எங்களது வீட்டில் ஜன்னல்களின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த அழகுபடுத்தும் சாதனங்களை பழுது பார்க்க வேண்டிய சமயம் வந்தது. ஆகவே பழமையாய்ப் போன அந்தப் பலகைகளைத் தேய்த்து, சுத்தப்படுத்தி, பெயர்ந்து போன இடங்களை எல்லாம் நிரப்பி வண்ணம் பூச ஆயத்தப் படுத்தினேன். முதலாவது அடிக்க வேண்டிய பிரைமரை அடித்து அதற்கு மேல் விலைமதிப்புள்ள வண்ணமும் அடித்தேன். இந்த எனது முயற்சிகளால் அந்தப் பொருள் அழகாகவும், நன்றாகவும் இருந்தது ஆனாலும் அது புதியதாகத் தோன்றவில்லை. அது புதியதாகக் காணப்பட வேண்டுமென்றால், அந்த பழைய மரத்தை மாற்றியாக வேண்டும்.
காலப் போக்கில் சீதோஷண நிலைகளால் பாதிக்கப்பட்ட ஜன்னல் ஓர அழகுப் பொருட்கள் பழுது பார்த்ததினால் நமது கண்களுக்கு “ அழகாகவும், நல்லவைகளாகவும்” தெரியும். ஆனால் பாவத்தால் பாதிக்கப்பட்ட நமது இருதயங்களை, பழுது பார்த்தால் மட்டும் போதாது. தேவனுடைய பார்வையில் அனைத்தும் புதிதாக்கப் பட வேண்டும். ( 2கொரி 5:17)
அது, இயேசுவை விசுவாசிப்பதனால் கிடைக்கும் இரட்சிப்பின் அழகாகும். அவர் நமது பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, பாவத்தின் மேலும், மரணத்தின் மேலுமுள்ள வல்லமையை காண்பிக்க அவர் உயிர்த்தெழுந்தார். அதன் விளைவாக, கிறிஸ்து செய்த கிரியைகளில் நாம் விசுவாசம் வைக்கும் பொழுது தேவனுடைய பார்வையில் “புதிய சிருஷ்டியாக” மாறுகிறோம்.
(2 கொரி 5:17) அதனால் பழையவைகள் ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின. சிலுவையிலே நமக்காக மரித்த இயேசுவின் கிரியைகளின் மூலம், நம்மைப் பார்க்கும் பொழுது, பரலோகத்திலுள்ள நமது பரமபிதா, அவர் மீது விசுவாசம் வைத்துள்ள ஆண், பெண் யாவரையும் புதிய சிருஷ்டியாகவே பார்க்கிறார்.
பாவம் அதிகமான பாதிப்பை உண்டு பண்ணிவிட்டது. நம்மால் அதை சரி செய்ய இயலாது. நமக்கு புத்தம் புதிய ஜீவனைக் கொடுக்கத்தக்கதாக இயேசுவை நமது இரட்சகராக நாம் விசுவாசிக்க வேண்டும்.