வகை  |  odb

இலகுவானதும், கடினமானதும்

மார்க் ஒரு உற்சாகமான இளம் போதகர். ஒரு காலை வேளையில், தனது மகன் ஓவனுடன் பந்து விளையாடுகையில், ஓவன் தடுமாறி விழுந்து மரித்தான். நிலைகுலைந்து போன மார்க், இன்றும் அதற்காக வேதனைப்படுகிறார். ஆனால், அந்த வலியினூடே மிகுந்த மனதுருக்கமுடைய போதகரா க மாறியுள்ளார். மார்க்கின் துயரத்தில் பங்கேற்ற நான், “தேவன் ஒருவனை ஆழமாக காயப்படுத்துமட்டும், அவன் அவரால் அபிரிதமாக ஆசிர்வதிக்கபடுது சந்தேகமே " என்று ஏ.டபல்யு.டோசர் குறிப்பிட்டிருந்த தனது புரிதலுக்கு, மார்க்கின் சோதனையும் ஒரு சான்றோ என்று வியக்கிறேன்.

ஆனால், அது உண்மையில் அவ்வளவு எளிதல்ல. இஸ்ரவேலர்களின் பயணத்தை கவனித்தால், தேவனின் அறிவதர்கரிய வழிமுறைகளில் சிலவற்றைக் கற்றுக்கொள்ளலாம். புதிதாய் தோன்றிய தேசத்திற்குத் தேவன், “ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி" (யாத்திராகமம் 13:17) எகிப்திலிருந்து எளிதான பாதையில் அழைத்து வந்தார். எனினும் சில வசனங்கள் தள்ளி, தேவன் மோசேயிடம் பார்வோன் தனது இராணுவத்தோடு இவர்களை பின்தொடரும்படிக்கு பாளயமிறங்க சொன்னார் (14:1-4). பார்வோன் இந்த பொறியில் வீழ்ந்தான். இஸ்ரவேலர்கள் மிகவும் பயந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் (வ.10). “கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். நீங்கள் சும்மாயிருப்பீர்கள்” (வ.14) என்று மோசே அவர்களைத் திடப்படுத்தினான்.

தேவன் தமது ஜனங்களை வளர்க்கவும், தமக்கு மகிமையுண்டாக்கவும்; கடினம் மற்றும் எளிதுமான இரண்டு பாதைகளையும் உபயோகிக்கிறார். தேவன், "நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன்" (வ.4) என்று வாக்குரைத்தார். இஸ்ரவேலர் அவ்வாறே செய்தனர். நாமும் அவ்வாறே செய்யலாம். எளிதோ, கடிதோ ஒவ்வொரு சோதனையினூடே தேவன் நமது விசுவாசத்தைக் கட்டுவிக்கிறார். வாழ்க்கையின் எளிதான காலத்தில், அவரில் இளைப்பாறுங்கள். வாழ்க்கையின் கடினமான நேரத்தில், அவர் உங்களைச் சுமக்கட்டும்.

தேவனோடு புதிய துவக்கம்

"உன் பாவமும் இயேசுவைச் சிலுவையில் அறைந்ததா?" டச்சு ஓவியர் ரெம்ப்ராண்ட் 1633 ஆம் ஆண்டு வரைந்த தலைசிறந்த படைப்பான "தி ரைசிங் ஆஃப் தி கிராஸ்" -இல் கேட்கும் கேள்வி இதுவே. அந்த ஓவியத்தின் மையத்தில்,  இயேசு சிலுவையில் உயர்த்தி பிடிக்கப்பட்டிருக்கிறார். நான்கு பேர் அவரை சிலுவையோடு தூங்குகிறார்கள். ஆனால் அதில் ஒருவர் இயேசுவைச் சுற்றி இருந்த வெளிச்சத்தில் நிற்கிறார். அவர் அணிந்திருந்த ஆடை வித்தியாசமாயிருந்தது; அவர் ரெம்ப்ராண்ட் வாழ்ந்த காலத்திலிருந்த ஆடையை அணிந்திருந்தார். ஓவியர் அடிக்கடி அணிந்த தொப்பியையும் அணிந்திருந்தார். அவரது முகத்தை உற்று நோக்கினால், ரெம்ப்ராண்ட் தன்னையும் அந்த ஓவியத்தில் இணைத்துள்ளார், அது "இயேசுவின் மரணத்திற்கு என் பாவங்களும் காரணம்" என்று சொல்லுவது போலிருந்தது.

ஆனால், அதில் தனித்து நிற்கும் இன்னொருவரும் இருக்கிறார். அவர் குதிரையில் இருக்கிறார், ஓவியத்திலிருந்து பார்வையாளர்களை நேரடியாகப் பார்க்கிறார். சிலர் இதை ரெம்ப்ராண்டின் இரண்டாவது சுய உருவப்படமாகப் பார்க்கிறார்கள், "நீங்கள் இன்னும் இங்கே வரவில்லையா?" என்று பார்வையாலே தன்னை கவனிக்கும் அனைவரையும் கேட்பது போல் உள்ளது.

