நான் புதிதாக வாங்க எண்ணின செடி சுற்றப்பட்டிருந்த முகப்புத்தாளில் கொடுக்கப்பட்ட விவரங்களில், “இந்தச் செடி வளர்வதற்கு முழு சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது” என்று தெளிவாகக் கொடுக்கப்பட்டிருந்ததை நன்கு அறிந்திருந்தேன். எங்களது முற்றம் பொதுவாக நல்ல நிழலாகத்தான் இருந்தது முழு சூரிய வெளிச்சம் தேவைப்படும் தாவரங்களுக்கு எங்களது முற்றம் ஒத்துவராது. ஆனால் அந்தச் செடி எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் நிறம், அதன் இலைகளின் வடிவம், அதன் உயரம், அதன் வாசனை அனைத்துமே எனக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே அந்தச் செடியை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து அதை நட்டு வைத்து மிகவும் கவனத்துடன் கண்காணித்து வந்தேன். ஆனால் அந்தச் செடி என் வீட்டில் செழிப்பாக வளரவில்லை. எனது கவனிப்பும் கண்காணிப்பும் அதற்கு போதுமானதாக இல்லை. என்னால் கொடுக்க இயலாத சூரிய ஒளி அதற்குத் தேவைப்பட்டது, சூரிய ஒளிக்குப் பதிலாக வேறு விதத்தில் அதற்கு கவனத்தையும், பராமரிப்பையும் கொடுத்து அதன் தேவையைச் சந்திக்கலாம் என்று எண்ணினேன். ஆனால் எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. தாவரங்களுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க வேண்டும்.
அந்தச் செடியைப் போலத்தான் மக்களும் தேவையான சூழ்நிலைகள் இல்லாத நிலையில் நாம் சிறிது காலத்திற்கு வாழலாம். ஆனால் தொடர்ந்து வாழ இயலாது. நமது சரீரப்பிரகாரமான அடிப்படை தேவைகளோடு. ஆவிக்கேற்ற தேவைகளும் உண்டு அந்த ஆவிக்கேற்றத் தேவைகளை வேறு எந்தக் காரியங்களாலும் திருப்திப்படுத்த இயலாது.
விசுவாசிகள் வெளிச்சத்தின் பிள்ளைகள் என்று வேதாகமம் கூறுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், நாம் நமது ஆவிக்கேற்ற வாழ்வில் செழித்து வளருவதற்கு தேவனுடைய பிரசன்னம் என்ற பூரண வெளிச்சத்தில் வாழ வேண்டும் (சங் 89:15). நாம் இருளில் வாழ்பவராக இருந்தால் நாம் “கனியற்ற கிரியைகளையே” கொடுப்போம் (எபே 5:3-4). உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளியில் நாம் வாழ்ந்தால் நன்மையானதும் விசுவாசம் சத்தியம் என்ற ஒளியின் கனிகளைக் கொடுப்போம்.