடாரத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும், கிறிஸ்துவைப் பற்றியும், அவர் நமக்காக செய்து முடிக்க இருந்த செயல்களைப் பற்றியும் விவரித்துக் கூறின. “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்து கொள்வதற்காக” அவர் அப்படிச் செய்தார் (எபி 9:15). அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க இயேசு நம்மை அழைக்கிறார்.