பவுல் தன்னையே அங்குக் கண்டார். நாமும் நம்மைக் காணலாம், காரணம் இயேசு நமக்காகவும் பாடுபட்டு மரித்தார். ரோமர் 5:10 இல், பவுல் தன்னையும் நம்மையும் "தேவனுக்குச் சத்துருக்கள்" என்று குறிப்பிடுகிறார். ஆனால் நம்முடைய பாவங்கள் இயேசுவின் மரணத்திற்குக் காரணமாயினும், அவருடைய மரணம் நம்மைத் தேவனோடு ஒப்புரவாக்குகிறது: "நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்" (வ.8).

பாவமன்னிப்பு தேவைப்படும் பாவிகளாக ரெம்ப்ராண்ட் மற்றும் பவுலுடன் நாமும் நிற்கிறோம். தேவனுடனான புதிய ஆரம்பம் என்ற நமது ஆழ்ந்த தேவையை அவருடைய சிலுவையின் மூலம் இயேசு நமக்குப் பூர்த்தி செய்கிறார். இதை நமக்காக நாமே ஒருபோதும் செய்திட முடியாது.

தேவனோடு நடத்தல்

பல ஆண்டுகளாக, உடற்பயிற்சி வல்லுநர்கள் இருதய ஆரோக்கியத்திற்காக ஓடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் சமீபத்திய அறிவியல் ஆய்வுகள், தினசரி நடைப்பயிற்சியும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்துள்ளது. தேசிய சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, "ஒரு நாளைக்கு 8,000 அல்லது அதற்கு மேற்பட்ட அடிகள் நடக்கும் பெரியவர்கள், ஒரு நாளைக்கு 4,000 அடிகள் மட்டுமே நடப்பவர்களைக் காட்டிலும் அடுத்த பத்தாண்டுகளில் மரிக்கும் அபாயத்தைக் குறைத்துள்ளனர்". நடப்பது நமக்கு நல்லது.

வேதாகமம் முழுவதும், நடப்பது என்பது தேவனுடனான ஐக்கியத்திற்கு ஒரு உருவகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆதியாகமம் 3 இல், தேவன் ஆதாம் மற்றும் ஏவாளுடன் "பகலில் குளிர்ச்சியான வேளையிலே" (வ.8) உலாவினதை பற்றி நமக்குக் கூறப்பட்டுள்ளது. ஆதியாகமம் 5, ஏனோக்கின் கதையைப் பகிர்கிறது, அவர் முந்நூறு வருஷம் தேவனோடே நடந்தார் (வ.22). ஒரு நாள் ஏனோக்கு தனது சிருஷ்டிகருடன் செலவழித்த வழக்கமான நேரம், அவரை நேரடியாகத் தேவனுடன் இருக்கும்படி அழைத்துச் சென்றது (வ.23). ஆதியாகமம் 17ல், தேவன் ஆபிராமுடன் தம் உடன்படிக்கையைப் புதுப்பித்தபோது, ​​அவருக்கு முன்பாக உத்தமமாக நடக்க அழைத்தார் (வ.1). யாக்கோபு தனது வாழ்வின் இறுதியில், தேவனைத் தனது மேய்ப்பராக விவரித்தார் மற்றும் உண்மையுடன் நடந்த (48:15) தனது முற்பிதாக்களை பற்றிப் பேசினார். புதிய ஏற்பாட்டில், பவுல் நமக்கு "ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்" (கலாத்தியர் 5:16) என்று அறிவுறுத்தினார்.

ஏனோக்கு மற்றும் ஆதியாகமத்தில் உள்ள முற்பிதாக்களைப் போல, நாமும் தினமும் தேவனுடன் நடக்க முடியும். இயேசுவிடம் நம் வாழ்க்கையை ஒப்படைத்து, பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்படுவதன் மூலம் நாம் அவ்வாறு செய்கிறோம். அதுவே மெய்யன் ஆரோக்கியத்திற்கான வழி.

உங்கள் நடை எவ்வாறுள்ளது?

 

சத்தியத்தைத் தேடுதல்

தாங்கள் செய்வது தவறாயினும், மக்கள் தாங்கள் செய்வதே சரியென்று என்று முழுமையாக நம்புவதின் காரணத்தை ஆராய்கையில்; ஆசிரியர் ஜூலியா கேலெஃப், இது நம்மிலிருக்கும் ஒரு "சிப்பாய் மனநிலையுடன்" தொடர்புடையது என்றும், ஆகவே நாம் ஏற்கனவே நம்பும் ஒன்றுக்கு எதிரானவற்றிலிருந்து அதனை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்துகிறோம் என்றும் பரிந்துரைக்கிறார். மாறாக, ஒரு "தேடுகிற மனப்பான்மை" தான் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கேலெஃப் வாதிடுகிறார். இதன்மூலம் ஒருவர் தன் நம்பிக்கைக்கு எதிரானவற்றைப் புறக்கணிப்பதற்கு மாறாக, முழுமையான உண்மையை ஆராய்கிறார். ஆகையால், ஒரு காரியம் உங்களுக்கு ஏற்றதாகவோ, சௌகரியமானதாகவோ அல்லது இனிமையாகவோ இல்லாவிடினும் உள்ளதை உள்ளபடி துல்லியமாக உங்களால் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கண்ணோட்டத்தை உடையவர்கள், புரிதலில் தொடர்ந்து வளர்வதற்கேற்ற மனத்தாழ்மையைக் கொண்டுள்ளனர்.

