எனது கணவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்த அன்று, அவரது படுக்கையண்டை இருந்து அந்த இரவை மிகக் கவலையுடன் கழித்தேன். நடுப்பகலில் வழக்கமாக நான் அன்று செய்ய வேண்டிய சிகை திருத்தத்தைப் பற்றி நினைவு கூர்ந்து, சிக்குப் பிடித்த என் தலைமுடியை விரல்களால் போதிவிட்டுக் கொண்டு “நான் அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினேன்.
“அம்மா, உங்கள் முகத்தைக் கழுவிக் கொண்டு ஏற்கனவே திட்டமிட்டபடி சிகை திருத்தத்திற்கு செல்லுங்கள்” என்று என் மகள் கூறினாள்.
“வேண்டாம், வேண்டாம் பரவாயில்லை, நான் இங்கே இருக்க வேண்டும்” என்று திட்டமாக கூறினேன்.
“நான் இருக்கிறேன். முதலாவது நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். உங்களைக் குறித்து நன்கு கவனித்துக் கொண்டீர்களென்றாலே, அப்பாவிற்கு அதிக உதவியாக இருப்பீர்கள்” என்று ரோசி கூறினாள்.
இஸ்ரவேல் மக்களுக்கு நியாயாதிபதியாக மோசே தனிமையில் செயல்பட்டதினால், தன்னைத் தானே மிகவும் களைப்படைய வைத்துக் கொண்டான். அவனது மாமனார் எத்திரோ “நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது” (யாத் 18:18) என்று அவரது மருமகனான மோசேயை எச்சரித்தான். பின்பு அவனுடைய வேலைப்பளுவை பிறருக்கு எவ்வாறு பகிர்ந்து கொடுப்பது என்றும் அதற்காக தலைவர்களை எவ்வாறு நியமிப்பது என்றும் அவன் விளக்கினான்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது ஒரு முரண்பாடான கருத்தாக தோன்றினாலும் சுகமாக வாழ்வதற்கு நம்மை நாமே கவனித்துக் கொள்வது மிக அவசியம் (எபே 5:29-30). (மத் 22:37-39) ஆம், நாம் முதலாவது தேவனை நேசிக்க வேண்டும், பின்பு பிறரையும் நேசிக்க வேண்டும். ஆனாலும் நமது சரீரத்தையும், ஆவியையும் புதுப்பித்து கொள்ள போதுமான ஓய்வு நமக்கு அவசியம். சில நேரங்களில் நம்மை நாமே கவனித்துக் கொள்ளல் என்பது நமது பாரங்களைச் சுமக்க பிறர் நமக்கு உதவி செய்யத்தக்கதாக அமைதியாக அவர்களுக்கு இடம் கொடுத்துவிட்டு சற்று விலகி நிற்பதாகும்.
இயேசு ஓய்வு எடுக்கவும் ஜெபிக்கவும் அடிக்கடி தன்னைச் சுற்றி இருப்பவர்களை விட்டு விலகிப்போவார் (மாற் 6:30-32). நாம் அவருடைய மாதிரியை பின் பற்றினால், பிறறோடு சிறந்த உறவுகளை வளர்ப்பதோடு, பிறரைக் குறித்து அதிக கவனம் செலுத்தவும் முடியும்.