50 ஆண்டுகளுக்கு முன்பாக “சார்லி பிரவுன் கிறிஸ்மஸ்” என்ற படம் முதல் முதலாக அமெரிக்க டெலிவிஷனில் ஒளிபரப்பப்பட்டது. சில வலைத்தளத்தின் இயக்குநர்கள், அப்படத்தை மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணினார்கள் வேறு சிலர் வேதாகம வசனங்கள் அப்படத்தில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளதால், பார்ப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார்கள். வேறு சிலர் அக்கதையை எழுதின சார்லஸ் ஸ்கல்ஸ், அதில் கிறிஸ்மஸ் கதையை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணினார்கள். ஆனால் ஸ்கல்ஸ் கிறிஸ்மஸ் கதை அதில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த ஒளிபரப்பு நிகழ்ச்சி மிகவும் வெற்றி அடைந்ததோடு, 1965ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அப்படம் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
சிறுவர்களின் கிறிஸ்மஸ் நாடகத்தில் இயக்குநரான சார்லி பிரவுன், விடுமுறைக்கால வியாபார எண்ணங்களால் நம்பிக்கை இழந்து, கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை யாராவது கூறமுடியுமா? என்று கேட்டார் “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள், இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான் அந்தஷணமே பரம சேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி; உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும், உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.” (லூக்கா 2: 11-14) என்ற இந்த வசனங்களை லின்னஸ் மனப்பாடமாக கூறினாள். பின்பு “அது தான், கிறிஸ்மஸ் பற்றிய செய்தி, சார்லி பிரவுன்” என்று லின்னஸ் கூறினாள்.
நமது சந்தேகங்களாலும், செயல்படுத்த நினைக்கும் திட்டங்களாலும் நிறைந்த இந்த கிறிஸ்மஸ் காலத்தில், நாம் அனைவருமே நன்கு அறிந்துள்ள யோசேப்பு, மரியாள், குழந்தை இயேசு பிறப்பைப்பற்றி அறிவித்த தேவ தூதர்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள தேவனின் மகாப்பெரிய அன்பை, மறுபடியும் ஆழ்ந்து சிந்திப்பது நல்லது.