நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் வெளியான ஒரு கட்டுரையின்படி ஆப்பிரிக்காவிலுள்ள அநேக ஊர்களில் குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்களால் விஷேசமானது என்று கருதப்பட்ட, வருகைதந்த புகழ்பெற்றவரின் பெயர், சிறப்பான நிகழ்ச்சி அல்லது சூழ்நிலைகள், இவற்றை குறித்த பெயர்களே சூட்டப்பட்டன. உதாரணமாக ஒரு குழந்தை நோய்வாய்ப்பட்ட பொழுது மருத்துவர் அந்த குழந்தையின் பெற்றோரிடம் அக்குழந்தையின் சுகவீனத்தை அவர்களால் சுகப்படுத்த இயலாது என்றும் அக்குழந்தை பிழைக்குமா பிழைக்காதா என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று மருத்துவர் கூறின பொழுது, அந்த பெற்றோர் அந்த குழந்தைக்கு “கடவுளுக்குத்தான் தெரியும்” (God knows) என்று பெயர் வைத்து விட்டனர். மற்றொரு மனிதனுடைய தாய்க்கு 13 பிள்ளைகள் பிறந்தன. அந்த மனிதன் தான் கடைசிக் குழந்தை. ஆகவே அவனுக்கு “போதும்;” என்று பெயர் வைத்து விட்டனர். ஓவ்வொரு பெயருக்கும் ஒரு காரணம் இருந்தது. சிலவற்றிற்கு சிறப்பான அர்த்தமும் இருந்தது.

இயேசு பிறப்பதற்கு முன்பே “மரியாள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” (மத்தேயு 1:21) என்று கூறினான். யோசுவா என்ற பெயரின் கிரேக்க மொழி பெயர்ப்பே இயேசுவாகும். இயேசு என்றால் “கர்த்தர் இரட்சிக்கிறார்” என்று அர்த்தமாகும். அந்தக்கால பண்பாட்டின்படி அநேக குழந்தைகள் இயேசு என்று பேரிடப்பட்டிருப்பார்கள். ஆனால், அவரை ஏற்றுக் கொண்டவர்கள் அவர்களது பாவத்தின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டு நித்தியகாலமாய் வாழ்வதற்காக, ஒரே ஒரு குழந்தை தான் தன் ஜீவனையே கொடுக்கப்பிறந்தது.

கிறிஸ்மஸ் காலங்களில் நாம் அடிக்கடி பாடும் பாடலாகிய “அநேக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இயேசுவே வாரும். உமது மக்களை பயத்தினின்று, பாவத்தினின்று விடுவிக்கப்பிறந்தவரே வாரும். உம்மில் நாங்கள் அமைதியைப் பெற்றுக் கொள்ளட்டும்” என்ற பாட்டின் வரிகளை சார்ல்ஸ் வெஸ்லி எழுதியுள்ளார். (Come thou long expected Jesus…)

நம்பிக்கையற்ற நிலையில் நம்பிக்கை அருள, இருளை வெளிச்சமாக்க, நமது பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க இயேசு வந்தார்.