
சாக்லேட் பனி துகள்கள்
சுவிட்சர்லாந்தின் ஓல்டன் நகரில் வசிப்பவர்கள், நகரம் முழுவதும் சாக்லேட் சீவல் மழை பெய்ததால் ஆச்சரியமடைந்தனர். அருகிலுள்ள சாக்லேட் தொழிற்சாலையில் காற்றோட்ட அமைப்பு பழுதடைந்ததால், கோகோவைக் காற்றில் பரப்பியது. சாக்லேட் நன்மையால் அப்பகுதி நிறைந்தது. சாக்லேட் விரும்பிகளின் கனவு நனவாகியது.
சாக்லேட் ஒருவரின் ஊட்டச்சத்துக்கு தேவையான சக்தியைத் தராது, ஆனால் தேவனோ இஸ்ரவேலருக்கு தேவையான ஊட்டச்சத்தான பரலோக மழையை அளித்தார். அவர்கள் பாலைவனத்தின் வழியாகப் பயணிக்கும்போது, எகிப்தில் விட்டுச் சென்ற பலவகையான உணவைப் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அதனால் தேவன் அவர்களை நிலைநிறுத்த, "நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்” (யாத்திராகமம் 16:4) என்றார். ஒவ்வொரு நாளும்
காலைப் பனி வற்றியபோது, ஒரு மெல்லிய துளி உணவு எஞ்சியிருந்தது. ஏறக்குறைய இரண்டு மில்லியன் இஸ்ரவேலர்கள் அன்றைய தினம் தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு சேகரித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டனர். நாற்பது வருஷங்கள் பாலைவனத்தில் அலைந்து திரிந்த அவர்கள், தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியாகிய மன்னாவால் போஷிக்கப்பட்டனர்.
மன்னாவைப் பற்றி அதிகக் குறிப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனாலும், "அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (வ.31). மன்னா என்பது சாக்லேட்டை போல சீரான ருசிகரமான உணவாக இல்லாமல் இருந்தாலும் தனது ஜனங்கள் மீதான தேவனின் முன்னேற்பாடு அப்பட்டமாக தெரிந்தது. மன்னா என்பது தன்னை "ஜீவ அப்பம்" (யோவான் 6:48) என வெளிப்படுத்திய இயேசுவை நமக்குச் சுட்டிக் காட்டுகிறது, "நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்” (வ. 51).

விளைவுகளைத் தாண்டிய நம்பிக்கை
நீங்கள் எப்போதாவது கோபத்தில் ஏதாவது செய்துவிட்டு பின்னர் வருந்தியுள்ளீர்களா? என் மகன் போதைக்கு அடிமையாகி அதனால் போராடிக் கொண்டிருந்தபோது, அவனது விருப்பங்களுக்கு எதிராக நான் சில கடுமையான விஷயங்களைச் சொன்னேன். என் கோபம் அப்பழக்கத்தை இன்னும் அவனுக்குள் அதிகரித்தது. ஆனால் இறுதியில் தன்னிடம் வாழ்க்கையையும், நம்பிக்கையையும் பற்றிப் பேசிய காலப்போக்கில் விசுவாசிகளைச் சந்தித்த பின்னர், அவ்வடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டான்.
விசுவாசத்திற்கு முன்மாதிரியாக இருந்தவர்களில் ஒருவரான மோசே கூட, கோபத்தில் ஒரு காரியத்தைச் செய்ததினால் பின்னர் வருந்த வேண்டியதாய் இருந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் தண்ணீர் பற்றாக்குறையில் இருந்தபோது, கசப்புடன் முறையிட்டார்கள்.
எனவே தேவன் மோசேக்கும், ஆரோனுக்கும் குறிப்பிட்ட அறிவுரைகளை வழங்கினார்: "அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்" (எண்ணாகமம் 20:8). ஆனால் மோசே அவ்வதிசயத்திற்கு காரணமான தேவனுக்கு கனத்தை கொடுக்காமல், தனக்கும் ஆரோனுக்கும் அதைக் கொடுத்து, கோபத்தை வெளிக்காட்டினார்:"அப்பொழுது மோசே அவர்களை நோக்கி:கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி" (வ.10). பின்னர் வெளிப்படையாக தேவனுக்கு அவர் கீழ்ப்படியாமல், "தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்” (வ.11). என்னதான் தண்ணீர் பொங்கி வழிந்தாலும், சோகமான பின் விளைவுகள் ஏற்பட்டது. தேவன் தம் மக்களுக்கு வாக்களித்த தேசத்தில் மோசேயும், ஆரோனும் நுழைய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அவர் இன்னும் இரக்கமுடையவராக இருந்தபடியால், மோசே தூரத்திலிருந்து அதைப் பார்க்க அனுமதித்தார் (27:12-13).
மோசேக்கு இரக்கமாய் இருந்தது போலவே, தேவன் இன்னும் கீழ்ப்படியாமையின் பாலைவனத்தில் இருக்கும் நமக்கு இரங்குகிறார். இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், அவர் நமக்கு மன்னிப்பையும், நம்பிக்கையையும் கிருபையாக அளிக்கிறார். நாம் எங்கே இருந்திருந்தாலும், என்ன செய்திருந்தாலும், நாம் அவரிடம் திரும்பும்போது, அவர் நம்மை ஜீவனுக்கேதுவாக நடத்திச் செல்வார்.

