சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு வரும் கடிதங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் கொடுப்பேன். இவ்வாறு கடிதத் தொடர்பு இனிதே நடந்து வந்தது. பின் ஃபாக்ஸ் இயந்திரம் வந்ததால் பதில் இரண்டு நாட்களுக்குள் வந்துவிடும். அதுவும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டது. இன்று மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS), கைபேசி போன்றவற்றால் பதில் அதே நாளில் எதிர்பார்க்கப்படுகிறது!
“அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்.” சங்கீதம் 46ல் காணப்படும் நாம் நன்கு அறிந்த இந்த வசனத்தில் ஒர் முக்கியத்துவத்தை உடைய இரண்டு கட்டளைகளை நான் வாசித்தேன். முதலாவது நாம் அமர்ந்திருக்க வேண்டும். தற்கால வாழ்க்கை முறையில் இது நடைபெற இயலாத ஒன்று. இந்த அவசரமான, புரிந்துகொள்ள இயலாத உலகில் சில வினாடிகள் அமைதலாக இருப்பது என்பது நமக்கு முடியாத ஒரு காரியம். இவ்வாறு அமைதலாய் இருப்பது என்பது நம்மை இரண்டாவது கட்டளைக்கு ஆயத்தமாக்குகிறது. “நானே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.” தேவனை உயர்த்தாமல் நம்மை ரகசியமாக கீழே அமிழ்த்தும் இந்த உலகத்தில், என்னுடைய உள்ளான மனிதனை தேவன் போஷிக்க அவருக்கு எப்படி நேரத்தை ஒதுக்கி கொடுக்க இயலும்?
“நமக்குள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி, கவனச் சிதைவின்றி தரித்திருந்து ஜெபிக்க பழக்க படுத்திக் கொள்வது தான் ஜெபம்” என்று பாட்ரீஷயா ஹாம்ல் கூறுகிறார். ஜெபம், கவனச்சிதறல் இல்லாத பழக்கம். தேவன் ஒருவரே தேவன் என்று அறிக்கை செய்து “அறிந்து” கொள்வதுதான் ஜெபத்தின் முதல்படி. அப்படிப்பட்ட கவனச்சிதறல் இல்லாத நிலையில் ஜெபத்திலேயே அனைத்து எண்ணங்களும் ஒருமுகப்படுத்தப்படும். நமது தோல்விகளை, நமது பெலவீனங்களை, நமக்குள்ள குறைபாடுகளை ஜெபத்தில் நாம் அறிக்கையிட ஜெபம் உதவுகிறதுமல்லாமல், மனிதனின் பெலவீனங்களை தம் எல்லையற்ற இரக்கத்தினால் ஏற்றுக்கொண்டு பதில் கொடுக்கிறவருமாயிருக்கிற தேவனிடம் ஜெபம் நம்மை வழிநடத்துகிறது.