தாழ்மையைத் தரித்தல்
"ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி "அண்டர்கவர் பாஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார். மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.
நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி, கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.
இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (2.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

கூடுதல் கிருபை தேவை
திருச்சபையை ஒரு விசேஷ நிகழ்ச்சிக்காக நாங்கள் அலங்கரித்தபோது, அந்தப் பொறுப்பில் இருந்த பெண் என் அனுபவமின்மையைப் பற்றிக் கூறினார். அவள் சென்ற பிறகு, இன்னொரு பெண் என்னிடம் வந்தாள்: "அவளைப் பற்றி கவலைப்படாதே. அவளை "கூ.கி.தே" என அழைக்கிறோம்; அதாவது "கூடுதல் கிருபை தேவை" " என்றாள்.
நான் சிரித்தேன். விரைவில் நான் ஒவ்வொரு சச்சரவின் போதும் அந்த வாக்கிய சுருக்கத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தேன். பல வருடங்கள் கழித்து, அதே திருச்சபையில் அமர்ந்து "கூ.கி.தே”வின் இரங்கலுரையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவள் எவ்வாறு பிறர் காணா வண்ணம் தேவனுக்கு சேவை செய்தாள், மற்றவர்களுக்கு தாராளமாக கொடுத்தாள் என்பதை அச்சபையின் போதகர் பகிர்ந்து கொண்டார். அவளையும் மற்றவர்களையும் கூ. கி. தே என நியாயந்தீர்த்து, முத்திரை பதித்து, கிசுகிசுத்ததற்காக என்னை மன்னிக்கும்படி தேவனிடம் கேட்டேன். கடந்த காலத்தில், எல்லாவற்றிற்கும் மேலாக மற்ற விசுவாசிகளைப் போல எனக்கும் கூடுதல் கிருபை தேவைப்பட்டது.
கோபாக்கினையின் எபேசியர் 2ல் அப்போஸ்தலன் பவுல், அனைத்து விசுவாசிகளும் ”சுபாவத்தினாலே
மற்றவர்களைப்போலக் பிள்ளைகளாயிருந்தோம்". (2:3) ஆனால், தேவன் நமக்கு இரட்சிப்பாகிய பரிசைக் கொடுத்திருக்கிறார், ”ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல". (2:9) என்கிறார். இந்த வாழ்நாள் பயணத்தின் போது நாம் ஒவ்வொரு கணமும் தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நம் குணத்தை மாற்றியமைக்கவும், அதனால் கிறிஸ்துவின் தன்மையை நாம் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒவ்வொரு விசுவாசிக்கும் கூடுதல் கிருபை தேவைப்படுகிறது. ஆனால், தேவனுடைய கிருபை போதுமானது என்பதால் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம் (2 கொரிந்தியர் 12:9).

சரியான ஒன்றைச் செய்வது
"ஜேசன்"என்ற கைதியின் கடிதம் என்னையும் என் மனைவியையும் ஆச்சரியத்தில்ஆழ்த்தியது. நாங்கள்மாற்றுத்திறனாளிகளுக்குஉதவுவதற்காக நாய்க்குட்டிகளை, "வளர்ப்பு" நாய்களாக பயிற்றுவிக்கிறோம். அத்தகைய ஒரு நாய்க்குட்டி அடுத்த பயிற்சி கட்டத்திற்கு தேர்ச்சி பெற்றது. அது சிறை கைதிக்களால் பயிற்றுவிக்கப்பட்ட நாயாகும். ஜேசன் எங்களுக்கு எழுதிய இக்கடிதம், அவரது கடந்த காலத்தின் வேதனையை வெளிப்படுத்தியது. பின்னர் அவன் கூறினான், "ஸ்னிக்கர்ஸ் நான் பயிற்றுவித்த பதினேழாவது சிறந்த நாய். அது என்னை நிமிர்ந்து பார்த்த போது, இறுதியில் நான் சரியான ஏதோ ஒரு காரியத்தைச் செய்தது போல் உணர்ந்தேன்".
மனவருத்தம் என்பது ஜேசனுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும்தான். யூதாவின் ராஜாவான மனாசேக்கு அனைத்தும் ஏராளம் இருந்தது. 2 நாளாகமம் 33, அவனுடைய சில அட்டூழியங்களை கோடிட்டுக் காட்டுகிறது: புறமத தேவர்களுக்கு வெளிப்படையாகவே பாலியல் சார்ந்த பலிபீடங்களைக் கட்டுதல் (வ. 3), சூனியம் செய்தல் மற்றும் தனது சொந்தக் குழந்தைகளை பலியிடுதல் (வ. 6). அவன் இந்த மோசமான பாதையில் முழு தேசத்தையும் வழிநடத்தினான் (வச. 9).
"கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள்" (வ.10) இறுதியில், தேவன் அவனது கவனத்தை திருப்பினார். பாபிலோனியர்கள் படையெடுத்து, ”அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்” (வ.11), ”தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான்” (வ.12) தேவன் அவனுக்கு செவிசாய்த்தார், அவனை மீண்டும் ராஜாவாக மாற்றினார். மனாசே புறமத நடைமுறைகளுக்குப் பதிலாக, உண்மையான ஒரே தேவ வழிபாட்டைத் துவங்கினான் (வ. 15-16).
உங்கள் மனவருத்தங்கள் உங்களை மேற்கொண்டு விடும் போல் தோன்றுகிறதா? இப்போதும் தாமதமாகவில்லை. மனந்திரும்புதலின் தாழ்மையான ஜெபம் செய்யுங்கள். தேவன் அதைக் கேட்பார்.

