வகை  |  odb

தேவனின் இரக்கத்தைப் பிரதிபலித்தல்

ரஷ்யாவுடனான மூன்று மாத குளிர்காலப் போரில் (1939-1940) பின்லாந்தைச் சேர்ந்த ஒரு வீரர் போர்க்களத்தில் காயமடைந்து கிடந்தார். ஒரு ரஷ்ய வீரர் தனது துப்பாக்கியை அவருக்கு நேரே நீட்டியபடியே அவர் அருகே சென்றார். காயமடைந்தவர், தான் மரிக்கப்போவதில் உறுதியாக இருந்தார். இருப்பினும், ரஷ்யர் ஒரு மருத்துவப் பொருட்கள் கொண்ட பெட்டியை அவரிடம் கொடுத்தார், அது அவரது உயிரைக் காப்பாற்றியது. ஆச்சரியப்படும்படி, முன்னர் காயமடைந்த இந்த வீரர் பின்னர் இதேபோன்ற சூழ்நிலையில் தன்னைக் கண்டார், கதாபாத்திரங்கள் மட்டுமே தலைகீழாக மாறி இருந்தது; ஒரு ரஷ்ய வீரர் காயமடைந்து உதவியற்ற நிலையில் போர்க்களத்தில் கிடக்க. இப்போது காயமடைந்த எதிரிக்கு உதவ இவருக்கு இப்போது வாய்ப்பு கிடைத்தது.

இயேசுவானவர் நம் வாழ்க்கைக்கு மையமானதும் வழிகாட்டுவதுமான ஒரு  நியமத்தைக் கொடுத்தார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்” (மத்தேயு 7:12). விசுவாசிகள் இந்த ஒரு எளிய கொள்கையைக் கடைப்பிடித்தால், நம் உலகம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ? நாம் அனைவரும் இயேசுவின் ஞான ஆலோசனைக்குக் கீழ்ப்படிந்தால் எவ்வளவு அடக்குமுறை முடிவுக்கு வரும் என்று கணிக்க முடிகிறதா? அவர் நம்மை வழிநடத்தினால் மாத்திரமே, நாம் பெறுவோம் என்று நம்புகிற அதே இரக்கத்தையும் கருணையையும்  நாம் பிறருக்கும் கொடுப்போம். நாம் பிறருக்கு "நல்ல ஈவுகளை" கொடுக்கும்போது, ​​தாம் நேசிக்கிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுக்கும் பரலோகத்திலிருக்கிற நமது பிதாவின் (வ.11) இருதயத்தையே பிரதிபலிக்கிறோம்.

பிறரை வெறும் சத்துருக்களாகவோ அல்லது அந்நியர்களாகவோ அல்லது உடைமைகளுக்காகவும் வாய்ப்புகளுக்காக நாம் போட்டியிடும் நபர்களாகவோ பார்க்காமல் இருப்பது அவசியம். மாறாக, நம்மைப்போன்றே அவர்களுக்கும் வேண்டிய கருணை மற்றும் இரக்கத்தின் தேவையை நாம் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, ​​நமது அணுகுமுறையும் கண்ணோட்டமும் மாறும். பின்னர், தேவன் வழங்குவதற்கேற்ப  அவர் நமக்கு இலவசமாக அருளிய அன்பை நாம் அவர்களுக்கும் இலவசமாக அருள முடியும்.

பரிபூரணமான இரட்சகர்

வீட்டு மேம்பாடு நிகழ்ச்சி ஒன்றில், உட்புற வடிவமைப்பாளர் வீட்டின் புதிய குளியலறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைவினை பீங்கான் ஓடுகளைக் குறித்து பெரிதாய் பேசிக்கொண்டிருந்தார். அனைத்தும் ஒரே மாதிரியானவையாக வணிக ரீதியில் தயாரிக்கப்பட்ட ஓடுகளிலிருந்து வேறுபட்ட இந்த கைவினைப் பொருட்கள் "குறைகளோடு" இருந்தன. குறைபாடுகள் ஒவ்வொரு ஓடுக்கும் தனித்துவமான அழகைக் கொடுத்தன. பயன்பாட்டையும் கடந்து, இடத்திற்கு அழகையும் மெருகையும் சேர்த்தது.

எனக்கு மெருகு ​​அல்லது வசீகரம் குறித்து அவ்வளவாக தெரியாது, அதிலும் அதற்கு ஓடுகள் எப்படி நேர்மறையாக அல்லது எதிர்மறையாகப் பங்களிக்கக்கூடும் என்பதெல்லாம் எனக்குப் புரியாது. இன்னும் அந்த ஓடுகள் அபூரணமாக இருக்க, ​​இயேசுவானவர் மனித அவதாரத்தில் (அவர் ஒரு மனிதனாகப் பூமிக்கு வந்ததில்) முற்றிலும் பரிபூரணமாக இருந்தார். எபிரேயரின் எழுத்தாளர், “நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்” (எபிரெயர் 4: 15) என்று உறுதியளித்தார். இயேசு தம்முடைய பூமிக்குரிய பயணத்தின் போது எந்த நேரத்திலும் ஒரு பாவமான வார்த்தையைப் பேசவில்லை அல்லது ஒரு பாவச் செயலைச் செய்யவில்லை. அவர் முற்றிலும் பரிபூரணர்.

எபிரேயர் சொல்வது போல், இயேசுவில் "நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்" (வ.14) என்பதே நமக்கான ஊக்கம். ஏனென்றால் நாம் சகிக்கும் போராட்டங்களை அவர் புரிந்துகொண்டு அனுதாபப்படுகிறார். அவரும் அந்த நிலையிலிருந்து அதை அனுபவித்துள்ளார்; ஆனால் பூரணமாகவே இருந்தார். நம்முடைய பரிபூரணமான இரட்சகர் எல்லாவற்றிலும் நமக்கு உதவ முடியும்.

