சார்லஸ் டிக்கன்ஸ் எழுதியுள்ள கிறிஸ்மஸ் கேரல் என்ற நாவலின ஆரம்பத்தில் அக்கதையில் வரும் எபினேசர் ஸ்குரூஜ் என்பவருடைய வாழ்க்கை ஒரு புதிராகவே உள்ளது. ஏன் அவர் அற்பப் புத்தியுடையவராக இருக்கிறார்? அவர் எப்படி மிகவும் மோசமான சுய நலக்காரராக மாறினார் என்பது புதிராகவே இருந்தது. பின்பு கதையில் வரும் கிறிஸ்மஸ் உற்சாகம் ஸ்குரூஜின் கடந்தகால அனுபவத்தின் வழியாக அவனை நடத்திச் சென்ற பொழுது அவரது செயல்பாடுகள் பற்றி தெளிவு உண்டாகிறது, மகிழ்ச்சியான வாலிபனாக வாழ்ந்த ஸ்குரூஜ் தன்னலம் வாய்ந்த போலியாக மாற, அவனில் ஏற்பட்ட தாக்கங்களைப் பார்க்கிறோம். உடைந்த உள்ளத்துடன் கூடிய, கைவிடப்பட்ட மனிதனாக மாறுவதாகக் காண்கிறோம். அவனைப் பற்றிய புதிருக்கு விடை கிடைத்தவுடன், மீண்டும் நல் வழிப்படக் கூடிய பாதை லேசாகத் தென்படுகிறது. பிறரைப் பற்றிய கரிசனை ஸ்குரூஜ்வுடைய தன்னலமான இருளான சூழ்நிலையிலிருந்து மகிழ்ச்சியான சூழ் நிலைக்கு கொண்டு வருகிறது.
அதைவிட விளக்குவதற்கு மிகக் கடினமான, மிக முக்கியமான ஒரு புதிர் பற்றி பவுல் 1 தீமோத்தேயு 3: 16ல் “தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஓப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ள தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார் என்று பவுல் கூறியுள்ளார். இது வழக்கத்திற்கு மாறானது ஆச்சரியமானது! தேவன் “ மாம்சத்தில்” வெளிப்பட்டார்.
கிறிஸ்மஸின் புதிர் என்ன வென்றால் எவ்வாறு தேவன் முழுவதுமாக தேவனாக இருந்து கொண்டே மனிதனாக வெளிப்பட்டார் என்பதுதான். இது மனிதர்களுடைய விளக்கத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் தேவனுடைய பரிபூரண ஞானத்தினால் ஆதிகால முதலே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியாகும்.
“இக்குழந்தை எப்படிப்பட்டதோ?” அவர் இயேசு கிறிஸ்து – மாம்சத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனானவர்.