கேலெஃபின் இந்த புரிதல், "யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்" (யாக்கோபு 1:19) என்று விசுவாசிகள் ஒரே மாதிரியான மனநிலையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற யாக்கோபின் ஊக்கத்தை நினைவூட்டுகிறது. அவசரப்பட்டு ஆற்றும் எதிர்வினைகளால் உந்தப்படுவதற்குப் பதிலாக, மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாது (வ.20) என்பதை நினைவில் கொள்ளுமாறு இயேசுவின் விசுவாசிகளை யாக்கோபு வலியுறுத்துகிறார். அவருடைய கிருபைக்குத் தாழ்மையுடன் கீழ்ப்படிந்தால் மட்டுமே ஞானத்தில் வளர முடியும் (வ.21; தீத்து 2:11-14 ஐப் பார்க்கவும்).

நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் நம்மையல்ல, தேவனுடைய கிருபையையே  சார்ந்தது என்பதை நினைவில் கொள்ளுகையில்,  நாம் செய்வது தான் சரி என்ற மனநிலையை நாம் கைவிட்டுவிடுவோம். மேலும், நாம் எவ்வாறு வாழவேண்டும் என்றும் பிறரிடம் எவ்வாறு உண்மையான கரிசனையோடு இருக்க வேண்டும் என்பதற்கு அவருடைய வழிநடத்துதலை சார்ந்துகொள்ளலாம் (யாக்கோபு 1:25-27).

தேவன் செயல்படுவார்

கடின உழைப்பாளியான குமாஸ்தா எரின், எப்போதும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்தாள். ஆனால் அவர் நேர்மையற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பின்னர், எரின் விசாரணையின் போது கட்டாய விடுப்பில் வைக்கப்பட்டார். எதிர்ப்பை கண்டு, ராஜினாமா செய்யவும் யோசித்தாள், ஆனால் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டாள். "ராஜினாமா செய்தால் நீங்கள் குற்றவாளியாக எண்ணப்படுவீர்கள்" என்று அவளிடம் கூறப்பட்டது. எனவே எரின் தரித்து, தனக்கு நீதி கிடைக்கத் தேவனிடம் ஜெபித்தாள். அதேபோல, சில மாதங்கள் கழித்து, குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டாள்.

பவுல் தன்னை மிஷனரி குழுவிலிருந்து நீக்கியபோது, யோவனென்னும் மாற்கும் இவ்வாறே உணர்ந்திருக்கலாம். உண்மையில், அந்த வாலிபன் அவர்களை முன்னதாக பிரிந்திருந்தான் (அப் 15:37-38). ஆனால், ஒருவேளை அதற்காக அவர் மனம் வருந்தியிருக்கலாம், மேலும் இந்த முறை குழுவில் இணைவதை எதிர்பார்த்திருப்பார். அவர் பவுலால் தவறாக நியாயந்தீர்க்கப்பட்டதாக உணர்ந்திருக்க வேண்டும்; பர்னபா மட்டுமே அவரை நம்பினார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, பவுல் தனது கருத்தை மாற்றிக் கொண்டார். அவர், "மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன்." (2 தீமோத்தேயு 4:11) என்றார். யோவனென்னும் மாற்கு, தனது நற்பெயர் மீண்டதில் நிம்மதி அடைந்திருக்க வேண்டும்.

நாம் தவறாக நியாயந்தீர்க்கப்படும்போது, ​​நாம் எப்படி உணர்கிறோம் என்பதை இயேசு புரிந்துகொள்கிறார் என்பதை நினைவில் கொள்வோமாக. அவர் பாவம் செய்யவில்லை ஆனால் பாவியென்று தீர்க்கப்பட்டார். அவர் தேவனின் குமாரனாக இருந்தபோதும், ஒரு சாதாரண குற்றவாளியை விட மோசமாக நடத்தப்பட்டார். ஆனால் அவர் தனது பிதாவின் சித்தத்தைத் தொடர்ந்து செய்தார், அவர் நியாயப்படுத்தப்படுவார் மற்றும் நீதிபரரென்று  காட்டப்படுவார் என்பதை அறிந்திருந்தார். நீங்கள் தவறாக  நியாயந்தீர்க்கப்பட்டிருந்தால், முடங்கிவிடாதீர்கள்; தேவன் அறிவார், அவருடைய நேரத்தில் செயல்படுவார்.