ஜனவரி, 2016 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread - Part 2

Archives: ஜனவரி 2016

கேள்விகள் தொடரும் பொழுது

2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி விமானம் ஒன்று சோதனை ஓட்டத்தின் போது உடைந்து, மோஜோவ் பாலைவனத்தில் விழுந்து நொறுங்கியது. அவ்விபத்தில் துணை விமானி மரித்துப்போனார். ஆனால் அதன் விமான ஓட்டியோ அற்புதவிதமாக பிழைத்துக் கொண்டார். அதைக்குறித்து விசாரணை நடத்தினவர்கள் என்ன நடந்தது என்பதை விரைவில் கண்டறிந்த போதிலும், ஏன் நடந்தது என்பதை அறியவில்லை. அச்சம்பவத்தைக் குறித்து செய்தித்தாளில் வெளியான கட்டுரை ஒன்றின் தலைப்பு, “கேள்விகள் தொடர்கின்றன” என துவங்கிற்று.

நாம் நம் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் துயரங்களுக்கு போதுமான…

அஜாக்கிரதையான வார்த்தைகள்

சமீபகாலமாக மிகவும் நோய்வாய்பட்டிருந்த என்னுடைய மகளை அவளுடைய கணவன் அவளுக்கு நல்ல துணையாய் இருந்து அவளை மிக அற்புதமாய்க் கவனித்துக் கொண்டான். அதைக் கண்டு, “உன்னிடமுள்ள பெரிய பொக்கிஷம் உன் கணவனே!” என்றேன்.

அதற்கு அவள் புன்முறுவலுடன், “எங்களுடைய திருமணத்திற்கு முன் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே”, என கூறினாள். அது உண்மைதான். இசில்டாவும் (Icilda) பிலிப்பும் (Philip) திருமணம் செய்ய முடிவு செய்த போது நான் கவலையுற்றேன். அவர்கள் இருவரும் வெவ்வேறு குணநலனுடையவர்கள். நாங்கள் கலகலப்பான பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பிலிப்பு மிகவும்…

தேவனுக்கே மகிமை

அன்று சபைக்கு புதிய நபர்கள் சிலர் வந்திருந்தனர். ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரசங்கியார் பிரசங்கித்து கொண்டிருக்கும் பொழுதே பாதி வேளையில் ஒரு பெண் சபையை விட்டு வெளியேறியதைக் கண்டு, அதன் காரணத்தை அறிந்துக்கொள்ளும்படி, ஆர்வத்துடனும், கலக்கத்துடனும் அவள் பின் சென்றேன்.

அவளை நெருங்கி, “நீங்கள் சீக்கிரம் கிளம்பிவிட்டீர்களே ஏதாவது பிரச்சனையா? உதவி தேவையா?” என கேட்டேன். அதற்கு அவள், “ஆம், அந்த பிரசங்கம் தான் என் பிரச்சனை. என்னால் அந்த பிரசங்கியார் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி கூறினாள். நம்…

சிறுவர்களுக்கான போதனைகள்

பள்ளிக்கூட உணவறையில், தான் சந்திக்கும் பிரச்சனையைக் குறித்து என் மகள் கூறினவுடன் அப்பிரச்சனையை எப்படி சரி செய்வது என எண்ணி வியந்தேன். ஆனால் அடுத்ததாக இன்னொரு எண்ணமும் தோன்றியது. ஒருவேளை அவள் தேவன் கிரியை செய்வதைக் கண்டு அவரை இன்னும் அதிகமாய் அறிந்து கொள்ளும்படியாய் இந்தப்பிரச்சனையை அனுமதித்தாரோ என தோன்றியது. ஆகவே உடனடியாக அப்பிரச்சனையிலிருந்து அவளை விடுவிக்க முயல்வதை விட்டு, அவளோடு சேர்ந்து ஜெபிக்க தீர்மானித்தேன். என்னுடைய உதவியின்றி அப்பிரச்சனை விலகிற்று!

இச்சம்பவத்தின் மூலம் தேவன் தன் மேல் கருத்தாய் இருக்கிறார் என்றும், தன்னுடைய…