சர்ஜிக்கல் டெக்னாலஜி இண்டர்நேசனல் என்ற இதழில் வந்த ஒரு கட்டுரையில் உங்கள் தலையைக் குனிந்து உங்களது ஸ்மார்ட் கைபேசியைப் பார்ப்பது உங்கள் கழுத்தின் மீது 60 பவுண்டு எடை வைத்திருப்பதற்கு சமம் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரு நாளுக்கு சராசரியாக 2-4 மணி நேரம் அவர்களது கைபேசியில் குறுஞ் செய்திகளை அனுப்புவதிலும், வாசிப்பதிலும் செலவழிப்பதால் அவர்களது கழுத்து எலும்புகளும், முது கெலும்புகளும் பாதிக்கப்பட்டு பொதுவான உடல் நலம் குன்றுகிறது.

வாழ்க்கையில் ஏற்படும் பாரங்களினால் ஆவிக்கேற்ற வாழ்விலும் பாதிப்பு எளிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளாலும், நாம் நேசிக்கும் மக்களது தேவைகளாலும், நாம் அடிக்கடி சோர்வடைந்து விடுகிறோம். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் ஏற்படக்கூடிய பாரங்களைப் பற்றி சங்கீதக்காரன் அறிந்திருந்தான். ஆயினும் “அவர்… சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்” (சங் 146:6,7,8) என்று மிகவும் நம்பிக்கையுடன் எழுதியுள்ளான்.

நாம் தேவனுடைய கரிசனையையும், மகா வல்லமையையும், அவரது அன்பான இருதயத்தையும் கருத்தில் கொண்டால், நாம் தேவனை நோக்கிப் பார்த்து அவரைப் போற்றித் துதிக்கலாம். “கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரீகம் பண்ணுகிறார் (வச.10) என்று அறிந்து நம்பிக்கையோடு நாம் ஒவ்வொரு நாளையும் கடக்கலாம்.

நாம் மடங்கடிக்கப்படும் பொழுது, அவர் நம்மை மேலே தூக்கிவிடுகிறார். தேவனுக்கே மகிமையுண்டாவதாக.