நேசிப்பதற்கே மணமுடித்தல்

ராதாவின் திருமணத்தில், அவளது தாயார் 1 கொரிந்தியரிலிருந்து ஒரு அழகான வேத வாக்கியத்தை வாசித்தார். வேதாகமத்தின் "அன்பின் அதிகாரம்" என்று அடிக்கடி அழைக்கப்படும் பதின்மூன்றாவது அதிகாரம் அந்த வைபவத்திற்கு ஏற்றதாக இருந்தது. “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது” (வ.4). இதைக் கேட்டவாறே, ​​அப்போஸ்தலனின்  அசைவுண்டாக்கும் இந்த வார்த்தைகளுக்குப் பின்பாக இருந்ததைத் தற்கால  மணப்பெண்களும் மாப்பிள்ளைகளும் அறிவார்களா என்பது கேள்விக்குறியே. பவுல் ஏதோவொரு காதல் கவிதையை எழுதவில்லை. அப்போஸ்தலன், பிளவுபட்ட சபையில் கொதித்தெழும் பிரிவினைகளை ஆற்றும் முயற்சியாகத் தனது கெஞ்சலையே எழுதினார்.

எளிமையாகச் சொன்னால், கொரிந்துவில் உள்ள தேவாலயம் "சீர்கெட்டிருந்தது" என்று அறிஞர் டக்ளஸ் ஏ. கேம்ப்பெல் கூறுகிறார்.  தவறான உறவுமுறை, விபச்சாரம் மற்றும் மூப்பர்களிடையே போட்டிமனப்பாண்மை போன்றவை தலைதூக்கும் பிரச்சனைகளில் சில. சபை மக்களிடையே சட்ட வழக்குகள் சர்வ சாதாரணம். ஆராதனைகள் பெரும்பாலும் குழப்பமாகவே இருந்தன, அந்நிய பாஷையில் பேசுபவர்கள் முதலிடம் பெறப் போட்டியிட்டனர், தீர்க்கதரிசனம் உரைப்பவர்களோ பிறரை ஈர்க்கவே தீர்க்கதரிசனம் கூறினர் (பார்க்க. 1 கொரிந்தியர் 14).

இந்தக் குழப்பத்தின் பின்பாக இருந்தது, "ஒருவருக்கொருவர் அன்பில் உறவாடுவதில் ஏற்பட்ட அடிப்படை தோல்வி" என்று காம்ப்பெல் கூறுகிறார். மேன்மையான வழியைக் காட்ட, பவுல் அன்பைப் பிரசங்கித்தார், ஏனென்றால் “அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்” (13:8).

பவுலின் அன்பான நினைவூட்டல்கள் நிச்சயமாக ஒரு திருமண வைபோகத்தை உற்சாகமூட்டும். அவைகள் நம் அனைவரையும் அன்பாயும் கனிவாயும் வாழ ஊக்குவிக்கட்டும்.

 

தேவனால் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை

“சில நேரங்களில் நான் ஏதோ கண்ணுக்கே தெரியாதவள் போல உணர்கிறேன்" விமலா தன் தோழியிடம் பேசும்போது இந்த வார்த்தைகள் காற்றில் ஊசலாடின. விமலாவை அவள் சிறு குழந்தைகளுடன் கைவிட்டு, அவளது கணவன் வேறொறுவளோடு போய்விட்டான். அவள், "நான் அவருக்கு என் வாழ்விலேயே சிறந்த ஆண்டுகளைக் கொடுத்தேன். இப்போது யாரேனும் என்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்றோ என்னை அறிவதற்கு நேரம் ஒதுக்குவார்களோ என்று எனக்குத் தெரியவில்லை" என்றாள்.

அவளுடைய தோழி பதிலளித்தாள்: "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு ஆறு வயதாக இருந்தபோது என் அப்பாவும் போய்விட்டார். அது எங்களுக்கு, குறிப்பாக அம்மாவுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் ஒரு இரவில் அவள் என்னைத் தூங்கவைத்த போது, நான் மறக்கவே இல்லாத ஒன்றைச் சொன்னால்: 'தேவன் தன் கண்களை மூடுவதேயில்லை'. நான் வளர்ந்த பிறகு, ​​தேவன் என்னை நேசிப்பதையும், எனக்கு எப்போதும் தூங்கும்போதும் கூட காவலாய் இருப்பதையும் அவள் எனக்குக் கற்பிக்க முயன்றதை விலக்கினாள்".

சீனாய் வனாந்தரத்தில் அலைந்து திரிந்த ஒரு சவாலான நேரத்தில் தமது ஜனங்களுடன் பகிர்ந்துகொள்ள மோசேக்குத் தேவன் அருளிய வார்த்தைகளை வேதாகமம் முன்வைக்கிறது: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே” (எண்ணாகமம் 6:24-26). இந்த ஆசீர்வாதமானது ஜனங்கள் மீது ஆசாரியர்களால் மொழியப்பட வேண்டும்..

யாராவது நம்மைப் பார்க்கிறார்களா அல்லது உண்மையிலேயே புரிந்துகொள்கிறார்களா என்று நாம் ஏங்குகிற நிலைமையான வாழ்க்கையின் வனாந்தரங்களில் கூட தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். தேவனின் தயவான அவரது பிரகாசிக்கும் முகமும் மாறிடாத அன்பும் அவரை நேசிப்பவர்களை நோக்கித் திரும்புகிறது, நம்முடைய வலியினிமித்தம், அவரை நம்மால் உணர முடியாவிட்டாலும் கூட, தேவனுக்கு மறைவானவர்கள் என்று யாரும் இல்லை.