சமீபகாலமாக மிகவும் நோய்வாய்பட்டிருந்த என்னுடைய மகளை அவளுடைய கணவன் அவளுக்கு நல்ல துணையாய் இருந்து அவளை மிக அற்புதமாய்க் கவனித்துக் கொண்டான். அதைக் கண்டு, “உன்னிடமுள்ள பெரிய பொக்கிஷம் உன் கணவனே!” என்றேன்.

அதற்கு அவள் புன்முறுவலுடன், “எங்களுடைய திருமணத்திற்கு முன் நீங்கள் அப்படி நினைக்கவில்லையே”, என கூறினாள். அது உண்மைதான். இசில்டாவும் (Icilda) பிலிப்பும் (Philip) திருமணம் செய்ய முடிவு செய்த போது நான் கவலையுற்றேன். அவர்கள் இருவரும் வெவ்வேறு குணநலனுடையவர்கள். நாங்கள் கலகலப்பான பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஆனால் பிலிப்பு மிகவும் அமைதியானவன். இப்படியான என்னுடைய அதிருப்தியான எண்ணங்களையெல்லாம் அப்பட்டமாக என் மகளிடம் பகிர்ந்து கொண்டேன்.

ஆனால் 15 வருடங்களுக்கு முன்னால் சாதாரணமாக நான் கூறிய அந்த கடினமான விமர்சனங்களை என் மகள் இன்னும் நினைவில் கொண்டிருந்தால் என்பதை நினைக்கும் பொழுது அதிர்ச்சியாக இருந்தது. அது மட்டுமல்லாமல், அவ்விமர்சனங்கள் நிறைவான இந்த உறவை அழித்திருக்க கூடும் என்ற எண்ணம் மேலும் அதிர்ச்சியைத் தந்தது. பிறரிடம் நாம் கூறும் வார்த்தைகள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை இது நினைவுபடுத்தியது. நம்மில் அநேகர், நம்முடைய உற்றார், உறவினர், உடன் வேலை செய்வோர் ஆகியோரின் வெற்றிகளில் நம்முடைய பார்வையை பதிய வைப்பதற்கு பதில், அவர்களுடைய பெலவீனங்களை சுட்டிக்காட்டுவதில் வேகமும், அவர்களுடைய தவறுகளின் மேலேயே நம்முடைய கவனத்தையும் செலுத்துகிறோம். “நாவானது நமது சரீரத்தில் ஒரு சிறிய அவயமாய் இருக்கிறது” (3: 5) என யாக்கோபு கூறுகிறார். ஆனாலும் அதிலிருந்து உருவாகும் வார்த்தையானது, உறவுகளை அழிக்கவும் முடியும் அல்லது சமாதானத்தையும், ஒற்றுமையையும் வேலை ஸ்தலத்திலோ, சபையிலோ, குடும்பத்திலோ கொண்டுவரவும் முடியும்.

சொல்லப்போனால், “கர்த்தாவே என் வாய்க்கு காவல் வையும்; என் உதடுகளின் வாசலை காத்துக்கொள்ளும்” சங்கீதம் 4: 13 என்னும் தாவீதின் ஜெபம் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் நமது ஜெபமாக இருக்க வேண்டும்.