வைரத்துகள்கள்
மிச்சிகனில் நாங்கள் வாழ்ந்து வந்த பகுதியில் மிகவும் கடுமையான பனிக்காலமாக இருந்தது. காலநிலையைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. பனி பெய்த அந்தக் குளிர்காலம் மார்ச்சு மாதம் வரை நீடித்த பொழுது, பனியைக் குறித்த ஆசையை அநேகர் இழந்து விட்டுத் தொடர்ந்து குறைந்த வெப்ப நிலையே நீடிக்கும் என்ற வானிலை அறிக்கையைக் குறித்து வருத்தமடைந்தார்கள்.
ஆயினும் மிகவும் கவர்ச்சிகரமான பனித்துகளின் அழகு தொடர்ந்து எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து வந்தது. என்னுடைய வாகனத்தின் ஓடு தளத்திலிருந்து பனி வாரியின் மூலம் அதிகமான பனியை அள்ளி எனக்குப்…
கிறிஸ்மஸ் தியாகம்
ஓ.ஹென்ரியின் புகழ்பெற்ற “மேகியின் பரிசு” என்ற கதை பொருளாதார நிலையில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த ஜிம், டெல்லா என்ற இளம் தம்பதியரைப்பற்றி கூறுகிறது. கிறிஸ்மஸ் நாட்கள் நெருங்கின பொழுது, ஒருவருக்கொருவர் சிறப்பான பரிசு கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் பண வசதி இல்லாததினால் எதிர்பாராத கடுமையான முடிவுக்கு வந்தார்கள். ஜிம்மிடம் இருந்தது அவனுக்கு மிகவும் பிடித்தமான தங்கக் கைக் கடிகாரம் மட்டும் தான். டெல்லாவிட மிருந்தது அவளுடைய நீண்ட, அழகான கூந்தல் மட்டும் தான். ஆகவே ஜிம் டெல்லாவின் கூந்தலை அழகுபடுத்துவதற்காக, அவனது…
உடைந்து போகக்கூடிய பரிசு
உடைந்து போகக் கூடிய பரிசை பிறருக்கு நாம் அளிக்கும் பொழுது, அப்பொருள் உள்ள பெட்டியின் மேல் ‘கவனமாக கையாளுங்கள் உடையக் கூடியது’ என்ற குறிப்பு எழுதப்பட்டுள்ளதா என்று நிச்சயப்படுத்திக் கொள்வோம். உள்ளேயுள்ள பொருள் யாராலும் சேதப்படுத்தப்படாமல் இருப்பதை நாம் விரும்புவதால் வெளியே உடையக் கூடியது என்ற வார்த்தை பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகிறது.
தேவன் நமக்கு அளித்த பரிசு மிகவும் பெலவீனமான பாலகன் வடிவில் வந்தது. சில சமயங்களில் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகளில் பார்க்கும் அழகான கிறிஸ்மஸ் காட்சியைப் பார்த்து, கிறிஸ்மஸ் மிகவும் மகிழ்ச்சியூட்டும் நாள்…
கிறிஸ்மஸ் புதிர்
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ள கிறிஸ்மஸ் கேரல் என்ற நாவலின ஆரம்பத்தில் அக்கதையில் வரும் எபினேசர் ஸ்குரூஜ் என்பவருடைய வாழ்க்கை ஒரு புதிராகவே உள்ளது. ஏன் அவர் அற்பப் புத்தியுடையவராக இருக்கிறார்? அவர் எப்படி மிகவும் மோசமான சுய நலக்காரராக மாறினார் என்பது புதிராகவே இருந்தது. பின்பு கதையில் வரும் கிறிஸ்மஸ் உற்சாகம் ஸ்குரூஜின் கடந்தகால அனுபவத்தின் வழியாக அவனை நடத்திச் சென்ற பொழுது அவரது செயல்பாடுகள் பற்றி தெளிவு உண்டாகிறது, மகிழ்ச்சியான வாலிபனாக வாழ்ந்த ஸ்குரூஜ் தன்னலம் வாய்ந்த போலியாக மாற, அவனில் ஏற்பட்ட…
ஒரே அளவு எல்லோருக்கும் பொருந்தும்
அநேக சிறு பிள்ளைகளைப் போல நானும் கிறிஸ்மஸை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவேன். மிகவும் எதிர்பார்ப்புடன் கிறிஸ்மஸ் மரத்தின் அடியிலிருந்து எனக்கு என்ன விளையாட்டுச் சாமான், பொம்மை கிடைக்குமென்று ஆவலுடன் தொட்டுப் பார்ப்பேன். ஆகவே எனக்கு வயதானவுடன் சட்டையும், கால்சட்டையும் எனக்கு பரிசாக கிடைக்க ஆரம்பித்தவுடன் மனம் சோர்ந்து போனேன். பெரியவர்களுக்கு கிடைக்கும் பரிசுகள் அவர்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியை தராது. சென்ற ஆண்டு கிறிஸ்மஸிற்கு எனது பிள்ளைகள் பிரகாசமான நிறங்களும், அலங்கார வடிவமைப்பு கொண்ட மிக நேர்த்தியான காலுறைகளை எனக்கு பரிசாகக் கொடுத்தார்கள் நான் மிகவும் இளம்…