சிறு பிள்ளைகளுக்குத் தாயாக இருப்பதால், சில நேரங்களில் எளிதாகப் பயந்துவிடுகிறேன். என்னுடைய மகனுக்க ஒவ்வாமை என்றாலோ அல்லது மகளுக்கு இருமல் என்றாலோ உடனடியாக என் தாயாரைத் தொலைபேசியில் அழைத்து நான் செய்ய வேண்டியதைக் குறித்துக் கேட்பேன்.
என் தாயார் எனக்கு பெரிய ஆதாரம், ஆனால் சங்கீதங்களைப் படித்தபோது, அநேகந்தரம் மனுஷனால் செய்யக்கூடாத உதவிகளை எதிர்பார்த்திருக்கிறோம் என்பதை நினைவுகூர்ந்தேன். தாவீது மகாப்பெரிய ஆபத்தின் மத்தியில் இருப்பதை சங்கீதம் 18 ஆம் அதிகாரத்தில் காணலாம். பயத்தின் மத்தியில், மரணத்தின் விளிம்பில், வேதனையின் மத்தியில் அவன் தேவனை நோக்கிக் கூப்பிட்டான்.
தாவீது அச்சூழ்நிலையிலும் “தேவனே நான் உம்மை நேசிக்கிறேன்” என கூறினான். ஏனெனில் அவரே அவனுக்கு கோட்டையும், கன்மலையும், மீட்புமானவர் (வச. 1-2) என்பதை அவன் அறிந்திருந்தான். தேவனே அவனுக்கு கேடகமும், இரட்சிப்பும் அரணுமானவர். ஒரு வேளை தேவனுடைய உதவியை அனுபவிக்காதவர்களென்றால், தாவீதின் துதியை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் தேவனிடம் போகும் முன் மனித உதவியை ஆலோசனையை நாடி முதலாவது தொலைபேசியை எடுப்பவர்களாக இருக்கலாம்.
ஆறுதலையும் உதவியையும் பெற்றுக்கொள்ளும்படியாய் தேவன் மனுஷர்களை நம்முடைய வாழ்வில் வைத்திருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால், நாம் ஜெபிக்க மறந்துவிடக்கூடாது. தேவன் நம்முடைய ஜெபத்தைக் கேட்பார். தாவீது பாடினது போல, “தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று” (வச. 6). நாம் தேவனண்டை செல்லும் பொழுது தாவீதோடு கூட சேர்ந்து அவரே நம்முடைய கன்மலையும் அரணும், மீட்புமானார் என மகிழக்கடவோம்.
அடுத்த முறை தொலைபேசியை எடுக்கும் முன் ஜெபிக்க மறவாதீர்கள்.