நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது. ஒரு பண்ணைக்கு அருகில் வசித்து வந்த எனது பாட்டியின் தாயாரைப் பார்க்க எனது பெற்றோருடன் சென்றேன். அவர்களது முற்றத்தின் திறந்த வெளிக்குள் மாடுகள் வந்து புல்வெளியை மேய்ந்து விடாத படி ஒரு மின்வேலி போடப் பட்டிருந்தது. முற்றத்திற்குச் சென்று நான் விளையாடலாமா என்று எனது பெற்றோரிடம் கேட்ட பொழுது, அவர்கள் எனக்கு அனுமதி கொடுத்தார்கள், ஆனால் அந்த மின் வேலியைத் தொட்டால் மின் அதிர்ச்சி ஏற்படும் என்று விவரித்துக் கூறி அதைத் தொடாமல் விளையாடக் கூறினார்கள்.
துரதிஷ்டவசமாக நான் அவர்களது எச்சரிப்பை அலட்சியப்படுத்தி விட்டு, அந்த வேலியை என் விரலினால் தொட்டேன். அந்த வேலியை ஒரு பசு தொட்டால் அது திரும்ப அதன் அருகில் வராமலிருக்குமளவுக்கு தாக்கும் மின்சாரத்தால் தாக்கப்பட்டேன். அந்த நிகழ்ச்சியின் மூலம் நான் பாதிக்கப்படாமல் இருக்கவே எனது பெற்றோர் என்னை எச்சரித்தார்கள். அதற்கு என்மேல் அவர்களுக்கு இருந்த அன்பு தான் காரணம் என்பதை அறிந்து கொண்டேன்.
ஆதிகாலத்தில் எருசலேமிலிருந்த இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களை உண்டு பண்ணி அவைகளை வணங்கி வந்ததை தேவன் கண்டார். “தேவன் அவர்கள் மேல் இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்”. (2 நாளாகமம் 36:15)
எரேமியா தீர்க்கத்தரிசியின் மூலமும் தேவன் பேசினார் ஆனால் ஜனங்கள் “எங்கள் யோசனைகளின்படியே நடப்போம்” என்று கூறிவிட்டார்கள். (எரேமியா 18:12) இதனால் எருசலேமை அழித்து அதிலிருந்த மக்களை சிறைப்படுத்த தேவன் நேபுகாத் நேச்சரை அனுமதித்தார்.
உங்கள் வாழ்க்கையிலுள்ள ஏதோ ஒரு பாவத்தைப் பற்றி தேவன் இன்று உங்களை எச்சரிக்கலாம். அது தேவன் நம்மேல் கொண்ட இரக்கத்திற்கு சான்றாகும் (எபிரேயர் 12:5-6) தேவன் நமக்கு எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் காரியங்களைப் பற்றி அறிந்து, அதனால் வரக்கூடிய பிரச்சனைகளை நாம் தவிர்க்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.
வேலியைத் தொடாதே!
வாசிப்பு: எரேமியா 18:1-12 | ஓராண்டில் வேதாகமம்: எரேமியா 18-19 & 2 தீமோத்தேயு 3
அவர்களுடைய பிதாக்களின்
தேவனாகிய கர்த்தர் நமது
ஜனத்தையும்...
தம்முடைய ஸ்தானாபதிகளை
ஏற்கெனவே அனுப்பினார்
2 நாளாகமம் 36:15
தேவனுடைய எச்சரிப்புகள் நம்மை தண்டிப்பதற்காக அல்ல பாதுகாக்கவே.
Our Daily Bread Topics:
odb