இயேசுவைப் போல நடவுங்கள்
"மாறுவேடத்தின் தலைவன்" என்பது இந்தோனேசியாவில் நீரிலும், உலகின் மிகப்பெரிய பவளப்பாறையிலும் வாழ்கிறது. இந்தப் போலியான ஆக்டோபஸ், மற்ற ஆக்டோபஸ்களைப் போலவே தன் தோலின் நிறத்தை அதன் சுற்றுப்புறத்திற்கேற்றவாறு மாற்றிக் கொள்ளும். புத்திசாலித்தனமான இந்த உயிரினம் அதின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுகையில்; விஷமுள்ள சிங்கமீன்கள், கொடிய கடல் பாம்புகள் ஆகியவற்றைப் போன்று, தன் வடிவம், நகர்வு மற்றும் குணாதிசியத்தை மாற்றிக் கொள்ளும்.
இந்தப் போலியான ஆக்டோபஸ் போலல்லாமல், இயேசுவின் விசுவாசிகளாகிய நாம் நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகில் தனித்து நிற்க வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள, நம் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களால் நாம் அச்சுறுத்தப்படும் போது, அவர்களுடன் இணைந்து செயல்பட நாம் தூண்டப்படலாம். ஆனால் நாம் அப்படிச் செய்யும் போது, தேவனைப் பின்பற்றுகிறவர்களாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், அப்போஸ்தலனாகிய பவுல், நம்முடைய வாழ்க்கை ஒவ்வொரு அம்சத்திலும் இயேசுவைப் பிரதிநிதித்துவப்படுத்தவேண்டும் என்று, "நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக (ரோமர்12:1) நம்மை உற்சாகப்படுத்துகிறார்.
ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று" நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் "இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கும்படி" (வச. 2) நமக்கு அழுத்தம் கொடுக்க முயலலாம். ஆனால் நாம்தேவனைப் பின்பற்றுகிறோம் என்பதை நம்வார்த்தையிலும், அதேபோல நாம் செயலிலும் காட்ட வேண்டும். நாம் வேதவசனங்களுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அன்பான குணாதிசயங்களை பிரதிபலிக்கும்போது, அதனால் வரும் பலன்கள், எந்த இழப்பைக் காட்டிலும் எப்பொழுதும் பெரிது என்பதை நம் வாழ்வில் நிரூபிக்க முடியும். இன்று நீங்கள் இயேசுவை எவ்வாறு பின்பற்றுவீர்கள்?

மாறா தேவன்
புகழ்பெற்ற உருவப்புகைப்படம் ஒன்று ஒரு நபரின் காலணிச்சுவடுகளை சாம்பல் பின்னணியில் காட்டியது. இது விண்வெளி வீரர் "பஸ் ஆல்ட்ரின்" 1969 இல் சந்திரனில் விட்டுச் சென்ற கால்தடமாகும். கால்தடங்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகும் மாறாமல் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சந்திரனில் காற்று மற்றும் நீர் இல்லாததால், எதுவும் அரிக்கப்படுவதில்லை. எனவே சந்திர நிலப்பரப்பில் என்ன நடந்தாலும் அது அப்படியே இருக்கும்.
தேவனின் நிலையான பிரசன்னத்தைப் பற்றி நினைக்கும் போது அது இன்னும் அற்புதமாக இருக்கிறது. யாக்கோபு எழுதுகிறார், "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது;அவரிடத்தில்யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை" (யாக்கோபு 1:17). அப்போஸ்தலன்
இதை நம்முடைய சொந்த போராட்டங்களின் அடிப்படையில் எழுதுகிறார்: "என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் " (வ. 2,3) ஏனென்றால் நாம் ஒரு உன்னதமான மற்றும் மாறாத தேவனால் நேசிக்கப்படுகிறோம்!
கஷ்டநேரங்களில், தேவனின் மாறா உதவியை நினைவில் கொள்ளலாம். ஒரு மகத்தான பாமாலையை நினைவுபடுத்தலாம்: "நீர் உண்மையுள்ளவர் என் அன்பின் தேவா!மாறாத கர்த்தரே நீர் என் பிதா! நீரே கர்த்தர், நீர் ஐஸ்வர்யமுள்ளவர், சதா காலமும் நீர் மாறாதவர்". ஆம், நம் தேவன் தம்முடைய நிரந்தர கால்தடத்தை இவ்வுலகில் விட்டுவிட்டார். அவர் எப்பொழுதும் நமக்காக இருப்பார். அவருடைய உண்மை பெரிது.
