
தேவனுடைய தோட்டம்
என் வீட்டின் கதவுக்கு வெளியில், அழகை நினைவுகூரும் விதத்திலும் வாழ்க்கையின் சொற்பத்தன்மையை நினைவுபடுத்தும் விதத்திலும் சில காரியங்கள் இருக்கிறது. கடந்த வசந்த காலத்தில், என் மனைவி நிலவு மலர்ச் செடிகளை அங்கே நட்டார். அதில் முழு நிலவை ஒத்த பெரிய வட்டமான வெள்ளை பூக்கள் பூப்பதால் அச்செடிக்கு அவ்வாறு பெயரிடப்பட்டது. அதில் பூக்கும் ஒவ்வொரு பூவும் இரவில் பூத்து, காலையில் சூரிய ஒளி அதின் மீது பட்ட மாத்திரத்தில் வாடிவிடும். மீண்டும் பூக்காது. ஆனால் அந்த செடியானது தொடர்ந்து பூக்களை உற்பத்திசெய்துகொண்டேயிருக்கிறது. அதின் பூக்கள் ஒவ்வொரு நாள் மாலையையும் அலங்கரிக்கிறது. ஒவ்வொரு நாளும் அப்பூக்களை கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதின் அழகை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
தற்காலிகமாய் உயிர்வாழும் இந்த பூக்கள் ஒரு வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துகிறது. ஏசாயா தீர்;க்கதரிசியின் வார்த்தைகளை இங்ஙனம் பேதுரு நினைவுகூருகிறார்: “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” (1 பேதுரு 1:23-25). ஆனாலும் தேவன் அவருடைய வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் நிறைவேற்றுவார் என்று அவர் உறுதிகூறுகிறார் (வச. 25).
இந்த தோட்டத்தில் பூத்த பூவைப் போன்று மனுஷனுடைய ஆயுசுநாட்களும் சொற்பமானவைகள். ஆனாலும் மனுஷனுடைய அந்த சொற்ப ஜீவியத்திலும் ஓர் அழகை நாம் பார்;க்கமுடிகிறது. இயேசுவின் நற்செய்தியின் மூலம், நாம் கடவுளுடன் ஒரு புதிய ஆரம்பத்தை உருவாக்குகிறோம், அவருடைய அன்பான பிரசன்னத்தில், நித்திய வாழ்க்கையின் வாக்குறுதியை நம்புகிறோம். நம்முடைய ஜீவியம் சொற்பமாயிருந்தபோதிலும் அவருக்கு நாம் துதி ஏறெடுப்போம்.

விசுவாச அடிகள்
மழைக்காடு ஒன்றின் மிக உயரமான இடத்திலிருந்து கம்பியில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி பயணிக்க திட்டமிட்டு நான் புறப்பட தயாரானபோது எனக்குள் பயம் பரவியது. நான் அதற்கான மேடையில் இருந்து குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அசம்பாவிதங்கள் நடந்துவிடுமோ என்ற என்னுடைய அச்சம் அதிகரித்தது. ஆனால் நான் முழு தைரியத்தையும் வரவழைத்துக்கொண்டு அதின் கயிற்று பிடிமானத்தை விடுவித்தேன். காட்டின் உச்சியில் இருந்து கீழே விழுந்து, பசுமையான மரங்கள் வழியாக நான் பயணித்தேன். காற்று என் தலைமுடியை வேகமாக வருடியது. என் கவலைகள் மெதுவாக மறைந்தன. காற்றின் புவியீர்ப்பு விசை என்னை இழுத்துச்சென்ற திசை வழியாக நான் நகர்ந்தபோது, அடுத்து நிறுத்தம் வந்துவிட்டது என்பதை என்னால் தெளிவாக பார்க்கமுடிந்தது. நான் பாதுகாப்பாக வந்துசேர்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.
அந்த கயிற்றின் மூலம் நான் ஏறெடுத்த அந்த அபாயகரமான பயணமானது, தேவன் நம்மை வழிநடத்திக் கொண்டுபோகும் புதிய சவால்களை எனக்கு நினைவுபடுத்தியது. நம்முடைய குழப்பமான சூழ்நிலைகளில் நாம் நம்முடைய “சுயபுத்தியின்மேல் சாயாமல்” தேவன் மீது நம்பிக்கை வைக்கும்படிக்கு வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (நீதிமொழிகள் 3:5). நம்முடைய சிந்தை பயத்தினாலும் சந்தேகத்தினால் நிறைந்திருக்கும்போது, நம்முடைய பாதைகள் தெளிவில்லாமலும், உடைக்கப்பட்டதாயும் தெரியும். ஆனால் நாம் நம்முடைய வழிகளை தேவனிடத்தில் ஒப்புவிக்கும் உறுதியான தீர்மானத்தை எடுக்கும்போது, “அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” (வச. 6). ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் நாம் நேரம் செலவழிக்கும்போது, விசுவாச அடிகளை எடுக்க நாம் உறுதிப்படுத்தப்படுகிறோம்.
நாம் தேவனை பற்றிக்கொண்டு, நம் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் நம்மை வழிநடத்த அனுமதிக்கும்போது வாழ்க்கையின் சவால்களில் சுதந்திரத்தையும் அமைதியையும் காணலாம்.

