100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போரின்போது, Y.M.C.A. சார்பாக பிரிட்டனின் நேச நாடுகளின் படைவீரர்களுக்கு போதகராகப் பணியாற்ற 41 வயதுடைய ஆஸ்வால்டு சேம்பர்ஸ் எகிப்திற்கு சென்றார். கெய்ரோவிற்கு 6 மைல் தூரம் வடக்கே இருந்த செய்டூன் முகாமில் பணி செய்ய அவருக்கு உத்தரவிடப்பட்டது. அங்கு தங்கி இருந்து முதல் நாள் இரவு, அதாவது 1915, அக்டோபர் 27ம் தேதி அன்று “இங்குள்ள படைவீரர்கள் உள்ள பகுதி பாலைவனம் போன்று உள்ளது. தேவனுக்கென்று பணிசெய்ய மிகச்சிறந்த சந்தர்ப்பம். இது போன்ற சூழ்நிலையில் நான் ஒருபொழுதும் பழக்கப்பட்டதில்லை. தேவன் செய்யப்போகிற புதிய காரியங்களைக் குறித்து மிக ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறேன்” என்று அவருடைய நாட்குறிப்பேட்டில் எழுதினார்.
“உன் சுயபுத்தியின் மேல் சாயாமல்… உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்ற நீதிமொழி 3:5-6ல் கூறப்பட்ட வார்த்தைகளை சேம்பர்ஸ் நம்பி அதை செயல்படுத்தி வந்தார்.
இது நமக்கு ஆறுதலாகவும், சவாலாகவும் உள்ளது. ஓவ்வொருநாளும் தேவன் நம்மை நடத்துவார் என்பதில் பாதுகாப்பு உள்ளது. ஆனால் தேவன் அவரது நேரத்தில் அவரது திட்டத்தின்படி வழியை மாற்றி நடத்தும் பொழுது, அவரை எதிர்க்குமளவிற்கு நாம் நமது சொந்த திட்டங்களால் முழுமையாக ஈர்க்கப்படக் கூடாது.
“நாம் எங்கே வைக்கப்பட வேண்டுமென்றோ அல்லது தேவன் இந்த நோக்கத்தைத்தான் நமக்காக வைத்துள்ளார் என்று நாமே முன்னதாகவே எண்ணிக் கொள்ளவோ நமக்கு எந்த விதமான உரிமையும் இல்லை” என்று சேம்பர்ஸ் கூறியுள்ளார். “தேவன் நம்மை எங்கு வைத்திருந்தாலும், எந்தப் பணியைக் கொடுத்தாலும், நாம் முழு இருதயத்தோடு கூடிய அர்ப்பணிப்போடு நமக்கு நியமிக்கப்பட்ட பணியைச் செய்வதே நமது ஓரே நோக்கமாக இருக்க வேண்டும்.”