Archives: அக்டோபர் 2015

அன்பு முதலில் வருகிறது

ஒரு நாள் மாலை எனது சிநேகிதி அவளது வீட்டின் முன் அறையில் தொங்கவிடப்படக்கூடிய அலங்கரிக்கப்பட்ட மூன்று தகடுகளில் ஒன்றை என்னிடம் காண்பித்தாள். “அன்பு” என்ற வார்த்தை பொறிக்கப்பட்ட அந்த தகட்டைத் தூக்கி பிடித்துக் கொண்டு “பார், எனக்கு அன்பு கிடைத்துவிட்டது” என்று கூறினாள். விசுவாசமும் நம்பிக்கையும் வந்து கொண்டிருக்கின்றன என்றாள்.
ஆகவே அன்பு முதலாவது வருகிறதென்று எண்ணினேன். விசுவாசமும், நம்பிக்கையும் அதைப் பின்தொடருகின்றன.
அன்பு முதலில் வந்து விட்டது. ஏனெனில் அன்பு தேவனிடமிருந்து ஆரம்பிக்கிறது. “அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில்…

நமது வாழ்க்கையின் பாடல்

ஒரு இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் அதை வெவ்வேறு விதமான கோணங்களில் ரசிக்கிறார்கள். அந்த இசையை இயற்றியவர், அவரின் கற்பனைக்குள்ளாக அதைக் கேட்கிறார். ரசிகர்கள் அவர்களது புலன்களிலும் உணர்வினாலும் கேட்கிறார்கள். இசைக்கருவிகளை இயக்கும் குழுவிலுள்ள அங்கத்தினர்கள் அவர்களுக்கு அருகிலுள்ள இசைக்கருவிகளின் சத்தத்தின் மூலம் இசையைக் கேட்கிறார்கள்.
ஒரு வகையில் நாம் அனைவரும் தேவனது இசைக்குழுவிலுள்ள அங்கத்தினர்கள். பொதுவாக நாம் நமக்கு அருகிலுள்ள இசையையே கேட்கிறோம் அனைத்து வழிகளிலும் இசையை நாம் ரசிக்கும் சமநிலை இல்லாதபடியினால் “இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்”. (யோபு 30:9)…

கவனக் குறைவான வார்த்தைகள்

நான் என் வாகனத்தை ஏறக்குறைய அரைமணி நேரம் ஓட்டிச் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென, பின் இருக்கையிலிருந்த எனது மகள் வீரிட்டுக் கத்தினாள். “என்ன நடந்தது” என்று நான் கேட்ட பொழுது அவளுடைய சகோதரன் அவளது கையைப் பிடித்து இழுத்தான் என்றாள். அவள் அவனைக் கிள்ளினதினால் அவள் கையை இறுகப்பிடித்து இழுத்ததாக அவன் கூறினான். அவன் அன்பற்ற கீழ்த்தரமான வார்த்தைகளைப் பேசினதினால் அவன் கையைக் கிள்ளினேன் என்றாள்.
துரதிஷ்டவசமாக, சிறு பிள்ளைகள் மத்தியில் காணப்படும் இப்படிப்பட்ட தன்மை பெரியவர்களின் உறவுகள் மத்தியிலும் ஏற்படுகிறது. ஒருவர்…

தெளிவற்ற பார்வை

எனது சிநேகிதி மெக்கான் குதிரைப்பயிற்சியில் திறமை மிக்கவள். அவளிடமிருந்து குதிரைகளைப்பற்றிய சில உண்மைகளை அறிந்து கொண்டிருக்கிறேன். உதாரணமாக பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய கண்களை உடையதாக குதிரைகள் இருந்தாலும், குதிரைகளுக்கு குறைவான பார்வையே உள்ளது என்றும், மனிதர்களைவிட மிகக்குறைவான நிறங்களையே காண இயலும் என்பதையும் அறிந்து கொண்டேன். இதனால் தரையிலே கிடக்கும் பொருட்களை என்னவென்று அவைகளால் தெரிந்து கொள்ள இயலாது தரையிலே ஒரு கட்டையைக் கண்டால் அது அவைகளால் தாண்டிச் செல்லக் கூடிய ஒரு பொருளா அல்லது அவைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய ஒரு பாம்பா என்று…

நெருப்போடு விளையாடுதல்

நான் சிறுவனாக இருந்த பொழுது எனது தாயார் நெருப்போடு ஒரு போதும் விளையாடக் கூடாது என்று என்னை எச்சரித்தார். ஒரு நாள் நெருப்போடு விளையாண்டால் என்ன நேரிடும் என்று அறிய விரும்பினேன். சில காகிதங்களையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு பரிசோதனை செய்ய முயன்றேன். இதயம் படபடக்க தரையிலே முழங்கால் படியிட்டு தீக்குச்சியைக் கொளுத்தி காகிதத்தைப் பற்றவைத்தேன்.
திடீரென்று என் தாயார் வருவதைப் பார்த்தேன். நான் செய்த செயலைக் குறித்து எனது தாயார் அறிந்து கொள்ளக் கூடாதென்று நெருப்புச் சுவாலையின் மேல் என் கால்களை வைத்து…