அன்று சபைக்கு புதிய நபர்கள் சிலர் வந்திருந்தனர். ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரசங்கியார் பிரசங்கித்து கொண்டிருக்கும் பொழுதே பாதி வேளையில் ஒரு பெண் சபையை விட்டு வெளியேறியதைக் கண்டு, அதன் காரணத்தை அறிந்துக்கொள்ளும்படி, ஆர்வத்துடனும், கலக்கத்துடனும் அவள் பின் சென்றேன்.

அவளை நெருங்கி, “நீங்கள் சீக்கிரம் கிளம்பிவிட்டீர்களே ஏதாவது பிரச்சனையா? உதவி தேவையா?” என கேட்டேன். அதற்கு அவள், “ஆம், அந்த பிரசங்கம் தான் என் பிரச்சனை. என்னால் அந்த பிரசங்கியார் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என வெளிப்படையாக ஒளிவுமறைவின்றி கூறினாள். நம் வாழ்வில் நாம் சாதித்தது எதுவாக இருந்தாலும் அதன் பெருமையும் புகழும் தேவனையே சேரும் என அந்த பிரசங்கியார் பிரசங்கித்திருந்தார். “என்னுடைய சாதனைகளுக்குரிய மதிப்பும் பெருமையும் எனக்குத் தகுதியானது, உரியது என கருதுகிறேன்!” என புலம்பினான்.

அப்பிரசங்கியார் கூறியதை அவளுக்கு விளக்கினேன். தங்கள் செயலுக்கேற்ற அங்கீகாரமும் பாராட்டலும் கிடைக்க வேண்டும் என்பது நியாயமே. ஆனாலும் நம்முடைய தலாந்துகளும் திறமைகளும் தேவனிடமிருந்தே வந்ததால் அவருக்கே எல்லா மகிமையும், கனமும் உரியது. தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் கூட “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார் (யோவான் 5: 19) என்று கூறினார். அவரைப் பின்பற்றுகிறவர்களைப் பார்த்து, “என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” என்றும் கூறினார் (15: 5).

நாம் எல்லாவற்றையும் சாதிக்கும்படி தேவனே நமக்கு உதவி செய்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.