ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக ஒரு புகைவண்டியில் அமர்ந்திருந்தேன். திடீரென நான் சரியான வண்டியில் தான் உட்கார்ந்துள்ளேனா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது. அந்த வழித்தடத்தில் நான் இதற்கு முன் பயணம் செய்தது கிடையாது அத்தோடு அந்த வழித்தடத்தைப் பற்றி யாரிடமும் கேட்கவுமில்லை. இறுதியாக சந்தேகம் அதிகரித்ததால் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கி விசாரித்தேன்… நான் சரியான புகை வண்டியில்தான் இருந்தேன் என்பதைக் கேட்டு அறிந்துகொண்டேன்.
அந்த நிகழ்ச்சி நமது வாழ்க்கையில் சந்தேகம் எப்படி நமது நம்பிக்கையையும், மன உறுதியையும் குலைத்துப்போடுகிறதென்பதை நினைப்பூட்டியது. ஒரு முறை எனக்கு எனது இரட்சிப்பின் நிச்சயம் குறித்து போராட்டம் ஏற்பட்டது. ஆனால் தேவன் எனது சந்தேகத்தைவிட்டு வெளியே வர எனக்கு உதவி செய்தார். பின்னால் எனது மனந்திரும்புதலைப்பற்றியும், நான் மோட்சம் செல்வேன் என்ற நிச்சயத்தைப்பற்றியும் பகிர்ந்துகொண்ட பொழுது, “நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்களென்றும், மோட்சத்திற்கு செல்லவிருக்கிறீர்களென்றும் எப்படி உங்களால் நிச்சயமாக கூற இயலும்?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார். நான் மன உறுதியோடு ஆனால் மனத்தாழ்மையுடன் தேவன் எனக்கு சுட்டிக்காட்டி உதவி செய்த “உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும்… உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்” (1யேவான் 5:13) என்ற வசனத்தைக் கூறினேன்.
தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதின் மூலம் ஏற்கனவே நமக்கு நித்திய ஜீவன் கிடைத்துவிட்டது: “தேவன் நமக்கு நித்திய ஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது” (வச.11) இந்த நிச்சயம் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்தி, நாம் நம்பிக்கை இழந்து மனம் சோர்ந்திருக்கும்பொழுது, நம்மை உற்சாகப்படுத்தி சந்தேகப்படும் நேரங்களில் நமக்கு தைரியத்தைக் கொடுக்கிறது.
நாம் அறிந்து கொள்ளலாம்
வாசிப்பு: 1 யோவான் 5:10-15 | ஓராண்டில் வேதாகமம்: ஏசாயா 11-13 & எபேசியர் 4
உங்களுக்கு நித்தியஜீவன்
உண்டென்று நீங்கள் அறியவும்...
உங்களுக்கு இவைகளை
எழுதியிருக்கிறேன். (வச.13)
தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவுகூருவது
நமது சந்தேகங்களை அழித்து விடுகிறது.
Our Daily Bread Topics:
odb