நம் அடைக்கலப் பட்டணம்
ஓய்வு பெற்ற ஆசிரியை டெபி ஸ்டீபன்ஸ் ப்ரோடர், முடிந்தவரை மரங்களை நடுவதற்கு மற்றவர்களை ஊக்கப்படுத்தினார். அதற்கு காரணம்? வெயிலின் உஷ்ணம். தட்பவெப்ப நிலை சார்ந்த காரணங்களை வைத்து பார்க்கும்போது, அமெரிக்காவில் பெரும்பாலானோரின் இறப்புக்கு உஷ்ணமே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. “நான் மரங்களை நடுவதிலிருந்து துவங்குகிறேன்” என்று அந்த பிரச்சனைக்கு அவர் தீர்வளிக்கிறார். சமுதாயத்தை வெயிலின் உஷ்ணத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு பெரிய தீர்வு மரங்களே. “இது சமுதாயத்தை அழகாக்கும் முயற்சியல்ல; மாறாக, வாழ்வா சாவா என்னும் போராட்டம்” என்று அவர் சொல்லுகிறார்.
நிழல் என்பது வெறும் புத்துணர்வூட்டக்கூடிய காரியம் மட்டுமல்ல; அது உயிரைக் காப்பாற்றக்கூடியது என்பதை 121ஆம் சங்கீதத்தை எழுதிய சங்கீதக்காரன் அறிந்திருந்தான். மத்திய கிழக்கில், சூரிய ஒளியின் ஆபத்து அதிகமாயிருக்கும். “பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை” (வச. 6) என்று தேவனுடைய பாதுகாப்பை விவரிக்கும் சங்கீதக்காரன், தேவனே நம்முடைய ஆபத்துக்காலத்தின் அடைக்கப்பட்டணம் என்பதை இந்த ஒப்புமையின் மூலம் விவரிக்கிறார்.
இந்த வேதவாக்கியம், கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு வலியோ வேதனையோ இல்லை என்று சொல்லவில்லை. “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவான் 16:33) என்றே இயேசு சொல்லுகிறார். ஆனால் நிழல் என்ற இந்த உருவகத்தின் மூலம், நம்முடைய பாதையில் குறுக்கிடுவது எதுவாக இருப்பினும் தேவன் நம்மை அதிலிருந்து பாதுகாக்கிறார் என்பதை உறுதுபடுத்துகிறது (சங்கீதம் 121:7-8). அந்த இடத்தில் அவரை நம்புவதின் மூலமும், அவருடைய அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்கமுடியாது என்று அறிவதின் மூலமும் நாம் இளைப்பாறுதலை அடையமுடியும் (யோவான் 10:28; ரோமர் 8:39).

சோதனைகள் மூலம் பெலப்படுத்தப்பட்டது
“நான் கண் பரிசோதனை செய்து கொண்டேன்” என்ற ஒரு ஸ்டிக்கரை என்னுடைய மகன் ஒரு கடிதத்தில் ஒட்டியிருந்தை பார்த்த மாத்திரத்தில் என் நினைவுகள் பின்நோக்கி சென்றன. அவனுடைய கண்ணில் அந்த மருத்தை ஊற்றிக்கொண்டு, அந்த ஸ்டிக்கரை அவன் பெருமையோடு ஒட்டிக்கொண்டதை பார்த்து நான் நெகிழ்ச்சியடைந்தேன். பலவீனமான கண் தசைகள் காரணமாக, அவன் நேர்த்தியாய் செயல்பட்ட தனது கண்ணின் மீது ஒவ்வொரு நாளும் பல மணிநேரங்களுக்கு ஒரு பேட்ச் அணிய வேண்டியிருந்தது. அவ்வாறு செய்வதின் மூலம் அவனுடைய பலவீனமான கண் சரியாகும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்கு அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. அவனுடைய பெற்றோர்களாகிய எங்களை ஆறுதலாகவும், ஒரு குழுந்தையின் விசுவாசத்தோடு தேவனையும் சார்ந்துகொண்டு அவன் இந்த சவால்களை ஒவ்வொன்றாய் மேற்கொண்டான். இந்த சவால்களின் மூலம் அவன் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக்கொண்டான்.
பாடுகளிலும் உபத்திரவத்திலும் நிலைநிற்கும் மக்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களினால் அடிக்கடி மாற்றத்தை அனுபவிக்கின்றனர். பவுல் அப்போஸ்தலர் அதற்கு ஒரு படி மேலே போய், “தேவமகிமையை அடைவோமென்கிற” நம்பிக்கையினாலே, உபத்திரவம் பொறுமையை கற்றுக்கொடுக்கிறது என்கிறார். உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும், உண்டாக்குகிறது என்கிறார் (ரோமர் 5:3-5). பவுல், கப்பல் சேதம் மற்றும் சிறைவாசங்கள் போன்ற சோதனைகளை அனுபவித்தவர். ஆகிலும் ரோமில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு அவர் சொல்லும்போது. “நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது” (வச. 5) என்கிறார். நாம் அவர் மீது நம்பிக்கை வைக்கும்போது, கிறிஸ்துவின் மீதான நம்முடைய நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் உறுதிப்படுத்துவார் என்று அப்போஸ்தலர் வலியுறுத்துகிறார்.
நீங்கள் எவ்விதமான போராட்ங்களை சகித்தாலும், தேவன் தன்னுடைய கிருபையையும் இரக்கத்தையும் உங்கள் மீது பொழியச் செய்வார். அவர் உங்களை நேசிக்கிறார்.
