இஸ்ரவேல் மக்களுக்கு அரசாங்கத்துடன் சில பிரச்சனைகள் இருந்தன. கி.மு. 586ம் ஆண்டில் பாபிலோன் மன்னனால் இடித்து தள்ளப்பட்ட அவர்களது ஆலயத்தை திரும்ப கட்டி எழுப்ப கி.மு. 500வது ஆண்டின் பின் பகுதியில் வாழ்ந்த யூத மக்கள் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள். ஆயினும் அந்த நாட்டின் அதிபதி யூதர்கள் ஆலயத்தை திரும்பக் கட்டக் கூடாது என்று கருதி, தரியு மன்னனுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினான் (எஸ்றா 5:6-17).

அந்தக் கடிதத்தில் அந்த அதிபதி அங்கு வாழும் யூதர்கள் ஆலயத்தை பழுது பார்த்து திரும்பக் கட்டுகிறார்கள் என்று கூறி அவர்கள் அப்படி பழுது பார்ப்பதற்கு மன்னனிடம் அனுமதி பெற்றுள்ளார்களா என்றும் கேட்டு எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில், முன்பு ஆண்ட அரசனான கோரேஸிடம் ஆலயத்தைப் புதிப்பித்துக் கட்ட அனுமதி வாங்கி இருக்கிறார்கள் என்று யூதர்கள் அளித்த பதிலையும் குறிப்பிட்டிருந்தான். தரியு மன்னன் யூதர்கள் கூறினது உண்மைதானா என்று கண்டறிய அரசு ஆவணங்களை சோதித்து பார்த்தபொழுது அவர்கள் கூறினது உண்மை என்று கண்டறிந்தான். அத்தோடு கோரேஸ் மன்னன் ஆலயத்தை அவர்கள் திரும்ப கட்டலாம் என்று அனுமதியும் வழங்கியிருந்தான். ஆகவே ஆலயத்தை கட்டுவதற்கு தரியு மன்னன் அனுமதியளித்ததோடு அதற்கான செலவையும் கொடுத்து உதவினான் (6:1-2 பார்க்க). ஆலயத்தை மறுபடியும் புதிதாக கட்டி எழுப்பின பின் “தேவன், ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்து இருக்கப் பண்ணினதினால் சந்தோஷத்துடனே பண்டிகையை ஆசரித்தார்கள்” (6:22).

ஒரு சூழ்நிலையைப் பற்றிய ஒரு காரியத்தைக் குறித்து கூற வேண்டியதிருந்தால், அதைக் குறித்து மரியாதையான முறையில் கூறுவதன் மூலமும், எல்லாவித காரியங்களையும் தேவன் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் என்று நம்புவதின் மூலமும், அதன் விளைவாக கிடைத்த நல்ல பலனுக்கு நமது நன்றியை தெரிவிப்பதின் மூலமும், நாம் தேவனை மகிமைப்படுத்துகிறோம்.