எனது நோக்கம் என்ன?
"நான் மிகவும் பயனற்றவனாக உணருகிறேன்" என ஹெரால்டு கூறினார். "விதவைகள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் சொந்த குடும்பங்களுடன் மும்முரமாக இருக்கிறார்கள், சுவரில் நிழல்களைப் பார்த்துக்கொண்டு அமைதியான மதியங்களைச் செலவிடுகிறார்கள்" என அவர் தனது மகளிடம் அடிக்கடி கூறுவார்."நான் வயதாகிவிட்டேன், நிறைவான வாழ்க்கையையும் வாழ்ந்து விட்டேன். இனி எனக்கு எந்த நோக்கமும் இல்லை. தேவன் என்னை எந்த நேரத்திலும் தம்மிடத்திற்கு அழைத்துச் செல்வார்" என்பார்.
இருப்பினும், ஒரு பிற்பகல் உரையாடல், ஹெரால்ட்டின் மனதை மாற்றியது. "என் பக்கத்து வீட்டுக்காரருக்கு, அவருடைய குழந்தைகளுடன் சில பிரச்சனைகள் இருந்தது. அதனால் நான் அவருக்காக ஜெபித்தேன்" என்று ஹெரால்டு கூறினார். "பின்னர், நான் அவருடன் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்". அப்பொழுதுதான் என் வாழ்க்கைக்கு இன்னும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்! இயேசுவைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்கும் வரை, நான் அவர்களுக்கு இரட்சகரைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றார்.
ஹெரால்டு தனது விசுவாசத்தை எப்போதும் போன்ற சாதாரண சந்திப்பில் பகிர்ந்தபோது, அவரது அயலகத்தாரின் வாழ்கை மாறியது. 2தீமோத்தேயு 1 ல், அப்போஸ்தலனாகிய பவுல் இன்னொருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கு, தேவனால் பயன்படுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பற்றி குறிப்பிடுகிறார்:
பவுலின் இளம் சக ஊழியனான தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அவரது பாட்டி லோவிசாள் மற்றும் தாயார் ஐனிக்கேயாள் ஆகியோர் "மாயமற்ற விசுவாசத்தை" கொண்டிருந்தனர் (வ.5) எனக் காண்கிறோம். ஒரு சாதாரண குடும்பத்தில் அன்றாட நிகழ்வுகள் மூலம், இளம் தீமோத்தேயு ஒரு மாயமற்ற விசுவாசத்தைக் கற்றுக்கொண்டார். அவனுடைய வள வளர்ச்சி, இயேசுவின் உண்மையுள்ள சீஷனாகவும், இறுதியில் எபேசு தேவாலயத்தின் தலைவனாக அவனுடைய ஊழியத்தை வடிவமைத்தது.
நம்முடைய வயது, பின்னணி அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும், இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்ற நோக்கம் நமக்கும் உண்டு

ஜெபமும், மாற்றமும்
1982 ஆம் ஆண்டில், போதகர் கிறிஸ்டியன் ஃபூரர் ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் செயின்ட் நிக்கோலஸ் தேவாலயத்தில் திங்கட்கிழமை ஜெபக்கூட்டங்களைத் தொடங்கினார். பல ஆண்டுகளாக உலகளாவிய வன்முறை, அடக்குமுறை மற்றும் கிழக்கு ஜெர்மன் ஆட்சியின் நடுவிலும் தேவனிடம் சமாதானம் வேண்டி ஒரு சிலர் கூடி ஜெபித்தனர். கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தேவாலயங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த போதிலும், சபை வாசலுக்கு வெளியே வெகுஜனக் கூட்டம் வரும் வரை, அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அக்டோபர் 9, 1989 அன்று, எழுபதாயிரம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து, அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். எந்த கலவரத்திற்கும் பதிலடி கொடுக்க ஆறாயிரம் கிழக்கு ஜெர்மன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் வரலாற்றாசிரியர்கள் இந்நாளை ஒரு வரலாற்றுச் சிறப்பாகவே கருதுகின்றனர். ஒரு மாதம் கழித்து, பெர்லின் சுவர் இடிந்து விழுந்தது. பெரிய மாற்றம் ஜெபக்கூட்டத்துடன் தொடங்கியது. நாம் தேவனிடம் திரும்பி, அவருடைய ஞானத்தையும், பலத்தையும் நம்பத் தொடங்கும் போது, விஷயங்கள் பெரும்பாலும் மாறவும், மாற்றி அமைக்கப்படவும் தொடங்குகின்றன. இஸ்ரவேலைப் போலவே, "[நம்] துன்பத்தில் கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது," நம்முடைய மிக மோசமான இக்கட்டான நிலைகளை, ஆழமாக மாற்றியமைக்கவும், நம்முடைய மிகவும் வேதனையான கேள்விகளுக்கு பதிலளிக்கவும் கூடிய தேவனை நாம் கண்டு கொள்வோம் (சங்கீதம் 107:28).
தேவன் "கொந்தளிப்பை அமர்த்துகிறார்", "அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும்" மாற்றுகிறார் (வச. 29,35). நாம் யாரிடம் ஜெபிக்கிறமோ, அவரே நமக்கு விரக்தியிலிருந்து நம்பிக்கையையும், அலங்கோலத்திலிருந்து அழகையும் கொண்டு வருகிறவர்.
ஆனால் தேவன்தான் (அவரது காலத்தில், நம்முடையது அல்ல) மாற்றத்தை ஏற்படுத்துகிறவர். அவர் செய்யும் மறுரூபமாக்கும் பணியில் நாம் எவ்வாறு பங்கு கொள்கிறோம் என்பதே ஜெபம்.